Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீ டு விவகாரம்... பிரச்சனையை உடனே சொல்லணும்.. இல்லன்னா இதுதான் நிலைமை.. எதிர்நீச்சல் ஜான்சி ராணி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ஆக நடித்து வரும் காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் மற்றும் தன்னுடைய சமூக கருத்துக்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அப்போது காயத்ரியிடம் மீடு பிரச்சனை குறித்து கேள்வி கேட்ட போது அதற்கு எப்போதும் மீடு பிரச்சனை குறித்து பெண்களிடமே கேள்வி கேட்கிறீர்களே எந்த ஆண் நடிகர்களிடமாவது நீங்கள் எந்த பெண்ணிடமாவது தப்பாக நடந்து கொண்டீர்களா? என்று யாராவது கேள்வி கேட்க முடிகிறதா? அப்படி கேட்டால் தானே எல்லோருக்கும் பயம் வரும் என்று பேசி இருக்கிறார்.

அதோடு ஒரு சம்பவம் நடந்து பல வருஷமான பிறகு அதை வெளியே சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பிரச்சனை நமக்கு வந்தால் உடனே அதை வெளியே சொல்ல வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் பயம் வரும் என்றும் காயத்ரி பேசியிருக்கிறார். அவர் என்ன அட்வைஸ் கொடுத்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

 ethirneechal Serial Actress Gayathri Krishnan About Me To Affair interview

அந்த வகையில் நடிகை காயத்ரி ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளராக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு பல இசை வெளியீட்டு விழாக்களையும் பட ப்ரோமோஷன்களையும் தொகுத்து வழங்கி வந்த காயத்ரி கிருஷ்ணனுக்கு எப்படிவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் தான் அவருக்கு அயலி என்ற வெப் சீரிஸ் மூலமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த வெப் சீரிஸில் இவருடைய எதார்த்தமான நடிப்பு பெரிய அளவில் ரீச் ஆனது. அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் அறிமுகமானதுமே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அதிலும் குணசேகரனை ஆரம்ப காலகட்டத்தில் எதிர்க்கும் போல்டான கேரக்டராக ஜான்சி ராணி இருப்பது பலராலும் பாராட்டப்பட்டது.

ஜான்சி ராணி கேரக்டர் எப்போது எபிசோடில் வரும் என்று கூட பலரும் காத்திருந்தனர். ஆனால் சீரியலில் இப்போது கதையில் ஜான்சி ராணி குணசேகரன் முன்பு எதுவும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.... எது எப்படியோ அது சீரியல் படி நடந்து வருகிறது ஆனால் காயத்ரி கிருஷ்ணன் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் போல்டான கேரக்டராக தான் இருக்கிறார்.

எந்த இடத்திலும் தன்னுடைய தனித்துவம் மட்டும் அல்லாமல் தன்னுடைய தைரியத்தையும் விடாமல் காயத்ரி கிருஷ்ணன் இருந்து வருகிறார். அதன்படி தான் சமீபத்தில் கூட ஒரு பேட்டி ஒன்றில் கேள்வி கேட்ட தொகுப்பாளரை கதற விட்டிருக்கிறார். அதாவது காயத்ரி கிருஷ்ணனிடம் பல சீனியர் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் கொடுமைகள் குறித்து இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் அது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க, அதுபோல நீங்கள் சினிமா வாழ்க்கையில் ஏதாவது பாலியல் தொல்லைக்கு ஆளானீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு கோபமான காயத்ரி கிருஷ்ணன் எப்போதுமே நடிகைகளிடம் மட்டும் தான் நீங்க பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கிறீங்க, அதே ஒரு நடிகரிடம் நீங்க எந்த நடிகைக்காவது பாலியல் தொல்லை கொடுத்து இருக்கீங்களா? என்று கேள்வி கேட்டு இருக்கீங்களா? அப்படி கேட்டு பாருங்க இங்கே பாதி பிரச்சனை நடக்காது.

அதுபோல ஒரு பிரச்சனை நடந்தால் அதை உடனடியாக எல்லாருக்கும் தெரியப்படுத்தனும். அந்த நேரத்தில் நம்முடைய சூழ்நிலைக்காக அதை மூடி மறைத்து விட்டு பல வருடம் கழித்து அதை வெளியே சொல்லுவதால் எல்லோருக்கும் தான் பிரச்சனை. யாருக்கும் அதனால் எந்த தீர்வும் கிடைக்கப்போவது இல்லை. சிலர் பல வருடம் கழித்து எனக்கு ஒரு தயாரிப்பாளரால் பிரச்சனை ஒரு நடிகரால் பிரச்சனை என்று சொல்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய பெயரை தைரியமாக சொல்ல முடிவதில்லை. அப்போ எதற்காக சொல்ல வேண்டும்? இப்படி பெயர் குறிப்பிடாமல் ஒருவரை பற்றி சொல்லுவதால் இந்த பீல்டை பற்றி பலருக்கும் பயம் தான் ஏற்படுகிறது. அதனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. சினிமா துறையில் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடும் போது ஒரு சில நடிகைகள் குடும்ப சூழ்நிலைக்கு காரணமாக அதை ஏற்றுக்கொண்டு அட்ஜஸ்ட் செய்திருக்கலாம்.

எந்த நடிகையாவது மறுப்பு தெரிவித்து இருந்தால் அடுத்த முறை அடுத்த நடிகையை கேட்கும் தைரியம் யாருக்கும் வராது. பெண்களின் பலவீனம் தான் இதற்கெல்லாம் காரணம் என்று அந்த பேட்டியில் காயத்ரி பேசியிருக்கிறார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+