எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண தேவையில்லை.. தலைக்கனமா? எதிர்நீச்சல் நந்தினி எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய கடந்த கால கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதோடு தன்னுடைய வாழ்க்கையில் சிலர் அட்வைஸ் என்கிற பெயரில் அத்து மீறுவது குறித்து நடிகை ஹரிப்பிரியா அதில் பேசியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதுவும் நந்தினி கேரக்டரை சொல்லவே வேண்டாம். இவருடைய டைமிங் காமெடி அதிகமான ரசிகர்களை கவர்ந்தது.
எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப பெண்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலும் அதில் எதிர்பார்க்காத விதமாக டைமிங் காமெடி செய்து கொண்டிருப்பது தான் நந்தினி உடைய கேரக்டரே. அதுதான் நடிகை ஹரிப்ரியாவின் நிஜ கேரக்டருமாம். சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் எனக்கு அட்வைஸ் கொஞ்சம் கூட பிடிக்காது.
காரணம் நாம ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது நமக்கு உதவி செய்யாதவர்கள் ஒரு சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை. நான் எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டித்தான் இந்த தூரம் வந்திருக்கிறேன். இதை நான் தலைகனமாக சொல்லவில்லை.

என்னுடைய இத்தனை வருட பயணத்தில் நான் இங்கு சென்றால் இடிக்கும், அங்கு சென்றால் வலிக்கும் என்று படிப்படியாக கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். அதனால் இனி வரும் காலத்திலும் என்னை நானே பார்த்துக் கொள்வேன். எனக்கு எந்த அட்வைஸும் தேவையில்லை. அதுபோல நானும் யாருக்கும் அட்வைஸ் கொடுப்பது கிடையாது. எனக்கு கர்மா, நேரம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கிறது. அது எல்லாம் நம்மை சில நேரங்களில் சுழற்றி விடுகிறது.
நிறைய விஷயங்களில் நான் எடுத்த முயற்சிகள் கைவிட்டு இருக்கிறேன். நான் கஷ்டத்தில் இருக்கும் போது எனக்கு டார்வின் அண்ணன் என்பவர்தான் உறுதுணையாக இருந்தார். அவர் இங்கு தவறு செய்தவர்களே தைரியமாக வாழும் போது நீ வாழ்வதற்கென்ன என்று சொன்னார். இந்த வார்த்தைகள் தான் நான் இந்த துறையில் இத்தனை வருடங்களாக போராடி வருவதற்கான காரணம் என்று அந்த பேட்டியில் நடிகை பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications