புற்றுநோயால் அந்த பாகத்தை ஆப்ரேஷன் செய்து எடுத்துட்டாங்க.. பகீர் கிளப்பிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்கும் நடிகை கனிகா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் தன்னுடைய அம்மாவிற்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டது குறித்தும் அதற்குப் பிறகு தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial Actress Kanika mother cancer and the hardships

அந்த வகையில் நடிகை கனிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் இப்போது சின்னத்திரையில் அதிகமாக பிரபலமாக இருக்கிறார். இவர் மதுரையில் 1982 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். கல்லூரி படிக்கும் போது இருந்த நடிப்பு ஆர்வத்தின் காரணமாக இவர் நடிகையாக மாறி இருக்கிறார்.

காலேஜ் படிக்கும் போது பாட்டு பாடுவது, நாடகம் போன்ற பலவற்றிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். பிறகு சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகு கனிகாவிற்கு அதிகமான வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது. அப்போது பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகிறார்.

Ethirneechal Serial Actress Kanika mother cancer and the hardships

அதைத் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். இனிமையாக பாடும் கனிகாவிற்கு சரியான வாய்ப்பு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்று கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவரை ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் பார்த்ததும் ரசிகர்கள் இவரா சீரியலில் என்று அதிர்ச்சி அடைந்து இருந்தனர். இவரா இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்று நினைத்திருந்தனர். இப்போது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலத்தில் ஈஸ்வரியின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கனிகா தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தை பற்றி பேசி இருக்கிறார். அப்போது என்னுடைய அம்மா புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி நிறைய பேசுவாங்க. ஆனா அவருக்கே புற்றுநோய் வந்துவிட்டது. அவருடைய மார்பில் வலி இருப்பதாக என்னிடம் சொன்னாங்க. உடனே நாங்கள் மருத்துவமனைக்கு அவரை கூட்டிட்டு போயிருந்தோம். அங்கு அவருக்கு ஹீமோதெரபி, ரேடியேசன் போன்ற சிகிச்சை எடுக்க சொன்னாங்க. நாங்களும் எல்லாமே செய்தோம்.

Ethirneechal Serial Actress Kanika mother cancer and the hardships

பிறகு அம்மா புற்று நோய்க்கான சிகிச்சையின் போது பட்ட வேதனையை நான் நேரில் இருந்து பார்த்தேன். அவருடைய மார்பகத்தை பாதுகாப்பு காரணமாக வெட்டி எடுத்தாங்க அதை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது, என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் கனிகா பேசியிருக்கிறார். வெளியே சிரித்த முகமாக இருக்கும் கனிகாவிற்கு இத்தனை சோகங்களா என்று பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே கனிகா தன்னுடைய மகன் சிறு வயதில் உயிர் தப்பிய விதத்தை குறித்து உருக்கமாக பேசியிருந்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா அடிக்கடி போட்டோ சூட் நடத்திக் கொண்டு இருந்தாலும் இவருடைய சோகமான மறு பக்கம் பலரையும் வேதனை அடைய வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+