மிக்ஜாம் புயலில் தவித்த எதிர்நீச்சல் நடிகை.. மீட்பு குழுவினர் செய்த உதவி.. உருக்கமாக வெளியிட்ட பதிவு
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பல மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
அவர்களைப் போலவே பல பிரபலங்களும் சிக்கி இருக்கின்றனர். அதில் எதிர்நீச்சல் சீரியல் நடிகையான கனிகா தானும் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கனிகா மீட்பு குழுவினரால் காப்பாற்றப்பட்டு இருக்கும் நிலையில் மீட்பு குழுவினருக்கு நன்றி கூறி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு மழை நின்ற போதிலும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் இன்னமும் தேங்கி இருக்கிறது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்கள் உதவிகளை செய்து வருகின்றனர். அதுபோல சமூக சேவை செய்கிறவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா புயலில் சிக்கி இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது அவர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது குறித்த தகவல் சோசியல் மீடியா அளவில் வைரலாகி வருகிறது.
இதற்காக கனிகா நன்றியும் தெரிவித்து இருக்கிறார். அதாவது சன் டிவியில் அதிகமான ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் வெள்ளி திரையில் அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த கனிகா எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் அமைதியின் சொரூபமாக இருந்த கனிகா இப்போதுதான் கதாநாயகியாக ரசிகர்களின் மத்தியில் பதிய தொடங்கியிருக்கிறார். தன்னை சுற்றி பல பிரச்சனைகள் வந்தாலும் இனி அதை தகர்த்தெறிந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி போகும் முக்கியமான தருணத்தில் எதிர்நீச்சல் சீரியல் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரு வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கனிகா தன்னுடைய குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளம் புகுந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக கூறினார். இதனை அடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டு இருக்கின்றனர்.
இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா நாங்கள் மீட்கப்பட்டோம். குடிநீர் வினியோகம் இல்லை, மின்சாரம் இல்லை, வெள்ள நீர் அளவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை. இந்த நேரத்தில் மீட்பு குழுவினர்கள் எங்களை மீட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு நன்றி என்று அதில் கூறுகிறார். அதோடு பொதுமக்களும் பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications