எதிர்நீச்சலில் மாற்றப்பட்ட கதை.. உறுதி செய்த ஜனனி.. ஆனால் இதை கவனிச்சீங்களா? சக்திக்கு தான் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் பத்தாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் அதில் சக்தி மற்றும் கரிகாலனுக்கு இடையே காட்டுக்குள் சண்டை நடக்கிறது. இதில் சக்தி, ஜனனியின் அத்தை மகன் சித்தார்த்தை கடத்தி வைத்திருப்பதை கரிகாலன் வீடியோ எடுத்து வைத்திருக்கும் நிலையில் இதனால் கதிருக்கு ஆபத்து வருவதாக தெரிகிறது.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் தொடரும் கல்யாண பிரச்சனையில் இந்த முறையாவது பெண்கள் ஜெயிக்கிறார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை ஜனனி அந்த ப்ரோமோவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Ethirneechal Serial April 10th 2024 promo and episode full update

அதாவது பொதுவாக சீரியல்கள் என்றால் அதில் வில்லன் ஆரம்பத்தில் ஜெயிப்பது போன்று இருந்தாலும் கடைசியில் வில்லனின் பிளானை ஹீரோ அல்லது கதாநாயகி உடைத்து அவர்கள் தான் ஜெயிப்பார்கள். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் மட்டும் தான் விதிவிலக்காக எல்லா இடத்திலும் வில்லன் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருக்கிறார். இது ஆரம்பத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் இப்போது ரசிகர்கள் இதைக் குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ரசிகர்கள் சீரியலின் கதையை மாற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு சிறு மாற்றமாக சில தினங்களுக்கு முன்பு எபிசோடில், "குணசேகரனுக்கு இனி தோல்வி தான் கிடைக்கும் என்று அவருடைய மாமா சாமியாடி அருள் வாக்கு" கூறி இருந்தார். அப்படியே நடந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களும் கருத்து கூறி வருகிறார்கள்.

Ethirneechal Serial April 10th 2024 promo and episode full update

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இதுவரைக்கும் பல முறை பெண்கள் தோற்றிருந்தாலும் இப்போது நடக்கும் கல்யாண போராட்டத்தில் நாங்கள் ஜெயித்தே தீருவோம் என்று ஜனனி மீண்டும் சபதம் போட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் சிலர் விமர்சித்து வந்தாலும் இந்த முறை குணசேகரன் தோல்வி அடைவார் என்று தான் தெரிகிறது.

காரணம் தர்ஷினிக்கும் உமையாளின் மகனுக்கும் கல்யாணத்தை நடத்துவேன் என்று குணசேகரன் சபதம் போட்டிருக்கிறார். தர்ஷினிக்கு இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. இந்த நிலையில் அவருக்கு திருமணம் ஆகினால் இது தவறான முன் உதாரணமாக மாறிவிடும். எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்திய இதுவரைக்கும் எல்லா சீரியல்களும் எடுத்திருக்கிறார்.

Ethirneechal Serial April 10th 2024 promo and episode full update

ஆனால் இப்போது இந்த சீரியலில் பெண்கள் தோற்றுக் கொண்டிருப்பது போலவே கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். இந்த கதை கூட இனி மாற்றப்படலாம். ஆனால் 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது போன்று கதையை வைத்தால் இது சமுதாயத்தில் பெரிய அளவில் தவறான வழிகாட்டுதலாக மாறிவிடும்.

அதுபோல தர்ஷனியை மீண்டும் டொனமெண்டில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி தர்ஷினியின் மாஸ்டர் இடம் பேசி இருக்கிறார். இதனால் தர்ஷினி டொனாமெண்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பழைய நிலைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ethirneechal Serial April 10th 2024 promo and episode full update

அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோக்களில் குணசேகரன் நான் நினைச்ச மாதிரி என்னுடைய பொண்ணு கல்யாணத்தை நடத்துவேன் என்று கூறி சபதம் போட்டு இருக்கிறார். மறுபக்கத்தில் சித்தார்த்தை சக்தி கடத்தி வைத்திருப்பதை கரிகாலன் வீடியோ எடுத்திருக்கிறார் இதன் நிலையில் கரிகாலனுக்கும் சக்திக்கும் காட்டுக்குள் அடிதடி நடக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இயக்குனர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+