எதிர்நீச்சல்: இந்த ஒரு சீனுக்காக எடுத்த ரிஸ்க்.. வீடியோ வெளியிட்ட ஜனனி.. முதலில் இதை கவனிங்க பாஸ்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் எதிர்நீச்சல் பெண்கள் தர்ஷினியின் திருமணத்தை நடத்துவதற்காக பெரிய கேட்டில் ஏறி இறங்கி இருந்தனர். அது குறித்த மேக்கிங் வீடியோவை இந்த சீரியலில் ஜனனியாக நடிக்கும் நடிகை மதுமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நேற்றைய எபிசோடு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இன்னும் ஒரு சில விஷயங்களை எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் கவனிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பெண்களின் முன்னேற்றத்தை மையமாக கொண்டுள்ளது என்பதால் இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான பாசிட்டி கமெண்டுகள் குவிந்து வந்த நிலையில் இப்போது சில மாதங்களாகவே இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துகளும் வருகிறது.
அதிலும் எதிர்நீச்சல் பெண்கள் எல்லா இடங்களிலும் சவால் விட்டாலும் ஒரே இடத்தில் கூட ஜெயிக்கவில்லையே என்பது பலருடைய கருத்தாக இருந்தது. ஆனால் நேற்றைய எபிசோடில் முதல் முறையாக எதிர்நீச்சல் பெண்கள் குணசேகரனிடம் ஜெயித்திருக்கின்றனர். இதுவரைக்கும் எதிர்நீச்சல் பெண்கள் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறோம் என்று பல விஷயங்களை தொடங்கியிருந்தாலும் தொடங்கிய விஷயங்கள் அப்படியே நின்று விடுவது தான் வாடிக்கையாக இருக்கிறது.
எதிர்நீச்சல் பெண்கள் எல்லோருமே புது பிசினஸில் காலடி எடுத்து வைத்தனர். அது குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகளால் தடைப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு பெண்கள் முன்னேற்றம் அடைவது போன்று காட்சிகள் இல்லாமல் தொடர்ச்சியாக அவர்களுக்கு பிரச்சனை வருவது போன்று தான் காட்சிகள் இருந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர்.
ஆனால் நேற்று முதல் முறையாக தர்ஷினி மற்றும் சித்தார்த் திருமணத்தை எதிர்நீச்சல் பெண்கள் தடுத்து நிறுத்திருக்கின்றனர். அதற்கு பெரிய கேட் ஒன்றில் ஏறி இறங்கி சாகசம் செய்து இருந்தனர். இது இணையத்தில் அதிகமாக பாராட்டப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்த சீரியலில் காட்சிகளில் ஜனனி மட்டும் தான் முழு கேட்டையும் ஏறி இறங்கி இருந்தார். மற்ற பெண்கள் ஏறுவது போன்றும் பிறகு அவர்கள் இறங்கிவிட்டது போன்றும் தான் காட்சிகள் வைத்திருந்தனர்.
காரணம் மற்ற பெண்கள் எல்லோருமே புடவை கட்டி இருந்தனர். ஜனனி சுடிதார் போட்டு இருந்தார். அதனால் ஜனனியால் மட்டும்தான் கேட் ஏற முடிந்ததா? என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த எபிசோடில் மேக்கிங் வீடியோவை ஜனனியாக நடிக்கும் மதுமிதா பகிர்ந்து இருந்த நிலையில் இந்த செயல் எல்லாராலும் பாராட்டப்பட வருகிறது. ஆனால் நீங்கள் எல்லோரும் அடுத்து உங்களுடைய பிசினஸில் ஜெயிக்க வேண்டும். அதுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே சக்தி மற்றும் ஜனனி இருவரும் சேர்ந்து புது பிசினஸ் தொடங்கி இருந்தார்கள். அதற்கு பேங்கில் லோன் வாங்கி இருந்தார்கள் ஆனால் அதில் அவருடைய தம்பி கிருஷ்ணசாமி மற்றும் ராமசாமியால் பிரச்சனை வந்திருந்தது. அதுபோல நந்தினி கேட்டரிங் சர்வீஸ் தொடங்கி இருந்தார். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. ரேணுகா ஆன்லைன் கிளாசில் டான்ஸ் சொல்லிக் கொடுத்திருந்தார். அதுவும் பிறகு என்ன ஆனது என்று தெரியாமல் போய்விட்டது.
இப்படியாக ரசிகர்களுக்கு பல கேள்விகள் இருக்கும் நிலையில் இதற்கு முதலில் விடை காணுங்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications