எதிர்நீச்சலில் இனி குணசேகரன் ஜெயிக்க போவது கிடையாது! இனி நடக்கப்போவது இதுதானா? செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 6ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் இதுவரைக்கும் ஜெயித்துக் கொண்டிருந்த நிலையில் இனி குணசேகரனுக்கு ஜெயிப்பு இல்லை தோல்விதான் என்று அவருடைய மாமா சாமியாடி குறி சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களத்தை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து இருக்கும் நிலையில் இப்போது அதற்கு முன்னோட்டமாக குணசேகரனின் தோல்வியை குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் சில நாட்களாகவே கடத்தல் காட்சிகளும், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் தான் ரிப்பீட்டு மோடில் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து குணசேகரன் மட்டும் தான் எல்லா இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகி மற்றும் எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் சபதம் போட்டுக் கொண்டிருந்தாலும் சபதத்திலும் கடைசியில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இது பார்க்கும் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி இருக்கும் நிலையில் இப்போது இன்று வெளியான ப்ரோமோவில் ரசிகர் எதிர்பார்த்த சில காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. அதாவது ஜனனி தன்னுடைய அம்மா மற்றும் தங்கையை தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அவருக்கு கொற்றவை ஐ பி எஸ் உதவி செய்கிறார். அதே நேரத்தில் கதிர் உமையாளின் மகனை கடத்தி வைத்திருந்த இடத்திற்கு சக்தி போய் அவரிடம் காதலித்த பெண்ணிற்காக போராட முடியவில்லை என்றால், நீ எல்லாம் என்ன ஆம்பள என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து கோவிலில் தர்ஷினிக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்லி ஏமாற்றி கல்யாணம் ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கும் குணசேகரனிடம் அவருடைய மாமா சாமி அருள் வந்து இதுவரைக்கும், "நீ எல்லா இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருந்தா.. ஆனால் இனி உனக்கு அழிவு காலம் வந்துவிட்டது. நீ இனி தோற்கப் போற..!" என்று சொல்ல அதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி ஆகிறார்.
ஏற்கனவே நேற்று இருந்து குணசேகரனின் சாமியாடி மாமாவுக்கு அடிக்கடி அருள் வந்து கொண்டே இருக்க அப்போது அவர் மாப்பிள்ளையை பற்றி பாண்டி ஏதோ சொல்ல வராருப்பா நான் சொல்லணும் என்று சொல்ல முயற்சி செய்ய அதற்கு குணசேகரன் ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று தடுத்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் இன்று இவர் இப்படி சொல்லி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இனியாவது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி குணசேகரன் தோல்வி அடைவது போன்று கதையை கொண்டு போக வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கொற்றவை நேற்றைய எபிசோடில் குணசேகரன் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதாகவும் அவருக்கு சப்போர்ட் பண்ணது எவ்வளவு தவறு என்பது எனக்கு தெரிந்து விட்டது என்று சொல்லி இருந்தார். இதனால் ஜீவானந்தத்தை இனி தேடுவதற்கு கொற்றவை ஒரு பக்கம் உதவி செய்வார்.
அதே நேரத்தில் ஈஸ்வரி மீண்டும் தர்ஷினியை டோனாமெட்டில் கலந்து கொள்ள வைப்பதற்காக அவருடைய சாரிடம் பேசி இருக்கும் நிலையில் தர்ஷினி இனி தைரியமாக பழையபடி மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஈஸ்வரி போட்ட சபதத்தில் ஈஸ்வரியும் ஜெயிக்கலாம்.. அதேபோல ஜனனியும் தன்னுடைய தங்கைக்கு உமையாள் மகனை கல்யாணம் செய்து வைத்தால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சீரியல் மீண்டும் மக்கள் மத்தியில் பேசப்படும். ஆனால் இயக்குனர் என்ன முடிவெடுத்து இருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே சில தினங்களாக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications