எதிர்நீச்சலில் இனி நடக்கப்போவது இதுதான்.. மாரிமுத்து இதையெல்லாம் மறச்சிட்டாரு..வருத்தத்தில் அப்பத்தா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

இந்த நிலையில் இனி யாரு குணசேகரனாக நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் பட்டமாளாக நடித்துவரும் பாம்பே ஞானம் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

Ethirneechal serial Bombay Gnanam shared Marimuthu real character

அந்த வகையில் குணசேகரன் நடித்து வந்த மாரிமுத்து இதையெல்லாம் எங்களிடம் மறைத்து விட்டார் என்று சில தகவல்களை பாம்பே ஞானம் பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

துணை இயக்குனராக சினிமாவில் அறிமுகம் ஆகிய மாரிமுத்து பல போராட்டங்களுக்கு பிறகு தான் கண்ணும் கண்ணும், புலிவால் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தார். அந்த திரைப்படங்களும் பெரிய அளவில் மாரிமுத்துவிற்கு கை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வைத்த மாரி முத்து சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக குணசேகரன் கேரக்டரில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார்.

இந்த சீரியலில் மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பு மற்றும் வசனம் பேசும் திறமை காரணமாகவே அவருடைய கேரக்டர் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஆனால் அது கடவுளுக்கே பொறுக்கவில்லை போல,அவர் புகழுக்காக எத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருந்த நிலையில் இப்போது தான் அதில் ஒரு வெளிச்சம் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது அணைந்து போய்விட்டது.

இந்த நிலையில் அவருடைய இறப்பிலிருந்து மீள முடியாமல் ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரோடு சீரியலில் நடிக்கும் பல பிரபலங்களும் அவரை பற்றிய தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குணசேகரனால் அதிகமாக திட்டுகளை வாங்கிக் கொண்டிருக்கும் அப்பத்தா கேரக்டரில் நடிக்கும் நடிகை பாம்பே ஞானம் குணசேகரன் உடம்புக்கு இத்தனை பிரச்சனைகள் இருந்ததும் எங்களிடம் அதுபற்றி சொல்லவே இல்லை.

சூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு எனர்ஜியாக இருப்பாரு. அப்போ கூட பல நேரங்களில் வசனம் பேசும்போது அவருடைய வசனங்களை அவ்வளவு சத்தமாக பேசுவாரு, நாங்க கூட எதுக்காக இவ்வளவு சவுண்டு போடுறீங்க என்று கேட்டதற்கு ஆனால் அதுதான் ரியலா இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் எங்களுக்கு தெரிந்து இருந்தால் நாங்கள் கண்டிப்பாக அவரை கத்தி பேச விட்டிருக்க மாட்டோம். அதுபோல டைரக்டரும் கூட அவர் இப்படி கத்தி பேசுவதற்கு அனுமதித்திருக்க மாட்டார்.

Ethirneechal serial Bombay Gnanam shared Marimuthu real character

ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர் டப்பிங்கில் பேசுவது போன்று தான் கத்தி பேசிக் கொண்டிருப்பார். நாங்கள் முக எக்ஸ்பிரஷனை காட்டி அந்த நேரத்தில் நடிப்போம், பிறகு டப்பிங்கில் எங்களுடைய வசனங்களை பேசுவோம். ஆனால் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் கூட அதே போல சத்தமாக பேசிக் கொண்டிருப்பார். இனி அவர் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனிவரும் காலத்தில் எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு பதிலாக இன்னொரு நபர் நடிக்கலாம், ஆனால் குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து நடித்ததை யாராலும் நிரப்ப முடியாது.

அதுபோல இனி சீரியலில் டைரக்டர் என்ன மாதிரி கதை கொண்டு போகப் போகிறார் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் மாரிமுத்து உருவாக்கிய அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்கிற மாதிரி ஒரு நபரை டைரக்டர் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மக்களிடம் எப்படி ரீச் ஆகப்போகிறது என்று தான் தெரியவில்லை என்று அந்த பேட்டியில் பாம்பே ஞானம் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+