எதிர்நீச்சல் சக்தியின் நிஜ மனைவி கணவர் பற்றி வெளியிட்ட திடீர் பதிவு.. இதை எதிர்பார்க்கலையே!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கேரக்டரில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகரின் பெயர் சபரி பிரசாத் தான். இவர் பற்றி இவருடைய மனைவி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட போஸ்ட் தான் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
சக்தி எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்தில் அண்ணன் பேச்சை கேட்டு தலையாட்டி பொம்மையாக நடந்து கொண்டு இருந்ததை வைத்து ரசிகர்கள் அவரை திட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அவர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பாராட்டப்படுகிறார். இந்த நிலையில் சக்தியாக நடிக்கும் சபரி பிரசாத்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது என்ற தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இந்த நிலையில் சக்தி பற்றி இன்னும் விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் டக்கென்று பிரபலமாகி விடுகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் இப்போது இருந்து வருகிறது. அதில் கதாநாயகனாக சக்தி கேரக்டரில் நடிப்பவர் தான் சபரி பிரசாத். இவருடைய நடிப்பை பார்த்து பலர் பாராட்டிக் கொண்டிருந்தாலும் பல நேரங்களில் இவர் திட்டலையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சீரியலில் ஒரு தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவருடைய நிஜ கேரக்டர் அப்படியே இல்லையாம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் தான் கல்லூரியில் படித்திருக்கிறார். எஸ்ஆர்எம் கல்லூரியில் பி டெக் படிப்பை முடித்து எம்பிஏ படித்திருக்கிறாராம்.
காலேஜ் படிக்கும் போதே படிப்பை விடவும் இவருக்கு டைரக்டராக ஆக வேண்டும் என்பதில் தான் அதிகமாக ஆசை இருந்ததாம். காலேஜில் இவர் பல ஷார்ட் பிலிம்கள் பண்ணியிருக்கிறாராம். அதுபோல அந்த ஷார்ட் பிலிம்களில் நடிக்கவும் செய்திருக்கிறாராம் சின்ன வயதில் இருந்து பல ஸ்டேஜ் டிராமாக்களில் நடித்திருக்கிறாராம்.
அதனாலேயே என்னவோ இவர் டைரக்டர் ஆவதற்கு இவருக்கு ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இவர் இரண்டு ஆல்பம் பாடல்களில் கூட நடித்திருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடைய அப்பாவும் ஏடியாகவே மீடியாவில் வேலை செய்து இருக்கிறார். அதனால் தான் சபரி பிரசாத்துக்கு நடிப்பதற்கு ஆசை வந்ததோ என்னவோ. ஆனால் சபரி பிரசாத் அப்பா அவருடைய திருமணத்திற்கு முன்புதான் மீடியாவில் ஏடியாக இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சபரி பிரசாத்தின் பெயரிலேயே பிசினஸ் தொடங்கி இருக்கிறாராம்.
படிப்பை முடித்த பிறகு அப்பாவின் பிசினஸை கவனித்துக் கொண்டிருந்த சபரி பிரசாத் அந்த பிசினஸுக்கு எம்டியாகவும் இருக்கிறாராம். தனக்கு நடிப்பதற்கு ஆசை வந்த பிறகு காலேஜ் படிக்கும் போதே இவர் பல ஆடிஷன் அட்டென்ட் செய்திருக்கிறாராம். ஆனால் ஆரம்பத்தில் பல தோல்விகள் தான் இவருக்கு கிடைத்துக் கொண்டிருந்ததாம். ஆனாலும் வீட்டில் இவருக்கு அதிகமாக சப்போர்ட் கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் தான் இவருக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான தறி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் பணக்கார வீட்டு பையனாகத்தான் இவர் நடித்திருந்தார்.
சொந்தமாக சபரி ஒரு புரொடக்ஷன் கம்பெனியை தொடங்கி இருக்கிறாராம். ஆனால் இப்போது அதை டிஜிட்டல் மயம் ஆக்கி விட்டாராம். சபரி நிஜ வாழ்க்கையில் காதலித்து தான் திருமணம் செய்து இருக்கிறார். பல வருடங்களாக காதலித்து கிருத்திகா என்ற பெண்ணை வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்திருக்கிறார். இவருடைய திருமணம் பெரிய அளவில் பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 அதாவது காதலர் தினத்தன்று சபரி பிரசாத்தின் மனைவியான கிருத்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சபரியை டேக்ஸ் செய்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் நாங்கள் காதலித்துக் கொண்டிருந்தபோது முதல் காதலர் தினத்தை கொண்டாடியது இல்லை.
காரணம் ஒருவேளை நாங்க காதலர் தின நாளில் கல்யாணம் பண்ணிக் கொண்டதாலோ என்னவோ காதலர் தினத்தை கொண்டாடவில்லையே என்று நினைக்கிறேன் என்று அவர் போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு எங்களுடைய இரண்டாவது கல்யாண நாள் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications