பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம்.. குவிந்த பிரபலங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் அந்த புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கும் நிலையில் அதற்கு அதிகமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனராக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கும் திருச்செல்வம் பிறந்த ஊர், தஞ்சாவூர் தானாம். இவர் குடும்பமே ஒரு விவசாய குடும்பம் தான். நடிப்புக்கும் இவருடைய குடும்பத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது.

அக்கா தங்கச்சி சென்டிமெட்டில் திருச்செல்வம் பட்டய கிளப்புவதற்கு காரணமே அவருடைய வீட்டில் அவருக்கு இரண்டு அக்காக்கள் இருப்பது தானாம். இவருடைய வீட்டில் திருச்செல்வன் தான் கடைக்குட்டியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு காலேஜிலேயே தன்னுடைய படிப்பை முடிச்சிருக்கார். படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று அதிகமான ஆசை வந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் எடுத்து இருக்கிறார்.
ஆரம்பத்திலேயே இவர் சவுண்ட் இன்ஜினியராக 5 வருடங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்க, அதற்கு பிறகு தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் துணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவர் கோலங்கள் சீரியலில் ரைட்டர் ஆகவும், டைரக்டராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதோடு அந்த சீரியலில் நடிகராகவும் நடித்து பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
என்னதான் டைரக்டராக இருந்தாலும் கேமராக்கு பின்னாடி இருப்பதால் பலருக்கும் தெரியாது ஆனால் இவர் முதல் முறையாக தொல்காப்பியன் என்கிற கேரக்டரில் நட்புக்கு இலக்கணமாக நடித்து பலருடைய மனதில் பசை போல ஒட்டிக்கொண்டார். அதனால் தான் தற்போது இவர் இயக்கும் எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தனர். அதனாலேயே அவர் ஜீவானந்தமாக அறிமுகமும் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் அவருடைய குடும்பத்தை பற்றி பார்க்க வேண்டும் என்றால் திருச்செல்வத்தின் மனைவியின் பெயர் பாரதிதானாம். இவர் ஒரு சிவில் இன்ஜினியராக இருக்கிறாராம். இவர் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம். கோலங்கள் சீரியலில் தேவயானி ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்ப்பார். அந்த மாதிரி அந்த சீரியலில் கதாநாயகி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்ப்பதற்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது திருச்செல்வத்தின் மனைவிதானாம்.

இந்த நிலையில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் திருச்செல்வம் மகள் பிரியவர்ஷினியின் திருமணம் நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள், சின்னத்திரை வட்டாரங்கள் என்று பலரும் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இவ்வளவு அவசரமாக முடிப்பதற்கு காரணம் அவருடைய மகள் திருமணம் தானா? மகள் திருமண வேலை அதிகமாக இருந்ததால் தான் இயக்குனர் சீரியலை முடித்து விட்டாரா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் இயக்குனர் திருச்செல்வத்தின் மகள் அபிநயாவின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நம்முடைய சார்பாக நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications