நடிகர் விஜய்யுடன் எதிர்நீச்சல் இயக்குனருக்கு இப்படி ஒரு பந்தமா..? அடித்தளமே இளையராஜா தானா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
இவர் நடிகர் விஜய்க்காக ஒரு திரைப்பட கதை ரெடி பண்ணி இருந்தாராம்.
அது போல நடிகர் விஜய் உடன் உள்ள நெருக்கம் குறித்தும் பேட்டி ஒன்றில் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் தற்போது உச்சரிக்கப்படும் ஒரு பெயராகத்தான் எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலின் கதையும் வேகம் எடுத்து இருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியல் வாரத்தில் 8 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கு முன்பு இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலும் ரசிகர்களின் மத்தியில் இது போன்ற ஒரு நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோலங்கள் சீரியலின் வெற்றிக்கு பிறகு ஒரு சில சீரியல்களை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தாலும் அது பெரிய அளவில் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து சன் டிவியில் இவர் இப்போது இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் தன்னுடைய திரை துறை அனுபவங்கள், தான் கடந்து வந்த நிகழ்வு குறித்து அதில் பேசியிருந்தார்.
அப்போது கோலங்கள் சீரியலின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தன்னை கூப்பிட்டு பாராட்டியது குறித்தும் அதுபோல ரஜினிகாந்த் காக தான் கதை சொன்னேன் ஆனால் அந்த நேரத்தில் பதட்டத்தில் தான் நடிகைக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையாக சொன்னதால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறித்தும் பேட்டியில் ஏற்கனவே பேசி இருக்கிறார்.
அதுபோல திருச்செல்வம் மெட்டி ஒலி சீரியலை எடுத்த திருமுருகனிடம் உதவியாளராக இருந்தவர் தான். அதற்கு முன்பாகவே இவர் சினிமாவில் பைத்தியமாக இருந்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் இவர் சவுண்ட் இன்ஜினியராக வேலை செய்திருந்தாராம். அதுவும் இளையராஜாவிடமே திருச்செல்வம் பணியில் சேர்ந்து இருந்தாராம். இளையராஜா உடன் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் கூட இவர் பணி புரிந்திருக்கிறார்.
அந்த திரைப்படத்தில் சவுண்ட் இன்ஜினியராக இவர் வேலை செய்து கொண்டு இருந்தாராம்.ஆனால் அதைத் தொடர்ந்து திருச்செல்வம் சீரியல் இயக்குவதற்கு தொடங்கி இருந்தாலும் நடிகர் விஜய்க்காக ஒரு திரைப்பட கதையை கூறியிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியாமல் போய்விட்டது என்று இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications