எதிர்நீச்சல் "குணசேகரன்” உருவானது எப்படி? இனி கதை இதுதான்..! சீக்ரெட்டை உடைத்த திருச்செல்வம்
சென்னை: சின்னத்திரையில் டிஆர்பி யில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக இருக்கும் இந்த சீரியலில் வில்லனாக குணசேகரன் இருந்தாலும் அவருடைய கேரக்டருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் குணசேகரன் கேரக்டர் எப்படி உருவானது என்பது குறித்து எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு சீரியலாக மாறி இருக்கிறது. குறிப்பாக ஆண்கள் ஹாஸ்டலில் கூட இந்த சீரியல் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இது தற்போதைய நடைமுறைக்கு தகுந்த மாதிரி எதார்த்தமாக இருப்பதாகவே பலர் கூறி வருகின்றனர்.
இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி இருந்தாலும், அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு கேரக்டராக குணசேகரன் தான் இருக்கிறார். இவர் வீட்டில் இருக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தினாலும் இவர் பேசும் நக்கல் நையாண்டி பேச்சு தான் இந்த சீரியலின் ஹைலைட் என்று சொல்ற அளவிற்கு பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார்.
அதிலும் "யம்மா ஏய்" என்ற டயலாக் எதிர்நீச்சல் பெண்களை மட்டுமல்லாமல் இந்த சீரியலை பார்ப்பவர்களையும் நடுங்க வைத்து விடுகிறது. இந்த நிலையில் குணசேகரன் கேரக்டர் பற்றியும் அது எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் திருச்செல்வம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குறிப்பாக திருச்செல்வம் இயக்கும் சீரியல்கள் எல்லாமே கிராமப்புறங்களில் வாழும் மக்களை பிரதிபலிக்கும். ஆகையால் அவருடைய சீரியலின் படப்பிடிப்பு லொகேஷனுக்காக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தாராம். அப்போது அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் எதார்த்தமாக போயிருக்கிறார்.
அந்த வீட்டிற்கு செல்லும் போது ஒரு வித்தியாசத்தை திருச்செல்வத்தால் பார்க்க முடிந்ததாம். அங்கு குணசேகரன் கதாபாத்திரம் உருவாகுவதற்கு காரணமான ஒரு நபரை பாத்திருக்கிறார். அவர் ரொம்ப மோசமான மனிதர் எல்லாம் கிடையாதாம். ஆனால் மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்ததால் தன்னை ஒரு கரடு முரடனாக முற்போக்கு குணம் கொண்டவராக மாற்றிக்கொண்டு அதில் பாதுகாப்பு தேடும் கேரக்டராக இருந்திருக்கிறார்.
அவரைப் பார்த்து வியந்து போன திருச்செல்வம் அவரிடம் பேசி பழகும் போது உங்களுடைய கேரக்டரை என்னுடைய சீரியலில் கொண்டு வரப் போகிறேன் என்று சொன்னாராம். அவரும் ஓ தாராளமா வச்சுக்கோங்க என்று சொல்ல, ஹீரோவா எல்லாம் இல்லை நீங்கதான் வில்லனே என்று சொல்ல, என்ன இருந்தாலும் பரவாயில்லை நான் நானாக இருக்கிறேன் அப்படியே வச்சுக்கோங்க என்று அவரும் அனுமதி கொடுத்து விட்டாராம்.
அப்படித்தான் தற்போதைய குணசேகரன் கேரக்டர் உருவாகியது என்றும் இந்த கேரக்டரில் இருப்பவர் போன்ற உண்மையாக இருக்கும் குணசேகரன் சீக்கிரமாக ரசிகர்களிடம் காட்ட விரும்புவதாகவும் அந்த பேட்டியில் திருச்செல்வம் கூறியிருக்கிறார். ஆனால் குணசேகரன் பேசும் பல வார்த்தைகள் நிஜ குணசேகரன் பேசுவது கிடையாதாம். இது எல்லாமே "நடிகர் மாரிமுத்து" அந்த டைமிங்கில் தனக்கு தோன்றுவதை அப்படியே தன்னுடைய ஸ்டைலில் பிரதிபலிக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications