எதிர்நீச்சலில் ஹரிப்ரியா “நந்தினி”யாக செலக்ட் ஆனது.. இந்த ஒரு காரணம் தானாம்.. மனம் திறந்த இயக்குனர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. காரணம் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதித்து விட்டது.
அதில் பல நடிகர்கள் நடித்திருந்த போதிலும் நந்தினி கேரக்டரில் நடிகை ஹரிப்ரியா நடித்து வருவது குறித்து அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அது குறித்து முதல் முறையாக ஹரிப்ரியா எப்படி நந்தனியாக நடிக்க தேர்வானார் என்று அந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
வாய்ப்பு ஒருவருக்கு எப்போது எப்படி வரும் என்று தெரியாது. நம்முடைய வேலையை நாம் சரியாக பார்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கும். அந்த மாதிரிதான் நடிகை ஹரிப்பிரியாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ஹரிப்பிரியா பல சீரியல்களையும் நடித்திருக்கிறார். குறிப்பாக கனாக்காணும் காலங்கள் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து முன்னணி சேனல்களிலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
ஹரிப்பிரியா இத்தனை வருடங்களாக நடித்து வந்த நடிப்பின் மணி மகுடமாக எதிர்நீச்சல் நந்தினி கேரக்டர் அமைந்திருக்கிறது. பொதுவாக வீட்டில் பெண்கள் படும் கஷ்டங்களை எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் பட்டுக் கொண்டிருந்தாலும், அதிலிலும் நக்கல் நையாண்டித்தனம் செய்து தங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு நபரை சந்தித்தது போன்று இவருடைய கேரக்டர் ரசிகர்களிடம் அதிகமாக ரீச் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் எப்படி நந்தினி கேரக்டருக்கு ஹரிப்ரியா செலக்ட் ஆனார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஹரிப்பிரியாவை நான் ஒரு சன் அவார்டில் தான் பார்த்தேன். அதில் காமெடி சீன் ஒன்றுக்கு ஹரிப்பிரியா பயங்கரமான ஒரு ரியாக்ஷன் கொடுத்திருந்தார். இந்த பொண்ணோட நடிப்பு நல்லா இருக்கே என்று நான் அப்புறமா அவங்களை பற்றி விசாரிச்சேன்.
அப்போ அவங்க சில சீரியல்களில் நடித்துக் கொண்டு இருக்கிறதை பற்றி சொன்னார்கள். பிறகு அதிலிருந்து அவர்களை கமிட் பண்ணி இந்த சீரியலுக்கு எடுத்தோம் என்று கூறி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் நீங்கள் சரியான ஒரு நபரை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். எதிர்நீச்சல் சீரியல் போர் அடிக்காமல் போவதற்கு காரணம் நந்தினியும் ஒருவர். என்னதான் குணசேகரன் இந்த சீரியலில் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும், அவரையும் பல நேரங்களில் மொக்கை பண்ணும் கேரக்டராக நந்தினி இருப்பதால் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications