முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. கடைசி எபிசோடு இதுதானா..? விளக்கம் கொடுத்த விசாலாட்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக இணையத்தில் ஒரு பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது. அது குறித்து ரசிகர்கள் இந்த சீரியலில் விசாலாட்சியாக நடிக்கும் நடிகை சத்யபிரியாவிடம் கேள்வி கேட்டிருந்த நிலையில் அதற்கு சத்யபிரியா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சன் டிவியில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் அதிகமான வரவேற்பை பெற்றது. இதுவரைக்கும் சீரியல் பார்க்காத ஆண்களையும் கூட இந்த சீரியல் பற்றி பேச வைத்தது என்றே சொல்லலாம். அதுபோல நடிகர் விஜயின் அம்மா முதலாக ரஜினிகாந்த் வரைக்கும் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்ப்பதாக கூறி வந்தனர்.

அவ்வளவு பெயர் வாங்கிய சீரியல் சில மாதங்களாகவே மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம் இந்த சீரியலில் தொடங்கப்படும் பிரச்சனைகள் ஒன்று முடிவு அடைவதற்குள் அடுத்த சிக்கல்கள் உருவாகி எதிர்நீச்சல் சீரியலில் இடியாப்ப சிக்கல் ஆகவே புதுப்புது பிரச்சனைகள் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி எதிர்நீச்சல் பெண்களும் புதியதாக சாதிக்காமல் வீட்டிற்குள் ஒவ்வொரு இடத்திலும் குணசேகரனிடம் அவமானப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் குறித்து எல்லோரும் எவ்வளவு பாராட்டினார்களோ அந்த அளவிற்கு இப்போது திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணம் இந்த சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பு தான். மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானது இந்த சீரியல் ரசிகர்களை மட்டுமல்லாமல் சீரியல் தரப்பினரையும் பாதிப்படைய வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மாரி முத்துவின் இறப்பிலிருந்து இந்த சீரியலின் கதை வேறு விதமாக பயணிக்க தொடங்கியது.
அதனாலையே ரசிகர்களுக்கு சீரியல் அவ்வளவு திருப்தியை கொடுக்கவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஒன்று வெளியாகி வருகிறது. அதில் எதிர்நீச்சல் சீரியல் முடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது, ஜூலை எட்டாம் தேதி கிளைமாக்ஸ் எபிசோடு இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இது இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது. இதுவரைக்கும் சீரியலை கழுவி ஊற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட இன்று இந்த பதிவு வெளியான பிறகு சீரியலை நினைத்து பீல் பண்ணி வருகிறார்கள். அதோடு சீரியலில் கதையை மாற்றினால் மட்டும் போதுமே என்பது பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று சீரியலில் விசாலாட்சியாக நடிக்கும் நடிகை சத்யபிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நான் "ஆர்டிஓ ஆபிஸில் இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிங்க பார்ப்போம்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
இதற்கு பல ரசிகர்கள் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதில் அதிகமானோர் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? என்று கேள்வி கேட்க அதற்கு சோகமான எமோஜியை சத்ய பிரியா பதிலாக கொடுத்திருக்கிறார். அதில் yours_ balaji என்ற ரசிகர், "அம்மா எல்லோரும் சொல்றாங்க எதிர்நீச்சல் சீரியல் முடிய போகுதுன்னு, நீங்க அதற்கு பதில் சொல்லுங்க" என்று கேட்க அதற்கு சத்யபிரியா "ya" என்று பதில் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications