Ethirneechal Serial: திடீரென முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. போதும்டா சாமி.. சேனல் போட்ட ஒரேபோடு!
சென்னை: சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'எதிர்நீச்சல்' சீரியல், ஆரம்பத்தில் பெண்கள் முன்னேற்றம், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்ற கான்செப்ட்டோட வந்தது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் சிக்கிய நான்கு பெண்கள், தடைகளை மீறி வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையோடு தொடங்கிய இந்த சீரியல், முதல் சில மாதங்களில் ரசிகர்களை நன்றாக கட்டிப்போட்டது.
குறிப்பாக 'ஆதி குணசேகரன்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த விதம் சீரியலுக்கே ஒரு உயிர். காமெடி கலந்த நக்கல் பேச்சு, டயலாக் டெலிவரி, மிரட்டல் எல்லாமே சேர்ந்து அந்த கேரக்டரை பட்டிதொட்டியெங்கும் பேச வைத்தது. டிஆர்பி ரேட்டிங்கிலும் 'எதிர்நீச்சல்' அப்போது சக்கைப்போடு போட்டது.

மாரிமுத்து மறைவு
2023-ம் ஆண்டு மாரிமுத்துவின் திடீர் மறைவு, இந்த சீரியலுக்கே பெரிய அதிர்ச்சி. "இனி எதிர்நீச்சல் எப்படி போகப் போகுது?"னு ரசிகர்கள் அப்பவே கேள்வி எழுப்பினாங்க. அவருக்குப் பதிலாக வேலராம மூர்த்தி கொண்டு வரப்பட்டாலும், மாரிமுத்து கொடுத்த அந்த தாக்கத்தை மீண்டும் உருவாக்க முடியலன்னு பலரின் கருத்து. இதன் விளைவாக 2024-ம் ஆண்டு முதல் பாகம் முடிவுக்கு வந்தது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
இதுக்குப் பிறகு 'எதிர்நீச்சல் தொடர்கிறது' என்ற பெயரில் இரண்டாம் பாகம் ஆரம்பிச்சாங்க. ஆனா பெயர் மட்டும் தான் தொடர்கிறது... கதையோ அதே இடத்திலேயே நின்றுட்டு சுழற்சி அடிச்சுக்கிட்டு இருக்கு.
முதல் பாகத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா விலகியதால், அந்த ரோலில் பார்வதி வந்தார். ஆனாலும் கேரக்டர் மாற்றம், கதை மாற்றம் எதுவுமே பெரிய பாசிட்டிவ் இம்பாக்ட் கொடுக்கல. ஒரு வருடம் கடந்தும், முதல் பாகம் கொடுத்த தாக்கம் இதுல இல்லையேன்னு ரசிகர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
ஒவ்வொரு வாரமும் தோல்வி தான்
இந்த சீரியல் "பெண்கள் முன்னேற்றம்"ன்னு சொல்லிக்கிட்டு ஆரம்பிச்சது. ஆனா எபிசோடு பார்த்தா, ஒவ்வொரு முயற்சியிலும் பெண்கள் தோற்கிறார்கள்,
கடைசில எல்லா முடிவும் ஆண்கள்தான் எடுக்கிறார்கள், "இந்த வீட்டுப் பெண்கள் எத்தனை வருடம் ஆனாலும் முன்னேறவே முடியாது"ன்னு திரும்ப திரும்ப கதை சொல்லுற மாதிரி போய்க் கொண்டிருக்கிறது.
கொலை, கடத்தல், தலைமறைவு, பழிவாங்கல் - இதே சைக்கிளை திரும்ப திரும்ப காட்டி, "இது சீரியலா, கிரைம் பேட்ரோலா?"னு கேட்குற அளவுக்கு ரசிகர்களுக்கு தலைவலி வந்துடுச்சு. பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில், அவர்களை ஒவ்வொரு இடத்திலும் தோற்கடித்து, ஆண்களிடம் அடிமைப்படுத்துற மாதிரி கதை போகுது என்ற குற்றச்சாட்டும் அதிகரிச்சுட்டு இருக்கு.
மறு ஒளிபரப்பு கூட கட்
இதெல்லாம் சேர்ந்ததோட, 'எதிர்நீச்சல் தொடர்கிறது' டிஆர்பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறதாம். இதன் விளைவாக, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் காலை 8.30 மணி மறு ஒளிபரப்பு இனி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 2 முதல் மறு ஒளிபரப்பு கிடையாது என்பதால், "மக்களே காலையிலேயே இதைப் பார்த்து தலைவலி எடுத்துக்க வேண்டாம்"னு சன் டிவியே முடிவு பண்ணிட்ட மாதிரி தான் இருக்கு என்ற கலாய்ப்புகளும் சமூக வலைதளங்களில் பறக்குது.
ரசிகர்களின் மனநிலை
ஒருகாலத்தில் குடும்பத்தோட சேர்ந்து ஆர்வமா பார்த்த 'எதிர்நீச்சல்', இப்போ பலருக்கு "டிவி ஆன் பண்ணா வரும் ஒரு சீரியல்" என்ற நிலைக்கு வந்துடுச்சு. கதையை முன்னேற்றாமல் ஒரே விஷயத்தை சுத்தி சுத்தி காட்டுறதால், ரசிகர்கள் சலிப்படைந்து விட்டார்கள்.
"பெண்கள் முன்னேற்றம் காட்டுறீங்களா? ஒரு கேரக்டரையாவது ஜெயிக்க விடுங்க", "இந்த வீட்டுப் பெண்கள் மட்டும் எத்தனை வருஷம் ஆனாலும் முன்னேறவே முடியாதா?" "ஒரு நாள் சந்தோஷமா முடிஞ்ச எபிசோடு வருமா?" இப்படி தான் இப்போ 'எதிர்நீச்சல்' குறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ் ஓடிக்கிட்டு இருக்கு.
ஒரு காலத்தில் டிஆர்பியை தள்ளிக் கொண்டு போன 'எதிர்நீச்சல்', இப்போ கதை தள்ளாடி, ரசிகர்களின் பொறுமையையே சோதிக்குற நிலைக்கு வந்துட்டது. உண்மையிலேயே பெண்கள் முன்னேற்றம் பேசணும்னா, கதையிலாவது பெண்களை கொஞ்சம் ஜெயிக்க விடுங்க சார்... இல்லன்னா இந்த 'எதிர்நீச்சல்' சீக்கிரமே முழுக்க மூழ்கிடும் அபாயம் தான் அதிகம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications