எதிர்நீச்சலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்.. அதுவும் எபிசோடுக்கு முன்னாடியே.. வீடியோவே லீக் ஆயிடுச்சே
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதுவரைக்கும் இல்லாத வகையில் இப்போது எபிசோடுக்கு முன்பே இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள் youtubeபில் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான பிறகு தான் youtube இல் ஹைலைட்ஸ் வீடியோவாக வெளியாகும்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாவதற்கு முன்பு குணசேகரனை போலீஸ் விசாரிக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. டிஆர்பியில் முக்கிய இடத்தில் இருந்தது இளைஞர்களையும், ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை எதிர்நீச்சல் சீரியலையே சாரும்.அந்த அளவிற்கு முன்னணியில் இருந்த சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு கதை வேறு விதமாக பயணிக்க தொடங்கியதும் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எப்போதும் இந்த சீரியலில் வில்லன் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகிகள் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அதோடு வில்லன் ஜெயிப்பதால் அவர்தான் கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கிறார் என்ற கருத்து ரசிகர்களின் மத்தியில் இருந்தது. அதனாலேயே இந்த சீரியலில் டிஆர்பியும் சரிவடைய தொடங்கி இருக்கிறது. கடந்த மாதத்தில் இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்த நிலையில் இப்போது நான்காவது இடத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சீரியலில் கதையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும வீட்டு பெண்கள் வாய் சவடால் மட்டுமே போட்டுக் கொண்டிருந்த நிலையில் இப்போது அவர்களுக்கு பாசிட்டிவான கதை நகர தொடங்கி இருக்கிறது. அப்பத்தா நிலைமை என்ன என்பது தெரியாமல் பெண்கள் இருந்தாலும் குணசேகரனுக்கு எதிராக சக்தி மற்றும் ஜனனி இருவரும் அப்பத்தா கேஸ் ரீ இன்வெஸ்டிகேஷன் செய்வதற்காக நீதிபதியிடம் மனு கொடுத்து இருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து இப்போது குணசேகரன், ஞானம், கதிர், கரிகாலன் என நான்கு பேரையும் போலீசில் நேற்று விசாரிக்க வீட்டிற்கு வந்திருந்தது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் தன்னுடைய தம்பிமார்களோடு போலீஸ் விசாரணைக்கு வீட்டை விட்டு கிளம்பி போயிருப்பார். அப்போது சக்தி மற்றும் ஜனனியிடம் நான் திரும்பி வரும்போது இந்த வீட்டிற்குள் இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு போயிருந்தார்.
இப்படியாக சீரியல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இன்று எபிசோடு வெளியாவதற்கு முன்பே அதன் ஹைலைட்ஸ் யூடியூபில் வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனிடம் மீண்டும் போலிஸ் விசாரிக்க அதனால் கோபமான கரிகாலன் சார் இதைத்தானே ஏற்கனவே நீங்க விசாரிச்சீங்களே மறுபடியும் இதையே விசாரிக்கீங்க என்று கேட்கிறார்.
அப்போது குணசேகரன் இவங்க எஸ் டி ஆர் இடம் பணம் வாங்கி இருப்பாங்க வந்த விசுவாசத்துக்காக மீண்டும் விசாரிக்கிறாங்க என்று சொல்ல எங்களுக்கு பணம் எஸ்.கே.ஆர் தரவில்லை, நீங்களும் தரவில்லை. எங்களுக்கு கவர்மெண்டில் இருந்துதான் சம்பளம் வருது. அதுக்கு நியாயமா நாங்க வேலை பாக்குறோம் அவ்வளவுதான் என்று சொல்கிறார்.
அதோடு உங்க அப்பத்தா எப்படி மயக்கம் போட்டு விழுந்தாங்க என்று போலீஸ் கேட்கின்றனர். அதற்கு ஞானம் அது எப்படின்னு தெரியல வீட்டுக்குள்ள மயக்கமா இருந்தாங்க ஜனனி வந்து எங்களை கூப்பிட்டதும் நாங்க எல்லாரும் ஓடி போனோம் என்று சொல்கிறார். அதற்கு போலீஸ் அதற்கு முன்பு கடைசியா அப்பத்தா உங்க அண்ணன் கிட்ட தானே பேசி இருக்காங்க.
அப்போ ஏதாவது சொன்னாங்களா? என்று துருவி துருவி விசாரிக்கிறார். இப்படியாக இன்றைய ஹைலைட்ஸ் வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டின் டிஆர்பி அதிகரிப்பதற்காக சன் டிவி புதுவிதமாக முயற்சி எடுத்து இருக்கிறது. இதற்கு பலன் என்ன கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications