எதிர்நீச்சல் "சாதனை”.. அதுவும் "21.2 நிமிடம்” வேற லெவல்.. அட இதுதான் காரணமா? சூப்பர் தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் பழையபடி அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலுக்கு இருந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் கதை குறித்து சில விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அதனால் டிஆர்பி குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் விறுவிறுப்பு கூடி எதிர்பார்க்காத சாதனையை இந்த வார டிஆர்பியில் "எதிர்நீச்சல்" சாதித்திருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலை இயக்குனர் திருசெல்வம் பல வருடங்களுக்குப் பிறகு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இவர் இயக்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஒளிபரப்பான கோலங்கள் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு இந்த எதிர்நீச்சல் சீரியலுக்கும் ஆரம்பத்தில் இருந்தே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக இந்த சீரியல் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து அதிகமான வரவேற்பு கிடைத்திருந்தாலும் சில மாதங்களாக ஆதிரை காதல் டிராக் கொஞ்சம் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி இருந்தது. இதனால் இந்த சீரியல் டிஆர்பியில் சில வாரங்கள் குறைய தொடங்கியிருந்தது. இந்த நிலையில் இப்போது ஆதிரையின் திருமண டிராக் முடிவுக்கு வர இருக்கிறது.
அதன் காரணமாக டிஆர்பி இப்போது தாறுமாறாக எகிற தொடங்கி, இந்த வார டாப் 10 சீரியல்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை எதிர்நீச்சல் சீரியல் பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியல் நான்காவது மூன்றாவது இடங்களில் இருந்திருக்கிறது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
அதுவும் முதல் இடத்தில் இருக்கும் கயல் சீரியல் 9.90TVR அளவு பெற்றிருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் 9.29 TVR அளவை பெற்றிருக்கிறது. இந்த வருடத்திற்கான 24 வது வாரத்தில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் அதே நேரத்தில் இன்னொரு சாதனையும் இந்த சீரியல் செய்திருக்கிறது.
அதாவது தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் அதிகநேரம் பார்க்கப்பட்ட சீரியல் ஆக இது வந்திருக்கிறது. அதுவும் 21.2 நிமிடங்கள் இந்த சீரியல் பார்க்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் இந்த சீரியல் புது சாதனையை படைத்திருப்பதாக இந்த சீரியல் அணியினரும் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு காரணமாக கடந்த வாரத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளோடு இருந்த ஜீவானந்தம் என்ட்ரி அமைந்ததும், அதுபோல கதிர் மற்றும் கரிகாலன், ஜான்சி ராணி டான்ஸ் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்ததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. எப்படியோ இந்த சீரியல் டிஆர்பி யில் ஏறு முகம் காட்டி உச்சத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதுவும் பிரமோ வெளியாகி 7 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் என்பதும் ஒரு சாதனைதான். அதற்குக் காரணம் ஆதிரை கழுத்தில் யார் தாலி கட்ட போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று கரிகாலன் தாலி கட்டி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications