எதிர்நீச்சல்: முன்னாள் காதலனை அப்பாவோடு சந்திக்கும் ஈஸ்வரி..அதிர்ச்சியில் குணசேகரன்..திடீர் டுவிஸ்ட்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தை ஈஸ்வரி தன்னுடைய அப்பாவோடு சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் இனி ஈஸ்வரிக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது குணசேகரனுக்கு தெரியவரும் நிலையில் என்ன மாதிரி பிரச்சனை வரப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இனி ஈஸ்வரி குணசேகரனுக்காக ஜீவானந்தத்தை எதிர்க்க போகிறாரா? அல்லது ஜீவானந்தம் பக்கத்தில் நியாயம் இருக்கிறது என்று குணசேகரனுக்கு எதிராக நிற்க போகிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தம் பட்டமாளின் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார்.இதனால் இனி என்ன பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் குணசேகரனுக்கு ஜீவானந்தம் அடுத்தடுத்த பிரச்சனைகளை கொடுக்க தொடங்கி விட்டார். சொந்த கம்பெனியிலிருந்து ஜீவானந்தத்தால் குணசேகரன் வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனக்கு நெஞ்சு வலி வந்தபோது பக்கவாதம் வந்து தன்னுடைய கை செயலிழந்து விட்டது என்று குணசேகரன் வீட்டில் உள்ள அனைவரிடமும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பை உண்மை என்று நம்பிய ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் தான் நேரடியாக பேச வேண்டும் என்று கௌதமிடம் போன் நம்பர் வாங்கி ஜீவானந்தத்திற்கு போன் செய்து பேசுகிறார்.
அப்போது ஜீவானந்தம் நான் உங்களிடம் குணசேகரனின் மனைவி என்பதற்காக பேசவில்லை. ஈஸ்வரி என்று வார்த்தைக்காக தான் பேசுகிறேன் ஈஸ்வரி எனக்கு நெருக்கமானவரின் பெயர் என்று சொல்லி இருந்தார். அதே நேரத்தில் அந்த குரலை கேட்ட ஈஸ்வரியும் திரும்பத் திரும்ப பேசியதை யோசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் தன்னுடைய அப்பா வீட்டிற்கு வந்து தன்னுடைய சொந்த இடத்தில் வேலி போட வேண்டும் என்று ஈஸ்வரியை கூப்பிட்ட நிலையில் ஈஸ்வரி அப்போது ஜீவானந்தத்தை பற்றி அவரிடம் சொல்ல, நானும் இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே என்று ஈஸ்வரியின் அப்பாவும் சொல்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரன் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக முன்னாள் போலீஸ் அதிகாரியான கிள்ளிவளவணை சந்தித்து விட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஈஸ்வரி இந்த சீரியலில் பர்ஹானா உடன் எடுத்த புகைப்படம் instagramல் வைரலாகி வருகிறது. அதில் ஜீவானந்தம் அந்த இடத்தில் தான் இருக்கிறார். அப்போது ஈஸ்வரியும் அவருடைய அப்பாவும் அங்கே இருக்கின்றனர். அதனால் இந்த வாரத்திற்குள் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து விடுவார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இவர்கள் இருவரும் சந்திக்கும்போது இனி என்ன மாதிரி பிரச்சனை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications