எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் “சொதப்பல்”..இதை கொஞ்சம் கவனிச்சி இருக்கலாமே.. "அந்த” வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் ஜனனியிடம் பேசிய வார்த்தை குறித்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தன்னிடம் கேள்வி கேட்ட ஜனனிக்கு பதில் சொல்லாமல் ஜீவானந்தம் சம்பந்தமே இல்லாமல் பேசிய வார்த்தைகள்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

அப்படி எதிர்நீச்சல் சீரியலில் என்னதான் சொதப்பல் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial Jeevanandams words without answering Janani who asked him a question

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் வரைக்கும் இந்த சீரியல் குறித்து தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல திரைத்துறையில் மின்னிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற பிரபலங்கள் வீட்டிலும் இந்த சீரியல் பார்க்கப்படுவதாக கூறி இருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு தற்போதைய சூழ்நிலையில் ட்ரெண்டிங்கில் வலம் வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் சில சொதப்பல்கள் நடந்திருப்பதை காண முடிகிறது. சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ஜீவானந்தம் என்கிற பெயரை பட்டம்மாள் கூறியதிலிருந்து யார் அவர் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் இந்த கேரக்டரில் இயக்குனர் திருச்செல்வம் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். கடைசியில் அப்படித்தான் நடந்திருக்கிறது.

ஆனால் ஆரம்பத்தில் இருந்த இந்த கேரக்டருக்கான வரவேற்பு இப்போது ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் ஆக மாறி இருக்கிறது. ஜீவானந்தம் நல்லவரா? கெட்டவரா? என்று யூகிக்க முடியாத வகையில் தான் இப்போதைய நிலவரம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லனாக இருக்கும் குணசேகரனுக்கு அமோகமான ஆதரவு ரசிகர்களின் மத்தியில் கிடைத்திருக்கிறது. அதனாலையே குணசேகரனை எதிர்க்கும் ஜீவானந்தத்தை அதிகமாக மீம்ஸ்களில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial Jeevanandams words without answering Janani who asked him a question

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜீவானந்தத்தின் பெயருக்கு பட்டமாள் 40% ஷேர் மாறியதும் குணசேகரனின் கம்பெனியில் இருந்து கொண்டு குணசேகரனையும் அவருடைய குடும்பத்தையும் வெளியே துரத்தி இருப்பார். அப்போது குணசேகரனை பார்த்து நீ வீட்டுக்குள் பெண்களை அடிமையாக வைத்துக் கொண்டு வெளியே பெண்களுக்கு உதவிகள் செய்வதுபோல நாடகம் நடிச்சுக்கிட்டு இருக்கியா என்று கேள்வி கேட்பார்.

அது மட்டுமல்லாமல் ஜனனி ஜீவானந்தத்திடம் கேள்வி கேட்கும்போதும் அதற்கு நான் யார் என்பதை பற்றி தெளிவாக கூறாமல், நீ இன்னைக்கு என்கிட்ட பேசுறியே அதே மாதிரி குணசேகரன் உன்னை அவமானப்படுத்தி வீட்டு வாசலில் உட்கார வைத்து தண்ணீர் ஊற்றிய போது கேள்வி கேட்டியா? இல்ல, உன் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி குணசேகரனும் உன் வீட்டு ஆண்களும் பேசும்போது கேள்வி கேட்டியா? சக்தி டைவர்ஸ் நோட்டீஸில் கையெழுத்து போட்டு உன்னை வீட்டை விட்டு துரத்தும் போது கேள்வி கேட்டியா? என்று பல கேள்விகளை அடுத்தடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஜீவானந்தத்திற்கு குணசேகரனின் வீட்டில் நடந்த இத்தனை பிரச்சனைகளும் தெரிந்திருக்கிறது. அதே நேரத்தில் "இதுதான் ஜனனி என்பது தெரியவில்லையாம்..!?" இது நம்புற மாதிரியா இருக்கு..? மீட்டிங் காலில் எல்லோரும் உட்கார்ந்து இருக்கும்போது ஜனனி ஜீவானந்தத்திடம் நீங்க யாரு? அப்பத்தா கைரேகையை எடுத்துட்டு சொத்தை ஏமாற்றி உங்க பேருக்கு எடுத்துக்கிட்டதால இங்க வந்து பேசுறீங்களா? என்று கேள்வி கேட்டதும் ஜனனி யாருன்னு தெரியாமல் பர்ஹானாவை பார்க்க அவர் இந்த பொண்ணு தான் ஜனனி என்று கூறுவார்.

Ethirneechal Serial Jeevanandams words without answering Janani who asked him a question

அப்போதுதான் இதுதான் ஜனனி என்பது ஜீவானந்தத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் இந்த கதையில் மேலே சொன்ன கேள்விகளை ஜனனியை பார்த்து கேட்கும் போது மட்டும் ஜீவானந்தத்திற்கு ஜனனியை ஆரம்பத்திலேயே தெரிந்திருக்கிறது. இது எடிட்டிங் மிஸ்டேக்கா? அல்லது இந்த சொதப்பலை கவனிக்காமல் விட்டுவிட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனால் இதை ரசிகர்கள் கவனித்து இருக்கிறார்கள்.

அதுபோல மீட்டிங் ஹாலில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஜீவானந்தத்தின் பிஏ பர்ஹானா மற்றும் புது உதவியாளர் இன்னொரு பெண்ணும் நின்று கொண்டிருப்பார்கள். இது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நீங்கள் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஆச்சே அப்போ அந்த இரண்டு பெண்களுக்கும் ஏன் ஒரு சேர் கொடுக்கவில்லை என்றும் கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்ற சொதப்பல்கள் இல்லாமல் இருந்தால் இந்த சீரியல் இன்னும் சிறப்பாக இருக்கும் இதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+