எதிர்நீச்சல்: சூட்டிங் முடிந்ததும் ஹாஸ்பிடல் ஓடுவேன்..ஒரே இரவில் மாறிய வாழ்க்கை..ஜான்சி ராணி உருக்கம்
எதிர்நீச்சல் சீரியலில் சூட்டிங் முடிந்ததும் நான் ஹாஸ்பிடல் தான் போவேன் என்று ஜான்சி ராணி கூறி இருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் விஜே காயத்ரி நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி முதல் முறையாக உருக்கமாக காயத்ரி பேசியிருக்கிறார்.
ரசிகர்கள் தன்னை இந்த அளவிற்கு மதித்தாலும் தனக்கு ஏற்பட்ட சோகத்தை பற்றி நெகிழ்ச்சியோடு எதிர்நீச்சல் ஜான்சி ராணி கூறியிருக்கிறார்.

எதிர்நீச்சல் ஜான்சி ராணி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சமீப காலமாக சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைய தொடங்கிவிட்டனர். சில வாரங்களாக அறிமுகமாகி இருக்கும் ஜான்சி ராணிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறார்கள். இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் என்றால் அது குணசேகரன் கேரக்டராக இருக்கும். ஆனால் தற்போது குணசேகரனை ஆட்டி வைக்கும் கேரக்டராக ஜான்சி ராணி அறிமுகம் ஆகி இருக்கிறார்.

வாய்ப்பு கிடைத்தது
கரிகாலனின் அம்மாவாக நடித்து வரும் ஜான்சி ராணி கேரக்டரில் நடிக்கும் நடிகையின் பெயர் விஜே காயத்ரி தான். இவர் சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரியஸில் நடித்திருக்கிறார். அந்த சீரியஸ்க்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தான் இவரோடு பணிபுரியும் ஒரு பெண்ணால் திடீரென எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக இவருடைய புகைப்படத்தை அனுப்ப சொன்ன போது இவர் தன்னுடைய மார்டன் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார். அப்போது அந்த புகைப்படத்தை பார்த்த இயக்குனர் இது செட்டாகாது என்று கூறிவிட்டாராம்.

எதிர்பாராத பாராட்டு
பிறகு தான் நடித்த அயலி திரைப்படத்தில் தன்னுடைய வீடியோக்களை அனுப்பி இருக்கிறார். அதை பார்த்ததும் அடுத்த நாள் காலையில் சூட்டிங்கில் கலந்து கொள்ள சொல்லி இருக்கிறார்கள். சூட்டிங் வந்தபோது அங்கே ஏற்கனவே நடித்து பிரபலமாக இருந்த மாரிமுத்து சத்திய பிரியா, பிரியதர்ஷினி என மொத்த குடும்பமும் இருக்கும்போது அங்கே அறிமுகமாகும் காட்சி இவருக்கு கிடைத்திருக்கிறது. அப்போது மாரிமுத்து பார்த்ததும் ஜான்சி ராணி மிரண்டு போயிருக்கிறார். இவர் இருக்கிறாரே நாம் எப்படி நடிப்போம் என்று பயந்தாராம். ஆனால் நடித்து முடித்ததும் முதல் ஆளாக மாரிமுத்து பாராட்டியதும் இவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

வாய் வெந்து போச்சு
அது மட்டுமில்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி வெற்றிலை போடும் கேரக்டராக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் முதல் நாள் அறிமுகம் ஆகும்போது குணசேகரனிடம் தன்னுடைய இடுப்பில் இருக்கும் வெற்றிலையை எடுத்துக் கொடுத்து பாக்கு வெற்றிலை மாற்றுவது போன்று சீன் இருக்கிறது என்று இயக்குனர் கூறினாராம். உடனே ஜான்சி ராணி அப்படி என்றால் நான் வெற்றிலை போட்டால் தானே சரியாக இருக்கும் வெற்றிலை போடுபவர்கள் தானே இடுப்பில் வெற்றிலையை வைத்திருப்பார்கள் என்று சொன்னதும், அதற்கு சரி உங்களுக்கு ஓகே என்றால் போட்டுக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கூறிவிட்டாராம். அவரும் ஒரு ஆர்வத்தில் அந்த சீனில் நடிக்க என்று சொல்லிவிட்டு, வெற்றிலையை போட்ட பிறகு இவருடைய வாயெல்லாம் வெந்து போனதாம்.

அதுவும் மகிழ்ச்சிதானாம்
இதற்கு முன்பு வெற்றிலை போட்டு அனுபவம் இல்லாததால் வாய் வெந்து போய் சூட்டிங் முடிந்ததும் ஹாஸ்பிடலுக்கு தான் இவர் ஓடி இருக்கிறார். தொடர்ந்து இரண்டு நாட்கள் சூட்டிங் இருந்தால் அடுத்த வேலையாக ஜான்சி ராணி செல்வது மருத்துவமனையாக தான் இருக்கும் என்று தனக்கே உரிய கம்பீரமான குரலில் கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் குணசேகரனை ஆட்டிப்படைத்து வைக்கும் கேரக்டராக எனக்கு இருப்பது என்னுடைய நடிப்பை வெளிக்காட்டுவதாக இருக்கிறது என்றுகூறியிருக்கிறார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications