எதிர்நீச்சல்: ஆதிரையின் புடவையை உருவி அசிங்கப்படுத்தும் ஜான்சி ராணி.. விசாலாட்சி செய்த செயல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கரிகாலனோடு முதலிரவுக்கு ரெடி ஆகாமல் இருக்கிறார். அதனால் ஜான்சி ராணி கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ஜான்சி ராணி புடவை வாங்கிக்கொண்டு கொடுத்ததையும் ஆதிரை கட்டாமல் அடம்பிடித்து கொண்டு இருக்கிறார்.
இதனால் கடுப்பான ஜான்சி ராணி ஆதிரை கட்டி இருந்த புடவையை உருவி தான் வாங்கிய புது புடவையை உடுத்திக்கொள் என்று கட்டாயப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் நந்தினியும் ரேணுகாவும் கரிகாலனுக்கு போன் செய்து ஆதிரையிடம் பேச முயற்சி செய்ய ஆதிரை இனி நான் யாரிடமும் பேச மாட்டேன் என்று அனைவரையும் திட்டி போனை கட் பண்ணுகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதிரை ஜான்சிராணி வீட்டில் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். தனக்கு பிடிக்காத கரிகாலனை கட்டிக்கொண்டு விட்டதால் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருக்க அதனால் கோபமாகும் ஜான்சி ராணி ஆதிரையை திட்டிக்கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் நந்தினியும் ரேணுகாவும் ஆதிரையிடம் பேச வேண்டும் என்று கரிகாலனுக்கு போன் செய்கின்றனர். ஆனால் ஆதிரை மொத்த கோபத்தையும் நந்தினியின் மீது காட்டி திட்டுகிறார். உங்களை நம்பி தான் நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன். உங்களை எல்லாம் நம்புனது என் தப்பு தான் என்று பல காரணங்களை கூறி போனை கட் பண்ணி விடுகிறார்.
அதற்கு நந்தினி ஈஸ்வரி இந்த பொண்ணு கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேங்குது. நம்ம என்ன எல்லாம் பண்ணி இருக்கோம் அதை தெரிஞ்சுக்காம இப்படி பேசிகிட்டு இருக்கா என்று புலம்பி கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் விசாலாட்சி சக்தியிடம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுக்க சக்தி இது எனக்கு வேண்டாம் என்று சொல்கிறார்.

அதற்கு இது உங்க அண்ணனோட சம்பாத்தியம் கிடையாது. இது எனக்கு எங்க அம்மா கொடுத்தது என்று விசாலாட்சி சக்தியை சமாதானப்படுத்துகிறார்.ஏற்கனவே ஜனனிக்கு பிசினஸ் தொடங்குவதற்காக நாங்கள் லோன் போட்டு இருக்கோம். அதில் எனக்கு லோன் வந்து இருக்கு. அந்த பணம் போதும் என்று சொல்ல, ஆதிரையை நீதான்ப்பா நல்லா பாத்துக்கணும். நான் உன்னை தான் நம்பிகிட்டு இருக்கேன் என்று விசாலாட்சி சக்தியிடம் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
பிறகு ரேணுகா, நந்தினி, ஜனனி மூவரிடமும் நான் உங்கள தப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்கோங்க. நான் உங்களை எப்பவுமே கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல. எதையாவது பேசிடுவேன் ஆனா மனசுக்குள்ள நீங்க நல்லா இருக்கணும்னு தான் நினைச்சுக்கிட்டு இருப்பேன் என்று விசாலாட்சி பீல் பண்ணி பேசுகிறார்.
அதே நேரத்தில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றார் ஜான்சி ராணி.அதற்கு ரூமிற்குள் போக மாட்டேன் என்று ஆதிரை அடம் பிடிக்க, ஜான்சி ராணி மிரட்டி உள்ளே அனுப்பி வைத்து விடுகிறார். கரிகாலனிடம் ஆதிரை என்னை தனியா விட்டுரு ப்ளீஸ் என்று கெஞ்ச, முதலில் கரிகாலன் முடியாது பேபி என்று பேசிக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் கோவமான ஆதிரை கத்தியை எடுத்து நானே என்னை கழுத்தறுத்துக்கிட்டு சாகப் போறேன் என்று மிரட்ட பிறகு கரிகாலன் அங்கேயே தூங்கி விடுகிறார்.

இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் வீட்டு மருமகளிடம் நீங்கதான் போய் ஜான்சிராணி இடம் மன்னிப்பு கேட்டுட்டு கரிகாலனை மாப்பிள்ளை விருந்துக்கு அழைச்சிட்டு வரணும் என்று குணசேகரன் சொல்ல ரேணுகா, நந்தினி எல்லோரும் முதலில் போகமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிறகு ஆதிரைக்காக போகலாம் என்று கூறி கிளம்புகின்றனர். அங்கே சென்று ஆதிரிடம் பேச ஆதிரை உங்கள் யாரிடமும் நாம் பேசமாட்டேன் என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து நந்தினி அருணுக்கு ஆக்சிடெண்ட் ஆகி மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் விஷயத்தை சொல்ல, ஆதிரை தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். பிறகு எப்படியாவது கரிகாலனை டைவர்ஸ் செய்து விட்டு நாம அடுத்து என்ன பண்ணனுமோ அதை பண்ணலாம் நீ அழாத என்று சமாதானம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஜான்சி ராணி கதவை தட்டுகிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இன்றைய எபிசொட்டில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications