எதிர்நீச்சல்: போகிற போக்கில் குணசேகரன் சொல்லிட்டு போன வார்த்தை.. முடிவு நாளில் கூட இப்படியா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இன்று ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதில் குணசேகரனுக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும் நிலையில் ஜெயிலுக்கு போகும் போது எதிர்நீச்சல் பெண்களிடம் சில விஷயங்களை சொல்லிவிட்டு போகிறார்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் சீரியலே பார்க்காத ரசிகர்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தனர். அதுபோல இளம் தலைமுறையினர்கள் கூட இந்த சீரியல் பார்த்து வருவதாக பல இடங்களிலும் பேசி இருந்தனர். ஆனால் இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்புக்கு பிறகு சீரியல் தரப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.

இது அதிகமான ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது. சீரியலின் கதையை சுவாரஸ்யமாக கொண்டு போக வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பல நடிகர்கள் இந்த சீரியலில் அறிமுகம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் சீரியலில் விறுவிறுப்பு இருந்தாலும் தொடங்கப்படும் பிரச்சனைகள் ஒன்று கூட முடிவுக்கு வராமல் இருந்தது, சீரியல் ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது.
அது போல ஒவ்வொரு முறையும் எதிர்நீச்சல் பெண்கள் தோற்றுக் கொண்டே இருந்தது சீரியல் ரசிகர்களை அதிகமாக வருத்தப்பட வைத்தது. இதனாலேயே இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் சமீபத்தில் வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலின் இயக்குனர் தான் சீரியலை முடிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். இந்த சீரியல் நடிகர்களும் தொடர்ச்சியாக தங்களுடைய இறுதி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் மற்றும் இத்தனை வருடங்களாக இந்த சீரியலில் இருந்த நினைவுகள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் இன்று ஜூன் எட்டாம் தேதியோடு முடிவுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் ஏற்கனவே இறந்து போய்விட்டார் என்று கூறியிருந்த அப்பத்தா மீண்டும் கோர்ட்டிற்கு வந்து தன்னை குணசேகரன் கொலை செய்ய பார்த்தான், ஆனால் ஜீவானந்தம் காப்பாற்றிவிட்டார் என்று குணசேகரனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதனால் குணசேகரனுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஜனனி தொடங்கிய பிசினஸ் மற்றும் ஈஸ்வரியின் எலக்சன் போன்றவை என்ன ஆச்சுன்னு தெரியலையே என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்த நிலையில் இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இன்றைய எபிசோடு இருக்கப்போகிறது என்று அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் சீரியல் முடிவு தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஃபீல் பண்ணி வருகிறார்கள். மறுபக்கத்தில் இந்த சீரியலை இத்தனை நாட்களாக கழுவி ஊத்திய ரசிகர்கள் கூட இந்த சீரியலில் சுவாரசியம் குறைய தொடங்கியதுமே சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆனால் இதேபோல சில சீரியல்கள் பல வருடங்களாக சவ்வு போல இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். கதையே இல்லாமல் அவர்கள் கதையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் திருச்செல்வம் எடுத்த மாதிரி தைரியமான முடிவை வேறு எந்த சீரியலிலும் எடுக்கவில்லையே என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
குணசேகரன் ஜெயிலுக்கு போகிறார் என்பதால் அண்ணன் தம்பிகள் எல்லோரும் கோர்ட் வாசலில் குணசேகரனை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கின்றனர். சக்தி மட்டும் பெண்கள் அணியில் இருக்கிறார். அப்போது குணசேகரன் ஞானம் மற்றும் கதிரிடம் அண்ணனுக்கு ஒன்னுஎன்றதும் நீங்க வந்திங்க பாத்தீங்க.. அதை நினைச்சு எனக்கு சந்தோஷமா இருக்கு என்று சொல்லிக்கொண்டு,
அப்பத்தா மற்றும் வீட்டு பெண்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து படிச்சவங்க கடைசியில் ஜெய்ச்சிட்டீங்க. முட்டா பையன் நான் தோற்றுப் போய் நிற்கிறேன். இப்ப நான் உங்களை விட்டு விலகி விட்டேன். நீங்க நெனச்சபடி வாழுங்க ஆனால் ஒன்று... என்று மேலும் சில வார்த்தைகளை கூறுகிறார். அதைக் கேட்டு எதிர்நீச்சல் பெண்களும் ஃபீல் பண்ணுவது போல பார்க்கிறார்கள். இதனால் இன்று கடைசி நாளில் குணசேகரன் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications