எதிர்நீச்சலில் கூடும் க்ரைம் ரேட்.. மீண்டும் மாறிய கதை.. இதற்கு முடிவே இல்லையா? விளாசும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் மே 15 ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதற்கு கீழே அதிகமான நெகட்டிவ் கமாண்டுகள் தான் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் புதியது புதியதாக வில்லன்கள் மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் வில்லன்கள் தான் கதாநாயகன் போல வெற்றி அடைந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக சீரியல்களாக இருந்தாலும் சரி திரைப்படங்களாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் வில்லன் ஜெயித்தால் அடுத்த கட்டத்தில் கதாநாயகன் ஜெயிப்பது தான் காலம் காலமாக இருக்கிறது.

பொதுவாக சீரியல்கள் மற்றும் திரைப்படங்களோடு மக்கள் தங்களுடைய வாழ்க்கையை பொருத்தி பார்ப்பதாலையே பல சீரியல்கள் தங்களுடைய ரியல் லைப்பில் இருப்பது போன்று இருக்கிறது என்று ரசிகர்கள் அதற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் மட்டுமே எப்போதும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் பல வில்லன்கள் புதியதாக வந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஏற்கனவே குணசேகரன் எதிர்நீச்சல் பெண்களை மட்டம் தட்டி ஜெயிக்க விடாமல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவரிடம் சவால்கள் மட்டுமே விடும் ஜனனிக்கு மாதத்திற்கு ஒரு வில்லன் என்ட்ரி கொடுத்து விடுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய சித்தப்பா குடும்பம் காட்டப்பட்டது. அதிலும் அவருடைய தம்பியாக கிருஷ்ணசாமி மெய்யப்பன், ராமசாமி மெய்யப்பன் என்று இரண்டு பேர் பண்ணிய அக்கப்போரு போதாது என்று இப்போது பல போராட்டங்களை தாண்டி ஜனனி புது கம்பெனிக்கு போயிருக்கும் நிலையில் அங்கும் அவர் அவமானப்படுகிறார்.
எதிர்நீச்சல் பெண்கள் எப்போதுதான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இன்று வெளியான ப்ரோமோவில் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் தான் குவிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே குணசேகரனோடு சேர்ந்து கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி ஆரம்பத்தில் ஆடிய ஆட்டம் ஒரு கட்டத்தில் ஆதிரையால் முடிவுக்கு வந்தது.
பிறகு ஜனனியின் அத்தை உமையாள் வந்து குணசேகரனை அண்ணன் உறவு கொண்டாடி அவருடைய மகனுக்கு தர்ஷினியை கட்டி வைக்கலாம் என்று பிளான் போட்டார். இப்போது அதுவும் சொதப்பி விட அடுத்ததாக மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு கரிகாலன் வந்திருக்கிறார். இப்படி லாஜிக்கே இல்லாமல் இந்த கதை இன்னும் எத்தனை வருடத்திற்கு பயணிக்க போகிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில் ஜனனி புது கம்பெனிக்கு வேலைக்கு போயிருக்கும் நிலையில் அங்கும் அவருக்கு புது பிரச்சனையை கொடுத்து கதையை மாற்றப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த பல கேரக்டர்கள் எங்கே போனார்கள் என்று காணவில்லை. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications