அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு? விடை தெரிந்தது.. ஜெயிலுக்கு போகும் குணசேகரன்.. கதிர் இப்படி பண்ணிட்டாரு?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே 31ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தாவை கொலை செய்தது குணசேகரன் தான் என்று கண்டுபிடித்து விட்டதாக கொற்றவை குணசேகரனை கைது செய்து கூட்டிட்டு போகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்போடு சீரியல் மீண்டும் நகர தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே சில பிரச்சனைகள் பல மாதங்களாக இழுத்துக் கொண்டிருப்பது தான் இந்த சீரியலில் அதிர்ச்சியாக இருந்த நிலையில் இப்போது சீரியல் வேகமாக பயணிக்க தொடங்குகிறது.

அதோடு இந்த சீரியல் அடுத்த மாதத்தோடு முடிவுக்கு வந்து விடும் என்றும் கூறப்பட்டிருக்கும் நிலையில் காலையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அப்பத்தா கொலை செய்யப்பட்டாரா? அவர் உயிரோடு இருக்கிறாரா? என்ற பெரிய கேள்விகளோடு இருந்த நிலையில் அதற்கு நேற்றைய எபிசோடில் கொற்றவை விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது கொற்றவை ஜனனிக்கு போன் போட்டு உங்க வீட்டில் இருந்த அப்பத்தாவை கொலை செய்தது குணசேகரன் தான். அவர் எக்ஸ் போலீஸ் ஆபீஸரான கிள்ளிவளவன் என்பவரிடம் போனில் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அவரை நாங்கள் கைது செய்யப் போகிறோம் என்று சொல்லி இருந்த நிலையில் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த குணசேகரனை இன்று வெளியான ப்ரோமோவில் கைது செய்து வெளியே கூட்டிட்டு போகின்றனர்.
குணசேகரன் பற்றி கிள்ளிவளவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தர்ஷினி கடத்தல் வழக்கிலும் குதிரை என்பவனை புடிச்சாச்சு என்று கொற்றவை சொல்லி குருசேகரனை வீட்டிலிருந்து கூட்டி கொண்டு போகும் போது ஜனனி விசாலாட்சியிடம் உங்க மகன் சொந்த ரத்தத்தையே கொலை பண்ணிருக்கிறார் அதற்கு தண்டனை கிடைக்க வேண்டாமா? என்று கேட்க, அதற்கு விசாலாட்சி அதை நீ பார்த்தியா மடக்கி கேள்வி கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து விசாலாட்சி என் பிள்ளையை கூட்டிட்டு வர்றதுக்கு நானே போறேன் என்று ஸ்டேஷனுக்கு கிளம்பும்போது கதிர் யாரும் போக வேண்டாம் என்று வெளியே கிளம்பி போக நந்தினி ஓடி சென்று கதிர் கையைப் பிடித்து நிறுத்துகிறார். இப்படியாக ப்ரமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே குணசேகரன் தான் செய்த தப்புகளை எல்லாம் நேரடியாக தான் செய்யாமல் கதிரை வைத்துதான் செய்ய வைத்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது கதிர் நல்லவராக இருந்தாலும் ஒரு காலத்தில் தான் செய்த தப்புகளுக்காக பழியை ஏற்றுக்கொள்ளப் போகிறாரா? என்று எதிர்பார்க்க வைக்கிறது. ஜீவானந்தத்தின் மனைவியை கிள்ளிவளவனோடு சேர்ந்து கதிர் தான் கொலை செய்தது. அதுபோல அப்பத்தாவை கொலை செய்வதற்கும் குணசேகரனுடன் சேர்ந்து கதிரும் தான் பிளான் போட்டார்.
இந்த நிலையில் இப்போது குணசேகரனை போல அரசு செய்திருக்கும் நிலையில் கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி போகிறதை பார்க்கும்போது கதிர் தன்னுடைய தப்புகளை ஒத்துக் கொள்வார் என்று தான் தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications