எதிர்நீச்சல்: முன்னாள் காதலியால் குணசேகரனுக்கு வந்த பெரிய ஆப்பு.. ஈஸ்வரி எடுத்த திடீர் முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன், தேர்தலில் சாரபாலாவிற்கு எதிராக ஈஸ்வரியை நிறுத்துவதற்காக முடிவெடுத்திருக்கிறார்.

அதற்கு ஈஸ்வரி சில கண்டிஷன்களை போட அதை கேட்டு ஜனனி மற்றும் குணசேகரன் அதிர்ச்சி அடைகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத சில மாற்றங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அப்பத்தா உயிரோடுதான் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குணசேகரனை மீறி ஈஸ்வரி காலேஜுக்கு வேலைக்கு சென்று இருந்த நிலையில் அங்கே சென்ற குணசேகரன் ஈஸ்வரியை தரக்குறைவான வார்த்தைகளால் காலேஜ் பிரின்ஸ்பல் மற்றும் மாணவர்கள் முன்பு திட்டி இருந்தார்.

இதனால் என்னால் இனி இந்த காலேஜில் வேலை பார்க்க முடியாது என்று ஈஸ்வரி தன்னுடைய வேலையை வேண்டாம் என்று வந்துவிட்டார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஏற்கனவே வழக்கம் போல ஜனனி குரூப் சவால் விட்டுவிட்டு ஒன்றும் சாதிக்கவே இல்லை என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடில் குணசேகரனும் அதையே சொல்லிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு சீரியலில் இப்போது இல்லையே என்று பலரும் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் வரும் தேர்தலில் குணசேகரனை எதிர்த்து எஸ் கே ஆர் சாருபாலாவை போட்டியாளராக நிறுத்தி இருக்கிறார். முதலில் சாருபாலா நான் எலக்ஷனில் நிற்கவில்லை என்று சொல்லி இருந்தாலும் பிறகு சரி என்று சம்மதம் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் குணசேகரன் சாருபாலாவிற்கு போட்டியாக தன்னுடைய மனைவி ஈஸ்வரியை நிறுத்துவதாக கூறி இருக்கிறார். சாரு பாலாவை தோற்கடித்து எஸ் கே ஆர் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று குணசேகரன் பிளான் போட்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டு மொட்டைமாடியில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி ஈஸ்வரியிடம் அக்கா நீங்க எலக்ஷனில் நிற்க வேண்டும் என்று சொல்கிறார். இந்த நிலையில் குணசேகரனிடம் கதிர் அண்ணன் நீங்க இவங்களை எலக்சன்ல நிக்க வச்சு தேவையில்லாத வேலை பாக்குறீங்க என்று சொல்கிறார்.

அதற்கு குணசேகரன் நம்ம வீட்டு பொம்பளைங்க முன்ன நிறுத்தி பின்னாடி இருந்து நம்ம நம்ம விளையாட்டை ஆரம்பிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி இடம் வா நாம எலக்ஷனில் நிற்கப் போகிறோம் என்பதை போய் சொல்லிக்கிட்டு வரலாம் என்று கூப்பிட அதற்கு ஈஸ்வரி ஏதோ சொல்கிறார். அதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications