இனி கிடைக்காத சந்தோஷம்.. கண்கலங்கி எதிர்நீச்சல் சத்யபிரியா வெளியிட்ட பதிவு..காரணம் இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை சத்யபிரியா விசாலாட்சி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத பல புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு இந்த சந்தோஷமெல்லாம் என்னுடைய வாழ்வில் இனி கிடைக்காதது என்று தன்னுடைய சோகங்களை வெளிக்காட்டி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ஆக இருந்து வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வன் பல வருடங்களுக்கு பிறகு இயக்கி வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் குணசேகரின் அம்மாக்காக நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார். நடிகை சத்யபிரியா ஏற்கனவே திருச்செல்வன் இயக்கத்தில் பல சீரியல் களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஏழு வருடங்களாக கோலங்கள் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல தற்போதும் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கேரக்டர் தத்ரூபமாக இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு அப்பத்தா கேரக்டரில் தான் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அப்பத்தா கேரக்டர் இரண்டு மாதம் ஆகும் என்ற போது தான் இவருக்கு விசாலாட்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவும் எனக்கு பிடித்ததாக தான் இருக்கிறது என்றும் இந்த கேரக்டரில் சில நேரங்களில் பாசிட்டிவாகவும் சில நேரங்களில் நெகட்டிவ் ஆகவும் சில நேரங்களில் ஏமாளி ஆகவும் மாறும் மனநிலையில் இருப்பதால் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமண நாள் அன்று தன்னுடைய கணவரோடு மாலையும் கழுத்துமாக இருக்கும் சந்தோஷமான புகைப்படங்கள் மற்றும் தனக்கு தன்னுடைய அம்மா அப்பா சாப்பாடு ஊட்டுவது போன்ற புகைப்படங்கள் அதைத்தொடர்ந்து தான் கை குழந்தையாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் பகிர்ந்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நடிகையாகவும் முன்னாள் முதலமைச்சர் ஆகவும் இருந்த ஜெயலலிதாவோடும் தான் எடுத்த புகைப்படங்களையும், அதுபோல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையால் தான் அவார்ட் வாங்கிய புகைப்படங்களையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடன் எடுத்த புகைப்படங்கள் என பல புகைப்படங்களை பகிர்ந்து " இனி இது எல்லாம் என்னுடைய வாழ்க்கையில் கிடைக்காத சந்தோஷங்கள். இதை பார்க்கும் போது எனக்கு ஏக்கமாக இருக்கிறது" என்று கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications