காதல் "கணவரின்” வேதனையான மரணம்..சாப்பாட்டிற்கே பட்ட கஷ்டம்.."சத்யபிரியா”வின் கலங்க வைக்கும் ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி ஆக பலருடைய மனதை கவர்ந்த சத்திய பிரியா வாழ்க்கையில் பல வேதனைகள் யாருக்கும் தெரியாத ரகசியங்களாக இருக்கிறது.

நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போது வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு கணவராலும் சமூகத்தாலும் சத்திய பிரியா அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.

புற்றுநோய் பாதித்து இறந்த கணவர் அதற்கு பிறகு தன்னுடைய குழந்தைகளை வளர்க்க சத்திய பிரியா பட்ட கஷ்டம் அதிகமாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தான் சத்திய பிரியா சாதித்து இருக்கிறார்.

Ethirneechal serial Sathya Priyas life are secrets that no one knows Many pains

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது விசாலாட்சியாக சத்யபிரியா நடித்துக் கொண்டிருந்தாலும் இதற்கு முன்பு இதே இயக்குனரின் தயாரிப்பில் வெளியான "கோலங்கள்" சீரியலில் 5 வருடங்களாக நடிகை தேவயானியின் அம்மாவாக நடித்திருக்கிறார். ஏற்கனவே தேவயானியின் அம்மாவாக சூரிய வம்சம் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அதிகமாக ரசிகர்களை மனதை கவர்ந்தது கோலங்கள் சீரியல் அம்மா தான்.

சத்யப்ரியா இதுவரைக்கும் 350 இருக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் தமிழே தெரியாத ஊரிலிருந்து தான் இங்கு வந்து தமிழ் கற்று இப்போது இங்கு உள்ள தமிழ் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தமிழில் சூப்பராக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய வாழ்க்கையில் பல சோகங்கள் ஒளிந்து இருக்கிறது.

அந்த வகையில் சத்யபிரியாவின் சொந்த ஊர் ஆந்திரா தானாம். அவருடைய அப்பா ஒரு ஓட்டலை சொந்தமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு கலைமீதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனாலேயே நாடக கம்பெனி ஒன்றையும் வைத்து நடத்தி வந்திருக்கிறார். அந்த நிலையில் அவருடைய வீட்டில் மூத்த மகளாக சத்யபிரியா அப்போவே டான்ஸில் படு சுட்டியாக இருந்திருக்கிறார்.

இவருக்கு இருந்த திறமையால் தான் இவருக்கு நடிகர் கமல்ஹாசனோடு பீகாரில் சேர்ந்து ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டான்ஸ் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்த சத்திய பிரியாவிற்கு 1974 ஆம் ஆண்டு ஹிந்தியில் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த படம் பாதியில் நிறுத்தி விட்டார்களாம்.

அதைத் தொடர்ந்து மஞ்சள் முகமே வருக என்ற திரைப்படத்தில் மூலமாக தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் கால்ஷீட்டு காரணமாக சண்டை ஏற்பட்டு பிறகு காதலாக மாறி இருக்கிறது.

பிறகு இவர்களுடைய காதல் இரு வீட்டிற்கும் தெரிய வந்திருக்கிறது. இரு வீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து இருக்கின்றனர். சத்யபிரியாவின் கணவர் எஸ் .என் முகுந்தன் தான். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாளிலேயே சத்ய பிரியாவிற்கு மகன் பிறந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஐந்து வருடத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த நிலையில் திடீரென சத்யபிரியாவின் கணவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு விட்டதாம். அந்த நேரத்தில் மருத்துவ வசதிக்கு கூட பணம் இல்லாமல் ரொம்பவே சத்யபிரியா கஷ்டப்பட்டு இருக்கிறார். அப்போதுதான் சில தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சில குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டு தன்னுடைய குடும்ப கஷ்டத்தை போக்கி கொண்டு இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அவருடைய கணவர் இறந்தது ரொம்பவே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் தான் தமிழில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதுவும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஓட ஜோடியாக நடித்த இவர் அவர்களுக்கே அம்மா மாமியார் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நிலையில் தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு அந்த சோகத்தில் இருந்த இவர் பிறகு குடும்ப கஷ்டத்திற்காக மீண்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்ப வரைக்கும் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் சில தினங்களுக்கு முன்பு கூட தன்னுடைய கணவர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+