எதிர்நீச்சலை விடுங்க! திடீரென்று வீடியோ வெளியிட்ட ஜனனி- சக்தி..இது எதிர்பார்க்காத ரியாக்ஷனா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அதிரடியாக வந்து கொண்டே இருக்கிறது. தர்ஷினிக்கு யாரோடு இனி கல்யாணம் நடக்கப்போகிறது என்று குழப்பம் இருக்கும் நிலையில் திடீரென்று இந்த சீரியலில் ஜனனி மற்றும் சக்தி இருவரும் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சீரியலில் இவர்கள் இருவருக்கும் அதிகமான காதல் காட்சிகள் இல்லை என்றாலும் இப்போது இவர்களுடைய க்யூட்டான ரியாக்ஷன் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial suddenly a video of Janani and Shakthi romancing

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆரம்பத்தில் அதிகமான வரவேற்பு இருந்தாலும் நாட்கள் போகப்போக இந்த சீரியலும் மற்ற சீரியல் போலவே டிஆர்பிக்காக அதிரடியாக கதையை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது பெண்கள் அடிமைப்படுத்துவது போன்று மீண்டும் மீண்டும் சீரியலில் காட்சிகள் வந்து கொண்டே இருக்கிறது.

Ethirneechal Serial suddenly a video of Janani and Shakthi romancing

அதிலும் இந்த சீரியலில் பெண்கள் சவால் மட்டும்தான் விட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஒவ்வொரு இடத்திலும் இந்த முறை வெற்றி பெற்று விடுவார்கள் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைக்கிறது. இதனாலேயே சமீபத்தில் இந்த சீரியலுக்கு எதிராக ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

Ethirneechal Serial suddenly a video of Janani and Shakthi romancing

ஆனாலும் டிஆர்பியில் இந்த சீரியல்தான் முன்னிலையில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற சீரியல்களை காட்டிலும் இந்த சீரியலில் காட்சி அமைப்பு, வித்தியாசமான ஆங்கிளில் கேமரா கையாளப்படுவது என பல விஷயங்கள் இருந்தாலும் கதை என்னவோ பல மாதங்களாக ஜவ்வு போல இழுக்க தொடங்கி இருக்கிறது. ஆதிரையின் திருமண விஷயம் இப்படித்தான் பல மாதங்களை கடந்து கடைசியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரைக்கு பிடிக்காத திருமணம் நடைபெற்றது.

அந்த இடத்திலையும் வீட்டு பெண்கள் தோற்று போய் இருந்தனர். அதுபோல காணாமல் போயிருந்த தர்ஷூனியை நாங்கள் கண்டுபிடித்து வருவோம் என்று எதிர்நீச்சல் பெண்கள் சவால் போட்டு இருந்தனர். ஆனால் அவர்களால் தர்ஷினி கண்டுபிடிக்கப்படவில்லை. இதிலும் தோற்றுப் போய்விட்டனர். இப்போது தர்ஷினிக்கு ஜனனியின் அத்தை பையனோடு கல்யாணம் நடக்கப்போகிறது என்று குணசேகரனும் ஜனனியின் அத்தையும் கூறி இருக்கிறார்கள்.

Ethirneechal Serial suddenly a video of Janani and Shakthi romancing

ஆனால் இந்த கல்யாணம் நடக்காது இதை நடத்த விட மாட்டேன் என்று ஈஸ்வரி சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் ஜனனியாக நடிக்கும் மதுமிதாவும் சக்தியாக நடிக்கும் சபரியும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார்கள்.

Ethirneechal Serial suddenly a video of Janani and Shakthi romancing

இவர்கள் இருவருக்கும் தான் சீரியலில் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது போன்ற காட்சிகள் தான் இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் "துளித்துளி மழையாய் வந்தாலே" என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கின்றனர். இந்த கியூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் இந்த காட்சிகள் மட்டும் சீரியலில் இருந்தால் அவ்வளவு அழகாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Ethirneechal Serial suddenly a video of Janani and Shakthi romancing

ஆனால் சீரியலில் இவர்களுக்கு காதல் காட்சிகள் இல்லை என்பதால் தான் இவர்கள் இப்படி ஒரு ரீல்ஸ் எடுத்து விட்டார்கள் போல என்று சிலர் கலாய்க்கிறார்கள். அதுபோல இன்னும் ஒரு சிலர் வீடியோ எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் இந்த வீடியோவை சபரியின் நிஜ மனைவி பார்த்தால் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்கள் கமெண்டில் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+