எதிர்நீச்சல் சீரியல் சொதப்பல்கள்.. இப்படி பண்ணலாமா..? இதை கவனிச்சு இருக்கலாம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு காரணமாக தொடர்ச்சியாக இரண்டு வாரங்களாக டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

ஆனாலும் இந்த சீரியலில் சில காட்சிகள் முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Ethirneechal serial teeth karikalan and athirai first night and fans reaction

என்னதான் இந்த சீரியலில் முற்போக்கு பேசிக் கொண்டிருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் முதலிரவு அலப்பறைகள் அதிகமாக இருந்தது தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் படித்த நான்கு மருமகள்கள் வீட்டு வேலை செய்வதற்காகவும், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், அவர்கள் தங்களுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக எப்படி வீட்டையும் இந்த உலகத்தையும் எதிர்த்து நிற்க போகிறார்கள் என்பது பற்றி தான் இந்த சீரியல் இருந்து வருகிறது.

Ethirneechal serial teeth karikalan and athirai first night and fans reaction

பல சீரியல்களுக்கு எதிராக இந்த சீரியலில் அதிகமாக பெண் புரட்சி பேசப்பட்டு வருவதாலே இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. குறிப்பாக ஆண்களை கூட இந்த சீரியலை பற்றி பேச வைத்திருந்தது. ஒரு சில ஆண்கள் இந்த மாதிரி பெண்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தால் எங்கள் வீட்டில் சண்டைகள் வருகிறது. இதுபோல எங்களிடமும் அவர்கள் சண்டைக்கு வருவார்கள் என்று பயத்தோடு இயக்குனருக்கு கடிதம் கூட எழுதி இருந்தார்கள்.

ஆனாலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடி கொண்டு இருக்கின்றனர். அதிலும் கடைசி வாரத்தில் நடைபெற்ற ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் பலருக்கும் வியப்பை கொடுத்து விட்டது. ஆனாலும் ஒரு சிலர் இது ஆண் ஆதிக்கத்தின் உச்சம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த பிடிக்காத திருமணத்திலிருந்து ஆதிரை எப்படி வெளியே வந்து தன்னுடைய சுய கௌரவத்தையும் திறமையையும் வெளி கொண்டுவரப் போகிறார் என்பது பற்றி அவருக்கும் அவரைப் போல அடக்குமுறைக்கு ஆளாகும் பெண்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ethirneechal serial teeth karikalan and athirai first night and fans reaction

ஆனால் இதே சீரியலில் சில சொதப்பல்களும் நடந்து இருப்பது உண்மைதான். ஆமாங்க ஆதிரைக்கு விருப்பமில்லாமல் கரிகாலன் நடுத்தெருவில் வைத்து தாலி கட்டி விட்டார். அதுபோல ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக முதலிரவு ஏற்பாடுகளையும் ஜான்சி ராணியும் அவருடைய குடும்பமும் செய்து வைத்திருக்கின்றனர். ஆனால் முதலிரவு காட்சிகள் தான் ரொம்ப அபத்தமாக இருந்தது. காரணம் எதிர்நீச்சல் சீரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் புது மாப்பிள்ளை ஆக இருக்கும் கரிகாலன் தன்னுடைய உணர்வுகளை எல்லாம் அதில் வார்த்தைகளாலும் சைகைகளாலும் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆதிரை மீது தனக்கு காதல் பாசம் இருப்பதை காட்ட வேண்டும் என்பதற்காக இந்த அளவிற்கு நடந்து கொள்ள வேண்டுமா? என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனின் நடிப்பை அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் முதல் இரவு காட்சியில் ஆதிரையிடம் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal serial teeth karikalan and athirai first night and fans reaction

அதே நேரத்தில் முதலிரவு அறைக்குள் ஜான்சி ராணி அடாவடியாக நுழைந்து உள்ளிருக்கும் சாராயக்கேனை எடுத்துக் கொண்டு போவார். அப்போது நீ இன்னும் ஆரம்பிக்கலையா? பேசிக்கிட்டு தான் இருக்கிங்களா? நீயும் உன் அப்பனை போல ஒண்ணுக்கும் ஆக மாட்டா போல..என்று கேட்பார். இப்படியா ஒரு மாமியார் நடந்து கொள்ள வேண்டும்? என்றும் பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் உன்னுடைய தங்கச்சி ஆதிரை என் பையன் கரிகாலன் கூட முதல் இரவுக்கு சம்மதிக்க மாட்டேன் என்கிறா, என்று குணசேகரனுக்கு போன் போட்டு ஜான்சி ராணி மிரட்டி கொண்டு இருப்பார். அது குறித்தும் ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+