எதிர்நீச்சல் டுவிஸ்ட்.. அதிரடியாக என்ட்ரியாகும் தேவயானி, வடிவுக்கரசி.. என்ன பங்க்ஷன்...?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக கடந்த வாரமும் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக எதிர்நீச்சல் சீரியல் அணியினரோடு நடிகை தேவயானி மற்றும் நடிகை வடிவுக்கரசி சேர்ந்து இருக்கின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு இப்போது பல மடங்காக அதிகரித்து இருக்கிறது. ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் முடிந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த திருப்பங்கள் எதிர்நீச்சல் சீரியலில் வர தொடங்கி இருக்கின்றது. இதுவரைக்கும் குணசேகரனை எதிர்த்து பேசாத மருமகள்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உரிமையை காப்பாற்றிக் கொள்வதற்காக குரல் உயர்த்த தொடங்கி இருக்கின்றனர்.

இத்தனை நாட்களும் குணசேகரன் முன்னாடி குழந்தைகளும் பயந்து போய் இருந்த நிலையில், இப்போது அவர்களும் தங்களுக்கு தேவையானது என்ன என்பது பற்றி வெளிப்படையாக பேசுகின்றனர். அதே நேரத்தில் பட்டம்மாள் ஷேர் விஷயத்தில் இனி புது பிரச்சனையும் வரவிருக்கிறது. இந்த நிலையில் வீட்டு மருமகள் எப்படி தங்களுடைய சொந்தக்காலில் நிற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
தற்போது ஐஸ்வர்யா வயதுக்கு வந்ததை வீட்டில் மூன்று நாட்களாக சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். காரணம் இந்த விஷயத்தை வீட்டில் சொன்னால் தனக்கும் சடங்கு வைத்து யாரையாவது மாப்பிள்ளை என்று கூட்டி வந்து விடுவார்கள் என்று நினைத்துதான் சொல்லவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக ரேணுகா இனி என்னுடைய பொண்ணுக்கு அவ விருப்பம் இல்லாமல் சடங்கு நடத்த விட மாட்டேன் என்று கறாராக கூறிக் கொண்டிருக்கிறார். குணசேகரன் ஞானம் இருவருமே எவ்வளவோ மிரட்டி பார்த்தும் அதற்கு ரேணுகா பயப்படாமல் தைரியமாக சடங்கு நடத்த விட மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் ஐஸ்வர்யா ரத்தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பேக்ரவுண்டில் பார்க்கும்போது ஏதோ பங்க்ஷன் நடப்பது போன்று இருக்கிறது. அதுபோல அந்த பங்க்ஷனில் நடிகை தேவயானி, நடிகை வடிவுக்கரசி போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களோடு ஐஸ்வர்யா புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் அந்த புகைப்படங்களில் தன்னுடைய பெரியப்பாவாக நடிக்கும் குணசேகரனும், பெரியம்மாவாக நடிக்கும் ஈஸ்வரியும் இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில் ஒருவேளை நடிகை தேவயானியும் வடிவுக்கரசியும் ஐஸ்வர்யாவின் சடங்கு ஃபங்க்ஷனில் கலந்து கொள்ளப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு மற்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.
அதே நேரத்தில் இந்த புகைப்படங்களுக்கு பின்னாடி இருக்கும் திரையில் இயக்குனர் திருச்செல்வத்தின் புகைப்படம் தெரிவதால் ஒருவேளை தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்ததால் ஏதேனும் பங்க்ஷனாக இருக்குமோ? அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் ஒரு சில தினங்களில் கதை எந்த மாதிரி போகப் போகிறது என்று தெரியும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications