திருவிழாவில் நடக்கப்போவது இதுதானா? ரகசியத்தை லீக் செய்த வேலராமமூர்த்தி.. இந்த முடிவு நல்லது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கோவில் திருவிழாவில் வைத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் குணசேகரனாக நடிக்கும் நடிகர் வேலராமமூர்த்தி சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இனி இதுதான் நடக்கும் என்று யூகிக்கப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
சமீபகாலமாக சின்னத்திரையில் ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமையை எதிர்நீச்சல் சீரியலுக்குத்தான் சாரும். ஆனால் இப்போது நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு இந்த சீரியலில் கதை இழுபறியாக இருந்து வருகிறது என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் வெற்றிக்கும் முதுகெலும்பாக இருந்த மாரிமுத்துவின் இறப்பு அவருடைய சொந்த குடும்பத்தை மட்டுமல்லாமல் இந்த சீரியலையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவரை நம்பியே இந்த சீரியல் போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அவருடைய இறப்பு வந்து விட்டதால் இப்போது கதையை வேறு விதமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் அவருடைய கேரக்டரை அப்படியே முடித்து விடலாமா? அல்லது தொடரலாமா? என்று இருந்த நிலையில் மாரிமுத்து இறந்த முதல் நாளே அவருடைய கேரக்டரில் இனி வேலராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்துக்கூறி வந்தனர். அதுபடியே சீரியல் தரப்பினர் வேலராமமூர்த்தியை அணுகி இருந்து நிலையில் அவர் சீரியலில் நடிப்பதற்கு தனக்கு சம்மதம்.
ஆனால் நான் இப்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். அதோடு எனக்கு கால்ஷீட் பிரச்சனை இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் தான் அடுத்த குணசேகரனாக வேலராமமூர்த்தி சீரியலில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் வந்ததும் நான்தான் இனி குணசேகரன் என்ற ஒரு அட்டன்ஸ் மட்டும் போட்டுவிட்டு அவர் இரண்டு நாளில் காணாமல் போயிருந்தார்.

இப்போது சீரியலில் முக்கியமான திருப்புமுனையை நோக்கி போயிருக்கும் நிலையில் மீண்டும் வந்திருக்கிறார். இந்த நிலையில் இனி திருவிழாவில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை குணசேகரனையும் கதிரையும் போட்டு தள்ள வேண்டும் என்று ஜீவானந்தம் ஒரு பக்கத்தில் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் அப்பத்தாவையும் ஜீவானந்தத்தையும் போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்று இன்னொரு பக்கத்தில் கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் நான்கு பேருடைய கழுத்திலும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஜோதிடர் ஏற்கனவே பெரிய உசுரு போகப்போகிறது என்று கூறியிருக்கிறார்.
அதுபோல உங்க மூத்த மகனின் உயிருக்கு ஆபத்து என்றும் கூறியிருந்தார். கதையின் படி குணசேகரனுக்கு அடுத்ததாக முக்கிய கேரக்டரில் பலரை கவர்ந்திருந்த அப்பத்தா தான். ஆனாலும் அப்பத்தா கேரக்டருக்கு தகுந்தபடி வீட்டு மருமகள்களை அடுத்த கட்டத்துக்கு நோக்கி அடி எடுத்து வைக்க வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு இடத்திலும் அவர்களுடைய சுயமரியாதையை இனி நீங்கள் தான் போராடி பெற வேண்டும் என்பது குறித்தும் அடிக்கடி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இதனால் இந்த பிரச்சனையில் இப்போது அப்பாவை தான் கதையை முடிப்பதற்காக அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனாக நடித்து வரும் வேலராம மூர்த்தி மீண்டும் தன்னுடைய பாரிஸ் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக தான் சென்று விட்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதனால் ஜீவானந்தம் குணசேகரனை போட்டு தள்ளி விடுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குணசேகரனை போலவே மாஸான கிருஷ்ணா என்ற வில்லன் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதனால் இனி அவரை வைத்து கதையை நகர்த்திக் கொண்டு போய் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சீரியலில் இனி என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications