எதிர்நீச்சல் வில்லனுக்கு இலங்கையில் கிடைத்த வரவேற்பு.. வீட்டு வாசலில் பெண்களின் நெகிழ வைத்த செயல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கிருஷ்ணசாமி மெய்யப்பன் என்று வில்லனாக அறிமுகமான ஆர் ஜே நெலுவிற்கு அவருடைய சொந்த ஊரான இலங்கையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் இருந்து பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சீரியலில் ஆர் ஜே நெலுவிற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு அவருடைய உறவினர்களும், ஊர் காரர்களும் மகிழ்ச்சியோடு ஆர்.ஜே நிலுவை வாழ்த்தி வரவேற்று இருக்கின்றனர்.

ஆர் ஜே நெலு கிருஷ்ணாவாக எதிர்நீச்சல் சீரியலில் இரண்டு நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் எதிர்நீச்சல் சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
சன் டிவியில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த சீரியலில் ஜனனியின் சித்தப்பா பையனாக கிருஷ்ணசாமி மெய்யப்பன் என்ற புது வில்லனாக ஒருவர் அறிமுகம் ஆகி இருந்தார்.
ஆரம்பத்திலேயே இவருக்கு அதிகமான பில்டப் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் யார் இவர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் அவர் இலங்கை மட்டக்களப்பு பகுதியை ஆர் ஜே நெலு என்பவர் தான். அதோடு நடிகராக மட்டுமல்லாமல் ஆர்ஜே நெலு இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் வலம் வரும் நிலையில் பல ஷார்ட் பிலிம் களிலும் நடித்திருக்கிறாராம்.
இலங்கையில் இருந்து தான் ஒரு நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்திருந்த நிலையில் ஹிப்பாப் ஆதியின் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை பார்த்து தான் இவருக்கு இந்தியாவிற்கு வர வேண்டும் இங்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையே வந்தது என்று பேட்டி ஒன்றில் ஆர் ஜே நெலு கூறியிருந்தார்.
ஆனாலும் இந்தியாவிற்கு வந்த போது ஆர்ஜே நிலுவிற்கு வாய்ப்புகள் எளிமையாக கிடைத்துவிடவில்லையாம். பல இடங்களில் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக இயக்குனர் திருச்செல்வனிடம் ஆர் ஜே நெலு வந்து சேர்ந்திருக்கிறார். ஆர் ஜே நெலுவை பார்த்ததும் இயக்குனர் திருச்செல்வம் கதையை 2 மணி நேரம் விரிவாக சொல்லிக் கொண்டிருந்தாராம்.
ஆனால் ஆர்.ஜே நெலுவிற்கு அந்த நிமிடம் மனம் பட்டாம்பூச்சி போன்று பறந்து கொண்டு இருந்தது என்று கூறியிருக்கிறார். காரணம் எதிர்நீச்சல் சீரியலில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சீரியலில் தனக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என்பது பெரியது என்று நினைத்திருக்கிறார்.
ஆனால் திருச்செல்வம் கதையை சொல்லி முடித்த பிறகு இலங்கை மக்களின் நிலைமை குறித்து அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தாராம். அது குறித்தும் ஆர் ஜே நெலு நெகிழ்ச்சியோடு பேசி இருந்தார். ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நடிப்புக்காக வந்திருந்த நிலையில் வாய்ப்புக்காக ஒவ்வொரு இடங்களுக்கு போகும் போதும் அங்கு பலரும் இவர்களுடைய திறமையை பற்றி கேட்காமல் இலங்கை மட்டக்களப்பில் இருக்கும் மக்களின் நிலைமையை குறித்து விசாரித்துக் கொண்டிருப்பார்களாம்.
அது மனதிற்கு கஷ்டத்தையும் ஏற்படுத்தி இருந்தது என்று நெலு கூறியிருக்கிறார். இந்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு தனக்கு எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டர் கிடைத்திருப்பது குறித்து அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெருமையாக குறிப்பிட்டு வருவார்.
இந்த நிலையில் ஆர் ஜே நெலுவிற்க்கு அவருடைய சொந்த ஊரான மட்டக்களப்பில் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரிய அளவில் வரவேற்பு நடத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நெலுவின் உறவினர்கள் நெலுவிற்கு ஆரத்தி எடுத்து மாலை போட்டு வரவேற்று இருக்கின்றனர்.
ஆர் ஜே நெலு அங்கிருக்கும் பெண்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை இணையத்தில் நெலு பகிர்ந்து இருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் இரண்டு நாட்கள் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் இனி சீரியலில் குணசேகரனுக்கு இருப்பது போன்று முக்கியமான கேரக்டர் இவருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் தன்னுடைய காட்சிகள் மீண்டும் வரப்போகிறது என்று தன்னுடைய எதிர்நீச்சல் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் சில தினங்களுக்கு முன்பு ஆர்.ஜே நெலு பகிர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அப்பதா காரோடு எரிந்து போனது போன்று கதையை கொண்டு போய் இருக்கின்றனர். இந்த நிலையில் இனி புது வில்லனால் எதிர்நீச்சல் சீரியலில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications