எதிர்நீச்சல் கதை இழுபறிக்கு காரணம் இதுதானா? மறுபடியும் கதை இப்படியா? இனி அப்போ கஷ்டம் தான் போல
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில நாட்களாக கதை ஒரே இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே ஆதிரை கரிகாலன் திருமண விஷயத்திலும் கதை இப்படித்தான் பல மாதங்களாக சுற்றிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இப்போது இந்த கதை இப்படி இழுத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் இதனால் இனி ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு ஆரம்பத்தில் ஒளிபரப்பாகி வந்த நிலையிலும் சீரியலின் சுவாரஸ்யம் காரணமாகவே டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து வந்தது. அதுவும் நடிகர் மாரிமுத்து இந்த சீரியலில் குணசேகரனாக நடித்து வந்ததை பலரும் ரசித்து வந்தனர்.
அதே நேரத்தில் சீரியலிலும் கதை வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் அவருடைய மரணம் காரணமாக கதை இனி எப்படி பயணிக்கும் என்பது ரசிகர்களின் மத்தியில் பெரிய கேள்வியாக இருந்தது. இந்த கஷ்டம் சீரியல் தரப்பினர்களுக்கும் இருக்கத்தான் செய்தது. அதனாலயே திடீரென்று இப்போது ஜனனியின் தம்பி கிருஷ்ணன் என்ற ஒரு கேரக்டரை அறிமுகம் செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் மாரிமுத்து நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் செய்திருக்கின்றனர்.

இப்படியாக இருக்கும் நிலையில் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இரண்டு நாளில் அவர் ஏற்கனவே நடித்து வந்த திரைப்படங்களில் சூட்டிங்காக சென்று விட்ட நிலையில் சீரியல் கதை இப்போது சில நாட்கள் அதை சுற்றிய இடத்திலே சுற்றிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அப்பத்தாவையும் ஜீவானந்தத்தையும் போட்டு தள்ள வேண்டும் என்று குணசேகரன் கதிருக்கு சொல்லி இருந்த நிலையில் கோவில் திருவிழாவை நடத்தி அதை முடித்து விடலாம் என்று யோசித்து இருந்தனர்.
ஆனால் இப்பொழுது பல நாட்களாகவே அதைப் பற்றியே கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோடு வைத்தும் கதை வேகம் எடுக்கவில்லை என்பது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரில் பயணிக்க தொடங்கி பல நாட்களாக இவர்கள் ஊருக்கு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.. இன்னும் எத்தனை நாள் கழித்து ஊருக்கு போய் சேர்வார்களோ என்பது யாருக்கும் தெரியாத கதை தான்.

ஒரு பக்கம் காரில் கதிர் கரிகாலன் கிள்ளிவளவன் மூன்று பேரும் போய்க்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் நந்தினி, ரேணுகா, ஜனனி, ஈஸ்வரி, சக்தி, ஆதிரை, ஜான்சி ராணி இவர்கள் காரில் போய்க்கொண்டிருக்கின்றனர். இப்படியாகவே சில நாட்களை கடந்து விட்டிருந்த நிலையில் இன்று ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வந்திருப்பது போன்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆனாலும் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதே பில்டப் போடு கதை நகரப் போகிறது என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த சீரியல் இப்போது ஒன்பது மணி நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் செம பரபரப்பாக இந்த வாரத்தில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரி அரைத்த மாவையே அரைத்து ஒரே இடத்தில் கதை சுற்றிக்கொண்டு இருந்தால் ரசிகர்கள் சலிப்படைந்து சேனல் மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.
இது இயக்குனருக்கு புரிந்து உடனே கதையில் வேகம் எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் இல்லையென்றால் கடந்த வாரத்தில் சீரியல் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு டிஆர்பியில் வந்தது போல இனி அதைவிடவும் கீழே வருவதற்கு தான் அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications