எதிர்நீச்சல்! சக்தி திருமணத்தில் ஜனனியின் மாஸ் என்ட்ரி.. இனி குந்தவை கோர்ட்டில் பால்.. முடிவு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர் நீச்சல் சீரியலில் சக்தியை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது குறித்து குந்தவை எந்த மாதிரியான முடிவை எடுப்பார் என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பெண் குந்தவையை தனது தம்பி சக்திக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க குணசேகரன் வேண்டிய முயற்சிகளை எடுக்கிறார்.

இதற்கு தைரியமாக எதிர்க்காவிட்டாலும் சக்தியின் 3 அண்ணிகளும் ஓரமாக நின்று இந்த திருமணம் நின்றுவிடாதா என நினைக்கிறார்கள். சக்தியும் குந்தவையும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள். அப்போது பூசாரியிடம் திருமாங்கல்யத்தை கொண்டு வா என்கிறார்.

 3 அண்ணிகள்

3 அண்ணிகள்

உடனே அந்த 3 அண்ணிகளும் பதற்றமடைகிறார்கள். அப்போது சக்தியை பார்த்து இவர்களுக்குள்ளாக பேசிக் கொள்கிறார்கள். "எப்படி நிற்கிறான் பாருங்க!, கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லாமல் வேட்டி கட்டி கொண்டு வந்து நிற்கிறான்" என முணுமுணுக்கிறார்கள். இதனிடையே தாலி வந்துவிடுகிறது. எல்லாரிடமும் பூசாரி ஆசி வழங்குகிறார்.

முகத்தை திருப்பி கொள்ளும் அண்ணிகள்

முகத்தை திருப்பி கொள்ளும் அண்ணிகள்

அப்போது அந்த 3 அண்ணிகளும் முகத்தை திருப்பி கொண்டு நிற்கிறார்கள். இதையடுத்து குணசேகரன் சரி வாங்க பூசாரி நேரம் ஆகுது என அழைக்கிறார். சக்தி தாலி எடுத்து கட்டுப்பா என்கிறார். அவருக்கு கைகள் உதறுகிறது, மனதில் தான் ஜனனி கழுத்தில் தாலி கட்டியதை யோசித்து பார்க்கிறார். அந்த பிளாஷ்பேக் காட்சிகளுக்குள் புகுந்த குணசேகரன், ஏய் என்னப்பா சக்தி தாலியை கட்டு என்கிறார்.

 குந்தவை முகத்தில் சந்தோஷம்

குந்தவை முகத்தில் சந்தோஷம்

உடனே தாலி எடுக்கிறார் சக்தி, குந்தவை முகத்தில் எத்தனை சந்தோஷம்? அப்போது ஜனனி கோயிலுக்குள் வருவதை நந்தினி பார்த்துவிடுகிறார். தாலி கட்டும் நேரத்தில் நந்தினி, "சனனீ...." என மகிழ்ச்சியாக அழைக்கிறார். உடனே எல்லாரும் அதிர்ச்சியாக திரும்புகிறார்கள் உடனே சக்தியை தாக்க நந்தினியின் கணவர் கதிர் பாய்கிறார். அவரை குணசேகரன் அடக்குகிறார்.

பட்டு வேட்டியில் சக்தி

பட்டு வேட்டியில் சக்தி

அப்போது சக்தியிடம் வந்து ஜனனி, என்ன சக்தி நான் சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறேன். வேட்டி எல்லாம் கட்டிக் கிட்டு இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டீர்கள் போல என கேட்கிறார்கள். அப்போது குந்தவையிடம் ஜனனியிடம் உங்கள் பெயர், ஊர், படிப்பு என கேட்கிறார். எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் குந்தவை , நீங்கள் யார் என கேட்கிறார்.

பெயர் ஊர்

பெயர் ஊர்

அப்போது ஜனனி மேலும் சூழ்ச்சி வலை பின்னும் எதிரிகளை சாமர்த்தியமாக வென்று ஆட்சியை பிடிக்கும் சோழ இளவரசியின் பெயரை வைத்துள்ளீர்கள் என கூறிவிட்டு தனது பெயர் ஊர், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தான்தான் சக்தியின் மனைவி என்கிறார். இதனால் குந்தவை அதிர்ச்சி அடைகிறார். அப்போது ஜனனியை கதிர் தடுக்க முயல்கிறார், ஆனால் நந்தினி, நீ சொல்ல வேண்டியதை சொல்லு ஜனனி என்கிறார். உடனே நந்தினியை கதிர் மிரட்டுகிறார். எனி்னும் ஒரு வழியாக தனக்கும் சக்திக்கும் நடந்த திருமணம் குறித்து ஜனனி ஒரு ரீகேப் போல சொல்கிறார்.

படித்தவர்கள்

படித்தவர்கள்

இதையடுத்து குந்தவையிடம் செல்லும் ஜனனி, அங்கு நிற்கும் 3 பெண்களும் (அண்ணிகள்) நன்றாக மாஸ்டர் டிகிரி படித்தவர்கள். அவர்கள் எல்லாம் சமையல் அறைக்குள் வைத்து பூட்டி வைப்பது போல உங்களையும் சமையல் அறையில் வைத்து பூட்டி வைப்போம் என சொல்லிவிட்டார்களா என்று கேட்கிறார். இவர்களை நம்பி அப்பாவி பெண்ணான உங்கள் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன்.

 இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

மற்றபடி என் வாழ்க்கையை மீட்க நான் இங்கு வரவில்லை. இவர்கள் இரண்டாவது திருமணம் செய்துவைப்பதில் தவறில்லை, ஆனால் அதை முறைப்படி என்னிடம் விவாகரத்து செய்துவிட்டு செய்ய வேண்டும். இவர்களின் பிடியிலிருந்து தப்பி என் வாழ்க்கை வாழ நான் சென்றுவிட்டேன். இனி உங்கள் வாழ்க்கை குறித்து யோசிக்க வேண்டியது நீங்கள்தான், எதுவாக இருந்தாலும் ஆல் தி பெஸ்ட் என சொல்லிவிட்டு யாரிடமும் பேசாமல் கிளம்பி விடுகிறார். உடனே குந்தவை என்ன செய்யலாம் என யோசிக்கிறார்.

 குந்தவை என்ன செய்ய போகிறார்

குந்தவை என்ன செய்ய போகிறார்

ஏற்கெனவே சக்தி தான் அணிந்திருந்த மாலையை கழற்றிவிட்டார். அது போல் குந்தவையும் மாலையை கழற்றி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு சொல்வாரா என்பது நாளைதான் தெரியும். அநேகமாக குணசேகரனையும் அவரது குடும்பத்தினரையும் நன்றாக நாக்கை பிடிங்கிக் கொள்கிற மாதிரி ஏதேனும் கேட்கிறாரா என்பதை நாளை எபிசோடில்தான் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+