மனசு கஷ்டத்தை அனுபவிக்கும் பவுர்ணமியை தோழியும் தன் பங்குக்கு வசமா படுத்தறாளே!
சென்னை:சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பெத்த அப்பாவுக்கு பவுர்ணமியை கண்டாலே பிடிக்காது.ரெண்டாம் தாரத்துக்கு பிறந்த பவானியைத்தான் ரொம்ப பிடிக்கும்.
பவுர்ணமி குழந்தையிலிருந்தே அப்பாவால் வெறுக்கப்பட்டவள்,அவமானப் படுத்தப்பட்டவள். .ஆனா,பாட்டி,சித்தி,தங்கச்சி பவானி எல்லாருக்கும் பவுர்ணமியைப் பிடிக்கும் .பவுர்ணமிக்கு அப்பான்னா உசிரு.

என்ன பண்றது, அப்பா பவுர்ணமி முகத்துலயே விழிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டார். வீட்டுல யாரும் பவுர்ணமிகிட்ட பேசக்கூடாது. முக்கியமா தனது ரெண்டாம் தாரமான வாசுகிகிட்டே உத்தரவிட்டு இருக்கார்.
இருந்தாலும், பவுர்ணமி மீது பாசமா இருக்கும் சித்தி...கணவர் இல்லாதப்போ பவுர்ணமியுடன் பேசுவாங்க.இப்படிப்பட்ட சமயத்தில்தான் பவுர்ணமியோட படிச்ச ராம்கி அறிமுகம் கிடைக்குது.

ராம்கி பவுர்ணமியை காதலிக்கறான். ஆனா, பவுர்ணமி தங்கச்சி பவானி ராம்கியை காதலிக்கறா. ராம்கியுடன் இருக்கும் குட்டி பையன் ஒருத்தன் ராம்கி சார்பா பவுர்ணமிக்கு லெட்டர் குடுக்கப் போறான். அங்க பவுர்ணமி அப்பா சக்ரவர்த்தி இருக்க ,அவரிடம் உங்கப் பொண்ணுக்கு எங்க அண்ணன் லவ் லெட்டர் குடுத்து விட்டாரு சார்னு சொல்றான்.
ஓ..அன்னிக்கு பவானி நான் ஒரு பையனை காதலிக்கறேன்னு சொன்னாளே அவன்தான் லெட்டர் குடுத்திருப்பான் போலன்னு நினைச்சு லெட்டரை வாங்கி பவானிகிட்ட குடுத்துடறார்.
அந்த கவரிலிருக்கும் ராம்கி போட்டோவை அக்கா பவுர்ணமிகிட்ட காமிக்கலாம்னு போறா தங்கச்சி. அப்போ அப்பா வந்து, அக்கா நான் காதலிக்கறேன்னு சொன்னேனே அவன் எனக்கு லெட்டர் குடுத்து படமும் அனுப்பி இருக்கான் அக்கான்னு பவுர்ணமிக்கிட்ட காட்டப்போக..
பவானி..உனக்கு அறிவில்லை..அவகிட்ட போயி படத்தை காமிக்கறே..அவ தொட்டாலே எதுவும் விளங்காதுன்னு அப்பா கத்தறார். இப்படித்தான் பவுர்ணமி தினம் தினம் மனக்கஷ்டத்தை அனுபவிச்சுக்கிட்டு வர்றா.

இதுல யுனிவர்சிட்டி முதல் மார்க் வாங்கி பேப்பரில் படம் வந்த போதும், அப்பா அவமானப் படுத்தினார். ரெண்டாவது இடத்திலிருக்கும் மாணவிக்கு பவானி முத்லிடம் பிடிச்ச. வருத்தம் . அப்பாகிட்ட சொல்ல, நம்ம பார்ட்டி வைக்கறோம்னு அந்த இடத்துக்கு வர சொல்லுன்னு சொல்றார்
தோழியை நம்பி சொன்ன இடத்துக்கு போன பிறகுதான், அது ரெட் லைட் வீடுன்னு தெரியுது.தோழி நல்லா பழி வாங்கிட்டா .பவுர்ணமியை போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிருது. என் அப்பாதான் பிரபல தொழிலதிபர் சக்ரவர்த்தியின் பொண்ணு நான் தப்பு பண்ணலைன்னு சொல்லிட்டு அழறா.
ஆனா,அந்த கல்நெஞ்சக்காரன் இவை என் பொண்ணே இல்லை.யார் என்னை அப்பான்னு சொன்னாலும் என்னை ஸ்டேஷனுக்கு வரவழைச்சுருவீங்களான்னு கத்தறார்.பவுர்ணமி அப்பா..அப்பான்னு அழ,அவர் காதில் வாங்கிக்கவே இல்லை.
இப்படிப்பட்ட கல் நெஞ்சகாரர்களும் நாட்டில் அப்பான்னு இருக்கத்தான் செய்யறாங்க.. பவானி, பவுர்ணமி இடையே காதல்தான் பிரிவை ஏற்படுத்தும் போல..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications