ஆண்ட்டியால் மார்க்கெட் இழந்தாரா "ஆன்ட்டி ஹீரோ"? நடிப்பில் உச்சம் தொட்ட வில்லன் நடிகர்: பிரபலம் சபாஷ்
சென்னை: நடிகர் கரண் மிகச்சிறந்த நடிகர், ஆனால், ஹீரோவாகவே நடிக்க வேண்டும் என்று நினைத்ததால்தான் வாய்ப்புகளை இழந்தார், அவர் இன்று மீண்டும் நடிக்க வந்தால், கேரக்டர், வில்லன் வேடங்களில் கலக்கிவிடுவார்" என்று சபிதா ஜோசப் கருத்து தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு, சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப், நடிகர் கரண் எப்படி திரையுலகில் நடிக்க வந்தார், மார்க்கெட்டை இழந்தது எப்படி என்பது குறித்தெல்லாம் விலாவரியாக பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில், "குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார் கரண்.. சென்னையில்தான் அப்போது இருந்தார்.. சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.. தவிர்க்க முடியாத காரணங்களினால், வேறு சில படங்களிலும் தெரியாமல் நடிக்க ஏற்பட்டுவிடும்.. ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார்..
கமல் தேர்வு: நம்மவர் படத்தில் கமலுடன் நடித்தார்.. கமல் யாரையுமே தன்னுடைய எதிர்நாயகனாக உடனே போட்டு விடமாட்டார்.. அப்படியே போட்டாலும், அவர்களில் ஒவ்வொருவராக வடிகட்டி, கேரக்டருக்கு சரியாக இருக்குமா? என்பதை பார்த்துதான் போடுவார். அந்தவகையில், கமலின் தேர்வு, நம்மவர் படத்தில் வீணாகவில்லை. பொருத்தமாக கரணை தேர்ந்தெடுத்திருந்தார்.
அந்த படம் சுமாராக போனாலும், அந்த படத்தில் எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க.. கரணிடம் நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்பட துவங்கிவிட்டன.. அதற்கேற்றபடி, அவரும் தனக்கென மாறுபட்ட ஸ்டைலை ஒவ்வொரு படத்திலும் கொண்டுவந்தார்.. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்திருந்தார் கரண்.. "லவ் டுடே" படத்தில் விஜய்யுடன் நல்லா நடிச்சிருந்தார். "கண்ணெதிரே தோன்றினாள்" படத்தில், கடைசி சீனில் சின்னி ஜெயந்த்துடன், நடிப்பு போட்டியே நடந்திருக்கும்..
ஹீரோ சான்ஸ்: பிறகு ஹீரோவாக 2 படங்கள் நடித்தார்.. அந்த படங்கள் சுமாராக ஓடவும், இனிமேல் நாம்தான் "ஹீரோவாயிட்டோம்ல" என்ற நினைப்பு வந்துவிட்டது. ஹீரோவாக எல்லாருக்குமே படங்கள் ஓடிவிடுவதில்லை.. 23ம் புலிகேசி என்று வடிவேலுக்கு 1 படம்தான் ஹீரோவாக ஓடியது.. இரட்டை வேடங்களாகவே நடித்ததுதான், வடிவேலுக்கு வீழ்ச்சியை தந்தது..
மங்களகரமான பெயர் கொண்ட ஒரு பெண்மணி கரணிடம் மேனேஜராக பணியாற்றினார்.. இவருடன் அந்தம்மாவுடன் நிறைய கிசுகிசுக்கள் முன்பெல்லாம் வரும். ஆனால், எனக்கு தெரிந்து, அந்தம்மா கரணுக்கு நல்ல நண்பர்..
கிசுகிசுக்கள்: எத்தனையோ நடிகர்களின் மேனேஜர்கள், தயாரிப்பாளர், டைரக்டர்களுக்கு படாதபாடு தருவார்கள். ஆனால், இந்த பெண்மணி அப்படியில்லை.. கரணின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். படம் டிஸ்கஷன், விநியோகிப்பு, உள்ளிட்ட விஷயங்களில் கூடவே இருந்தார்.. இப்படி கூடவே இருந்ததால், அப்படி அவரை கரணுடன் இணைத்து சொல்வார்கள்.. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை..
இத்தனைக்கும் கரணை வில்லனாக நடிக்கும்படியும் அழுத்தம் தந்தது அந்த பெண்தான். ஆனால், லேடி மேனேஜர்கள் என்றால் இதுபோன்ற தொந்தரவுகள் பெண்களுக்கு வரத்தான் செய்யும்.. சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கும் குடும்பத்தில் குடைச்சல் வரத்தான் செய்யும். அந்தவகையில், கரண் குடும்பத்திலும் ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது.
விலகிய மேனேஜர்: இதையடுத்து, அந்த பெண்மணி மேனேஜர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.. தன்னுடைய மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு தன்னை ஒருமாதிரி கரண் பேசுவதாக, என்னிடம் அந்த பெண்மணி ஒருமுறை வருத்தப்பட்டம் சொன்னார்.
பல நடிகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.. அந்தவகையில் கரணும், தன்னுடைய மனைவியின் பெயர், யார் என்ன என்ற விவரத்தை யாரிடமும் சொன்னதில்லை.. அம்மா பற்றி சொல்லியிருக்கிறாரே தவிர, குடும்பத்தை சொன்னதில்லை.. மைக் மோகனும் அப்படித்தான் இருந்தார்.
திறமையானவர்: இன்று கரண் மீண்டும் நடிக்க வந்தால் நல்லா இருக்கும். கேரக்டர், வில்லன் கேரக்டர்களில் கலக்குவார்.. மிகவும் இன்வால்வ் ஆகி நடிக்கக்கூடியவர். குள்ளமாக இருந்தாலும், நடிப்பில் உயரமானவர்.. திறமையானர்.. வாய்ப்புகளை சரியான பயன்படுத்தி கொண்டால் போதும்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications