பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து.. கோமா பயில்வான் நினைவிருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல தெலுங்கு மற்றும் தமிழ்ப்பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ், சமீப காலமாகவே உடல் தளர்ந்து, சோர்ந்து காணப்படுகிறார்.. 4 நாட்களாகவே உடல் மெலிந்து காணப்படும் அவரது போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. மனிதனுக்கு ஏற்படும் வயோதிகம் குறித்து, மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் சிறப்பு அங்கீகாரத்தை பெற்றவர் மூத்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.. கடந்த 2003ல் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தமிழகமெங்கும் கவனிக்கப்பட்டவர்.
பெயர் பெற்ற நடிகர்

இதையடுத்து, 'குத்து’, 'ஜோர்’, 'ஏய்’, 'திருப்பாச்சி’, 'பரமசிவன்’, 'சத்யம்’, 'கோ’, 'சாமி 2’, 'காத்தாடி’ என பல படங்களில் வில்லனாகவே நடித்தார்.. நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ்... அதுமட்டுமல்ல, 1999 - 2004 ம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார்.

ஆனால், 2023ம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்திவிட்டார்.. சமீப காலமாக படங்களில் இருந்து விலகியிருக்கும் கோட்டா சீனிவாச ராவுக்கு வயது மற்றும் உடல்நலக் காரணங்களால், நடக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிகிறது. அவரது தற்போதைய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

இயற்கையை வெல்ல முடியாது

இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், இயற்கையை யாராலுமே வெல்ல முடியாது என்ற அறிவியல் உண்மை குறித்து பேசியிருக்கிறார். அதில், "காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று அந்த காலத்தில் பாடி வைத்திருக்கிறார்கள்.. ஆனால் உண்மையை சொல்லப்போனால் 70 சதவீதம் தண்ணீர்தான் நம்முடைய உடம்பில் உள்ளது.. 30 சதவீதம் மட்டுமே தசைகள் உள்ளன..

70 சதவீதமும் ரத்தம், வியர்வை, நிணநீருடன் கலந்துள்ளது தண்ணீர்.. நம்முடைய உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் தண்ணீர் உள்ளது.. இதில் யாராக இருந்தாலும் வயதாக ஆக ஆக, உடம்பிலுள்ள தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும்.. தசைகள் சுருங்கும்... அப்போது உடம்பிலுள்ள மினுமினுப்பு குறைய துவங்கும்.. ஒருவர் இறந்ததுமே மொத்த தண்ணீரும் வற்றிவிடும்.

அசையும் பொருட்களுக்கு ஆயுள் இல்லை

இயற்கையை யாராலுமே வெல்ல முடியாது.. மரணம் என்பது அனைவருக்குமே உறுதி செய்யப்பட்டது.. இந்த உலகில் அசையும் பொருட்கள் அனைத்துமே சாகும்.. அசையாத பாறைகள் போன்றவை சாவதில்லை..

அதனால்தான் பூமியை தவிர மற்ற கோள்களில் மனிதனால் வசிக்க முடிவதில்லை.. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் இருந்திருக்கிறது.. நமக்கு சீனியர் கிரகம் என்பதால் அதுவும் இறந்து போயிருக்கலாம். இயங்கி கொண்டிருக்கிற எல்லாமே இறந்துபோய்விடும்.

வயதாகிவிட்டது

மனிதர்களுக்கும் இதேதான்.. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் வயது ஆகும்போது தளர்ச்சி வரும்.. முன்புபோல் உடற்பயிற்சி செய்ய முடியாது.. நான் ஒருகாலத்தில் ஃபுட்பால், பேஸ்கட்பால், டென்னிஸ் விளையாடி கொண்டேயிருந்தேன்.. இப்போ என்னால் டென்னிஸ் பேட்டையே தூக்க முடியாது.

இன்று எனக்கு வயதாகிவிட்டது.. கன்ட்ரோல் இல்லாததால், என்னால் கார் ஓட்ட முடியவில்லை, என்னால் பிற உயிர்களுக்கு சேதம் ஆகிவிடக்கூடாது.. எனவே சாலை பாதுகாப்பை கருதி கார் ஓட்டுவதையே நிறுத்திவிட்டேன். எனக்கு பார்வை மங்குகிறது.. இதெல்லாம் வயோதிகம்தான்.. பி.சுசீலாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பாடவே முடியவில்லை..
பிரபல காமா பயில்வான்

எங்களுடைய காலத்தில், அதாவது பாகிஸ்தான் பிரிந்து செல்வதற்கு முன்பு காமா பயில்வான் என்ற பிரபலம் இருந்தார்.. இவர் அப்போது உலகப்புகழ் பெற்றவர்... மல்யுத்தத்தில் நம்பர் 1 ஆகவே இருந்தார்..

ஒரு கட்டிலில் 20 பேரை உட்கார வைத்து, அந்த 20 பேருடன் கட்டிலை அப்படியே தூக்குவார்.. இதுதான் அவரது டிரேட் மார்க்.. ஆனால் சாகும்போது எலும்பும் தோலுமாக இறந்தார்.. கட்டிலில் படுக்க வைத்திருந்தபோது, அவரது உடல் அடையாளம் தெரியாமல் ஒட்டிக்கிடந்தது. தினந்தோறும் பயிற்சி எடுத்தவர், குத்துச்சண்டை வீரர்கள் சாப்பாடே விசேஷமாக இருக்கும்..

அம்பானி, அதானி, அமித்ஷா, பில்கேட்ஸ்

அப்படியெல்லாம் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தும், இயற்கையை வெல்ல முடியாது. பணக்காரர்கள் முதல் ஏழை வரை நோய் தாக்கவே செய்யும்.. அதானி, அம்பானி, பில்கேட்ஸ் என்பதால் சளி பிடிக்காதா? வைரஸ் ஒட்டிக்காதா? அமித்ஷாவுக்கு கொரோனா பாதிக்கவில்லையா? இதுதான் இயற்கை.

ஒரு குழந்தை பிறந்ததுமே, அதன் பார்வை அப்போதே திறக்கப்பட்டுவிடுகிறது. எத்தனை நாள் அந்த பார்வை உதவியாகவே வரும்? பிறப்பதற்கு முன்பேயே குழந்தையின் இதயம் வேலை செய்ய துவங்குகிறது.. எவ்வளவு நாள் ஒருவருக்கு இதயம் இயங்கி கொண்டேயிருக்க முடியும்? மனிதன் மட்டுமல்ல, மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த பொருளுமே 100 வருடத்துக்கு மேல் இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+