சிவாஜி அப்படி கேட்டதுமே, மனம் உருகிய ரஜினி.. நடிகர் திலகம் மீது சூப்பர் ஸ்டாருக்கு இப்படியொரு பாசமா?
சென்னை: தான் ஒரு செவாலியே சிவாஜியாகவே இருந்தாலும், தன்னுடைய குடும்பத்தில், திரைப்பட வெளிச்சம் வராமல் பார்த்துக் கொண்டார்.. குடும்பம் வேறு, சினிமா வேறு என்பதில் கடைசி தெளிவுடனும், உறுதியுடனும் இருந்தவர் சிவாஜி கணேசன் என்று கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன். அத்துடன், சிவாஜி குடும்பத்துடன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் அளவுகடந்த பற்று வைத்திருப்பவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
Behindcinema என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த தமிழா தமிழா பாண்டியன், "ஆரம்பத்திலிருந்தே சினிமா நடிகைகளை தங்கள் மகன்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பதில் சிவாஜி கணேசன் உறுதியாக இருந்தார். ஆனால், 1980-ல், சிவாஜி கணேசன் வீட்டில் ஒரு சண்டை நடந்தது..

மூத்த மகன் ராம்குமார், ஒரு நடிகையை திருமணம் செய்வதாக சொல்லவும், சிவாஜி கோபப்பட்டு, துப்பாக்கியை எடுத்து சுடுவதாக பத்திரிகைகளில் செய்திகள் அப்போது வெளியானது.. அதேபோன்ற ஒருநிலைமை 1992ம் ஆண்டிலும் வந்தது.. ஆனால், அந்த நடிகையுடன் நடிக்கக்கூடாது என்று சிவாஜி கட்டளையிட்டார்.. காரணம், நடிப்பு வேறு, குடும்பம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர்..
சிவாஜியின் பிரின்சிபிள்
குடும்பத்துக்குள்ளே நடிப்பு வந்துரக்கூடாது.. நடிப்புக்குள்ளே குடும்பம் போயிரக்கூடாது.. கோடம்பாக்கம் ஸ்டுடியோவை, கோடம்பாக்கத்திலேயே விட்டுட்டு வீட்டுக்கு வந்துடணும். வீட்டுக்குள்ளே கோடம்பாக்கம் வரக்கூடாது என்பதுதான் சிவாஜியின் பாலிஸி... தான் ஒரு செவாலியே சிவாஜியாகவே இருந்தாலும், தன்னுடைய குடும்பத்தில், திரைப்பட வெளிச்சம் வராமல் பார்த்துக் கொண்டார்...
அதேபோல, சிவாஜி மறைவுக்கு பிறகு, அந்த குடும்பம் கடன் தொல்லையில் சிக்கியது. சிவாஜி புரொடக்ஷன்ல நிறைய இழப்பு, வந்தது.. எனவே, இதனை ரஜினியிடம் பிரபு புலம்பியிருக்கிறார். "கவலைப்படாதே, உன் அப்பா எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்.. உனக்கு எவ்வளவு வேணும்? கடன் அடைக்க 200 கோடி போதுமா? என்று கேட்டு அப்படி ரஜினியால் கொடுக்கப்பட்ட கால்ஷீட்தான் சந்திரமுகி.
சிவாஜி மீது ரஜினிகாந்த் மதிப்பு
அப்படி உதவி சிவாஜி புரொடக்ஷனில் கிடைத்த லாபத்தை வைத்துதான், சிவாஜி குடும்பத்துக்கு ஏற்பட்ட கடனை அடைக்கப்பட்டது. அந்தவகையில், சொத்துக்களை எல்லாம் மீட்டு தந்தவர் ரஜினிகாந்த்தான்.
"உச்சநடிகராக உன் அப்பா இருந்தபோது, எந்த ஈகோவும் பார்க்காமல், என்னை கோடம்பாக்கம் செட்டில், வாஞ்சையோடு என்னை தடவிக்கொடுப்பார்" என்று பிரபுவிடம் சொன்னார் ரஜினி.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, சிவாஜியை பாரக்க போனாராம் ரஜினி. அப்போது, "டேய், நான் இறந்தால், என் ஊர்வலத்துல வருவியாடா" என்றாராம்.
அளவுகடந்த பற்று
உடனே ரஜினி, "அப்பா, அப்படியெல்லாம் சொல்லாதீங்க, நீங்கள் 100 வயசு வரை இருப்பீங்க" என்றாராம் ரஜினி. அதற்கு சிவாஜி கணேசன், "இல்லடா, நீ இமயமலை, சிங்கப்பூர் அமெரிக்கான்னு போயிடுவே.. என் சவ ஊர்வலத்துல கலந்துக்கணும்" என்று அன்பாக கட்டளையிட்டார்.. அதனால்தான், சிவாஜி இறந்த ஊர்வலத்தில், கடைசிவரை சென்றார் ரஜினி.
சிவாஜி வீட்டு கடனை ரஜினி அடைத்தற்கான காரணம், சிவாஜி தன்னை முழுமையாக அங்கீகரித்ததுதான். சிவாஜி நினைத்திருந்தால், ரஜினியெல்லாம் நடிக்க லாயக்கில்லை என்று எப்போதோ சொல்லியிருக்கலாம்.. ரஜினி மட்டுமல்ல, கமல், அஜித், விஜய் என யாராக இருந்தாலும், சிவாஜி குடும்பதின் மீது அளவுகடந்த மரியாதை, பற்றினை இன்றும் வைத்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications