போட்டுடைத்த பிரபலம்.. ரயில்வே எஸ்.சி கோட்டாவில் வினு சக்ரவர்த்தி.. வெள்ளந்தியான சில்க் ஸ்மிதா.. வாவ்
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், தவிர, இந்தி படங்கள் வரை சில்க் ஸ்மிதாவால் நடிக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம், அந்த பெண்ணிடம் பந்தா, திமிர் இல்லாததுதான் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பெருமையாக தெரிவித்திருக்கிறார்.
நடிகை சில்க் ஸ்மிதா பற்றி KING 24X7 என்ற சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சில்க் ஸ்மிதாவுக்கு எப்படி சினிமாவில் சான்ஸ் கிடைத்தது என்பது முதல் வினுசக்ரவர்த்தி வரை விரிவாகவே பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

சில்க் வீடு: "கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டர் பக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சில்க் ஸ்மிதா தங்கியிருந்தாங்க.. "மாயா" என்ற பலான பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்தேன். சர்ச்சை செய்திகள் அதில் வெளியாகும்.. புதுமுக நடிகைகள் அரைநிர்வாணமாக போட்டோக்களை தருவார்கள்.. படவாய்ப்புக்காக, 73, 74ம் ஆண்டிலிருந்தே இப்படி போட்டோக்களை தர துவங்கிவிட்டார்கள். நல்ல லாபம் தந்தது இந்த பத்திரிகை.. இதில் 2 பக்கத்துக்கு சில்க் படம் வெளியாகியிருந்தது.
வினுச்சக்ரவர்த்தி பெயர் விஞ்ஞாலன்.. எஸ்சி கோட்டாவில், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்தவர்.. சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டு, வண்டிச்சக்கரம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, நடித்தார்.. அதன் படத்தயாரிப்பாளர் திருப்பூர் மணி.. சிவக்குமாரிடம் கார் டிரைவராக இருந்தவர். இந்த படத்திற்கு கவர்ச்சி நடிகை ஒருவர் தேவைப்பட்டார்.
வினுசக்ரவர்த்தி: எனவே புதுமுகம் தேட ஆரம்பித்தார் வினுசக்கரவர்த்தி. அப்போதுதான், மாயா பத்திரிகையில் வெளியாகியிருந்த சில்க் போட்டோ அவரது பார்வையில் பட்டது. நந்தனத்திலிருந்த மாயா ஆபீஸுக்கு உடனே கிளம்பி வந்துட்டார் வினுசக்ரவர்த்தி.. சில்க் படம் வெளியாகியிருந்த மாயா பத்திரிகையையும் கையோடு கொண்டு வந்திருந்தார்
"இந்த பொண்ணு யாரு? அட்ரஸ் வேண்டும்" என்று என்னிடம் கேட்டார்.. "இந்த போட்டோவை எடுத்தவர் ஜெயமோகன்" என்று சொல்லி, அவரிடம் வினுச்சக்ரவர்த்தியை பேச வைத்தேன். "அந்த பெண்ணின் பெயர் சுஸ்மிதா.. கோடம்பாக்கத்தில் வீடு உள்ளது" என்று ஜெயமோகன் சொன்னார். உடனே நான், வினுசக்ரவர்த்தி, ஜெயமோகன் 3 பேரும் சில்க் ஸ்மிதா வீட்டுக்கு காரில் சென்றோம்.
தெலுங்கு மொழி: அப்போது தமிழ் தெரியாமல் தெலுங்கில்தான் பேசினார் சில்க்.. என்னையும் வினுச்சக்ரவர்த்தியும், சில்க்கிடம் ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார்.. அப்போது சில்க்குக்கு 23 வயசிருக்கும்.. முதல் படத்திலிருந்தே சில்க்குக்கு வெற்றிதான்.
ஒருநாள் வினுச்சக்ரவர்த்தி என்னை கூப்பிட்டு, "நீங்க அறிமுகப்படுத்தின பொண்ணு நடிச்சிட்டு இருக்கு, வந்து பாருங்க" என்று கூப்பிட்டார்.. உடனே அங்கே நான் கிளம்பி சென்றேன்.. நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டோம்.
ரயில்வே குவார்ட்டஸ்: ஆனால், மாயா பத்திரிகையில் போட்டோவை பார்த்துதான், சில்க்கை சினிமாவுக்கு தேர்வு செய்தோம் என்று, வினுச்சக்ரவர்த்தி எந்த இடத்திலுமே சொல்லவேயில்லை. என் பெயரையும் எங்கேயும் சொல்லவில்லை. எனக்கு பேர் வந்துடும் என்பதால், என் பெயரை சொல்லவே இல்லை போலும்.
இதைபற்றி அவரிடம் நான் நான் நேரடியாகவே கேட்டேன். அதற்கு சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால், குரோம்பேட்டையில் ரயில்வே குவார்ட்டஸில் தங்கியிருந்தபோது எனக்கு வீட்டில் விருந்து தந்துள்ளார்.
என்மேல எப்பவுமே சில்க்குக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. "வண்டிச்சக்கரம்" படத்தில் வரும் கேரக்டர் பெயர்தான் சில்க்.. எனக்கு 5 ஆயிரம் ரூபாய் தர வந்தாங்க சில்க்.. எனக்கு பணம் வேண்டாம், சான்ஸ் வேண்டுமானால் வாங்கி தாருங்கள், ஆனால் தெலுங்கு தெரியாது என்றேன்.. பரவாயில்லை என்று சொல்லி எனக்கு 2, 3 முறை படத்தில் சில்க் சான்ஸ் வாங்கி தந்தாங்க.. தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறேன்.. அவருக்கு கணவராகவும், லவ்வராகவும் நடித்திருக்கிறேன்.
வெள்ளந்தி: எங்கே என்னை பார்த்தாலும், என் தோள் மேல கை போட்டுப்பாங்க.. இதை பார்த்து மற்ற நடிகர்கள் ஷாக் ஆவாங்க.. எந்த டிரஸ் தந்தாலும் அதை மறுக்காமல் போட்டுக்கொள்வார் சில்க்.. எந்த பந்தாவும் செய்தில்லை.. அடாவடியான பெண் இல்லை என்பதால்தான், தமிழ், தெலுங்கு, மலையாளம், தவிர, இந்தி படங்கள் வரை சில்க்கால் நடிக்க முடிந்தது. மிகவும் வெள்ளந்தியான பெண் சில்க்" என்றார் பயில்வான் ரங்கநாதன்.
தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சொல்லும்போது, அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் அருமையான கேரக்டரில் நடிச்சிருப்பாங்க.. அதில் சிறப்பான பாவத்தையும் வெளிப்படுத்தியிருந்தாங்க.. எப்பவுமே வறுமை கோட்டுக்கு கீழேயிருந்து வரும் நடிகர்கள், நடிகைகள், சிறந்த பாவத்தை வெளிப்படுத்துவார்கள்.. அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார்கள்.. உணர்ந்து நடிப்பார்கள்.. மேட்டுக்குடியிலிருந்து வருபவர்களுக்குதான் பாவத்தை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications