Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைஞ்சிட்டாரு வேல ராமமூர்த்தி.. பசியால் ரூமில் அடைபட்ட விக்ரம் சுகுமாரன்.. தன்மானக் கலைஞன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் விக்ரம் சுகுமாரன் .. வைராக்கியமும், திறமையும் உள்ளதால், எதையுமே நேருக்கு நேர் பேசிவிடுவதால், பார்ப்பதற்கு வேறு மாதிரி தெரியும்.. ஒருமிகப்பெரிய உயரத்தை தொட வேண்டிய நபர், அதை அடையாமலேயே போய்விட்டார்.. எல்லாமே கூடிவந்த நேரத்தில்தான் இப்படி ஆகிவிட்டது" என்று வேதனை தெரிவித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுபைர்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "நேற்று காலையில் மதுரை சென்றிருக்கிறார் விக்ரம் சுகுமாரன்.. கிளம்பும்போது நெஞ்சு எரிச்சல் வந்துள்ளது.. இதனால் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று இசிஜி செக்கப் செய்ததில், நார்மலாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

Television Vikram Sugumaran Vela Ramamoorthy

பிறகு ரூமுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, இரவு சென்னைக்கு பஸ் ஏறியிருக்கிறார்.. பஸ் ஏறும் முன்னேயே உயிர் பிரிந்துள்ளது.. கனவுடன் அலைந்து கொண்டிருந்த கலைஞன்..

பாலுமகேந்திரா உதவியாளர்

பாலுமகேந்திரா சன் டிவியில் தயாரித்த கதை நேரம் என்ற நிகழ்ச்சியில், முதன்முதலாக உதவியாளராக வந்து சேர்ந்தார் விக்ரம் சுகுமாரன். அந்த சீரியலில் சின்ன சின்ன ரோலில் நடித்திருந்தார்.. பிறகு தனியாக படம் எடுக்க முயற்சி செய்தார்... அதேபோல பாலுமகேந்திராவிடம் இருந்து வெளிவந்த வெற்றிமாறனும், படங்களை எடுக்க முயன்றபோது, இருவருமே நண்பர்களாக இணைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை வெற்றிமாறன் டைரக்ட் செய்தபோது, விக்ரம் சுகுமாரனும் அதில் பணிபுரிந்தார். ஆனால் அந்த படம் நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்கு பிறகுதான் பொல்லாதவன், ஆடுகளம் எடுக்கப்பட்டது..

வெற்றிமாறன் - களம்

வெற்றிமாறன் வடமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் மதுரை பற்றின களம் தெரியாது. எனவே, பரமக்குடியை சேர்ந்த விக்ரம் சுகுமாரன்தான், 2 மாதம் மதுரையிலேயே வீடு எடுத்து தங்கி, சேவல் சண்டைக்கான விவரங்களை சேகரித்தார்.. ஆடுகளம் படத்தில் தனுஷ் செய்த பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி, லுங்கி டான்ஸ், என அத்தனையுமே விக்ரம் சுகுமாரன் செய்து காட்டியதுதான்.. இதை பலமுறை வெற்றிமாறனே சொல்லியிருக்கிறார்.

இதற்கு பிறகுதான் மதயானை கூட்டம் படத்தின் வாய்ப்பு கிடைத்தது.. ஜிவி பிரகாஷ் மூலம்தான் இந்த வாய்ப்பு விக்ரம் சுகுமாரனுக்கு கிடைத்தது.. ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் நடக்கும் விசேஷங்களை அப்படியே பதிவு செய்திருந்தார்.. எழுத்தாளராக இருந்த வேல ராமமூர்த்தியை, அந்த படத்தில் அறிமுகப்படுத்தியதே விக்ரம் சுகுமாரன்தான்.. கலையரசின் கேரக்டருக்கு விக்ரம் சுகுமாரன்தான் டப்பிங் தந்திருப்பார்..

ராவண கோட்டம்

விமர்சன ரீதியாக மதயானை கூட்டம் பேசப்பட்டது. பிறகு மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு சாந்தனு வைத்து, ராவண கோட்டம் என்ற படத்தை எடுத்தார்.. படம் துவங்கியதுமே கொரோனா பிரச்சனை வந்துவிட்டது. மீண்டும் போராட்டத்துக்கு பிறகு படம் ரிலீஸாகி, கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதற்கு பிறகு பெரிய இடைவெளி வந்துவிட்டது. சமீபத்தில் வெளியான மாமன் படத்தை டைரக்ட் செய்ய வேண்டியதே விக்ரம் சுகுமாரன்தான். பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது..

சினிமாவுக்கான எந்த தோரணையும் இல்லாதவர் விக்ரம் சுகுமாரன்.. கடுங் கோபக்காரர்.. இந்த கோபம் மட்டும்தான் அனைவருக்குமே தெரியுமே தவிர, நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தான் அவரது உண்மையான முகம் தெரியும்.. கூழைக்கும்பிடு யாருக்குமே போட மாட்டார்..

மதயானைக்கூட்டம்

மதயானைக்கூட்டம் முடிந்தபிறகு ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்க விரும்பினார்.. ஏற்கனவே வெற்றிமாறன் படத்தில் அந்த நடிகருடன் பழகியதால், அவரையே வைத்து படம் எடுக்க விரும்பினார்.. இதற்காக அந்த நடிகருக்கு சொல்ல போனார்.. நடிகர் வரச்சொல்லியிருந்த நேரத்துக்கு விக்ரம் சுகுமாரன் சென்றுவிட்டார். ஆனால், அந்த பெரிய நடிகர் வரவேயில்லை..

பல மணி நேரமாக காத்திருந்தார். இறுதியில், அந்த நடிகரின் உதவியாளரிடம், நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு கிளம்பிவிட்டேன் என்று சொல்லுங்கள் என கூறி வந்துவிட்டார்.. இப்படி மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்திவிடுவது சினிமாவில் அவருக்கிருந்த பெரிய தடங்கலாகும்.

முன்கோபம் கொண்டவர்

தன்னை யாருமே சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு நிறையவே இருந்தது.. விக்ரம் சுகுமாரன் சிறந்த நடிகரும்கூட.. உடல்நிலை விவகாரத்தில் அக்கறையும் எடுத்துக் கொள்வார்..

எப்போதுமே தன்னை புரமோட் செய்து கொள்ள மாட்டார்.. ஒரு திறமையான கலைஞனுக்கு, புரமோஷன் தேவையில்லை என்று நினைக்கக்கூடியவர்.. தன்னுடைய படைப்புகள் மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பவனே சரியான கலைஞன் என்று நினைக்கக்கூடியவர்.. 4 வருடங்களுக்கு முன்புதான் விக்ரம் சுகுமாரனுக்கு திருமணம் நடந்தது.. லேட்டாகத்தான் திருமணம் நடந்தது.. மனைவி சித்த டாக்டராக இருக்கிறார்.. இவருக்கு சின்ன குழந்தை உள்ளது..

வைராக்கியம், திறமை

விக்ரம் சுகுமாரன் பெரிய பிடிவாதக்காரர்.. பெரிய பசி, வறுமை இருந்தாலும் யாரிடமும் உதவிக்கு போய் நின்றதில்லை.. சாப்பிடுவதற்கு கையில் காசில்லாததால், முதல்நாள் இரவிலிருந்து மறுநாள் வரை ரூமைவிட்டு வெளியே வராமல், இருந்தார்..

வைராக்கியமும், திறமையும் உள்ளதால், எதையுமே நேருக்கு நேர் பேசிவிடுவதால், பாரப்பதற்கு வேறு மாதிரி தெரியும்.. ஒருமிகப்பெரிய உயரத்தை தொட வேண்டிய நபர், அதை அடையாமலேயே போய்விட்டார்.. எல்லாமே கூடிவந்தநேரத்தில்தான் இப்படி ஆகிவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இதனிடையே, மதயானை கூட்டம் திரைப்படத்தில் நடித்த எழுத்தாளர் "வேலராமமூர்த்தி" தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தவர். நான் உண்ணும் சினிமா சோற்றில் ஒவ்வொரு பருக்கையிலும் அவன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. தாங்க முடியாத துயரமாக இருக்கிறது" என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+