வலையில் சிக்கிய "வேடன்".. யாரிந்த பாப் பாடகர்? நெஞ்சில் "அ".. தமிழை அழித்த திராவிட கட்சிகள்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள ரேப் பாடகர் வேடன் என்ற இளைஞருக்கு கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. அதேசமயம் சர்ச்சைகளும் வெடித்துள்ளன.. கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக, புலிப்பல் வைத்திருந்தது தொடர்பாக கைதாகி விடுதலையானவர்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வலியை தன்னுடைய பாடலில் அழுத்தமாக பாடி பதிய வைத்து வருவதால், அரசியலில் இவருக்கு எதிரிகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவரை பற்றி மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர், "வேடனின் கிரேஸ் இன்னும் 5 வருடம்தான் இருக்கும்.. அதற்குள் இந்த கிரேஸை அரசியலாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

Television Vedan Kerala Pop Singer


மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன் இப்படித்தான் சமூக அக்கறையை வெளிப்படுத்தி கொண்டே பாட ஆரம்பித்தார்.. புகழ், பணம் கொட்டியதுமே ஆளே மாறிவிட்டார்.. இதே நிலைமை வேடனுக்கும் 100 சதவீதம் வரும்.. 4 வருடங்களுக்கு முன்பே ஆல்பம் வெளியிட்டு, மோடியையும் எதிர்த்து கருத்துக்களை பாடும் இந்த அறிவுள்ள இளைஞன், கஞ்சா போதையில் விழலாமா?

கஞ்சா போதை புகைப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.. ஆனால், மக்களின் ஆதரவால் அது சிறிய விஷயமாக்கப்பட்டுள்ளது.. வேடனின் சகலத்தையும் முடிவு செய்வதற்காக திட்டமிடப்பட்டாகிவிட்டது.

முதலாளித்துவ கட்சிகள்

எப்போதுமே மக்களுக்காக போராடுகிற போது, முதலாளித்துவத்தில் கட்சி நடத்துகிற எல்லாருமே ஒன்றுசேர்ந்துவிடுவார்கள்.. அதுபோல, கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வலதுசாரி, இடதுசாரி என அனைவருமே வேடனுக்கு எதிரான வியூகத்தை வகுத்து கொண்டிருக்கிறார்கள்.. எப்போது சிக்குவார்? என்று காத்து கிடக்கிறார்கள்..

வேடன் ஒரு இளைஞன்.. தன்னுடைய நேர்மையை நிரூபிக்க வேண்டுமானால், தொடர்ந்து போராட வேண்டும்.. கஞ்சா போட்டுட்டு ரகசிய வாழ்க்கை இருந்தால், நண்பர்கள் சேர்ந்துவிடுவார்கள். பல விட்டில் பூச்சிகள் வந்து விழும்.. பல அழகழகான தேவதைகள் வந்து விழுவார்கள்.. இவைகளில் விழுந்தால், வேடனின் வரலாறு ஒரே நாளில் முடிந்துவிடும்..

வேடனின் மரபணுதான், இத்தனை ஆண்டுகாலம் அவரை தூக்கி வந்துள்ளது.. தெருவில், மேடையில், குளத்தில் பாடி பாடி தன்னுடைய உணர்ச்சியை கொட்டுகிறான். தானே எழுதுகிறான், தானே இசையமைக்கிறான், தானே பாடுகிறான்.. யாரும் வேடனுக்கு சொல்லி தரவில்லை..

தமிழக அரசியலில் வேடன்

வேடனின் அம்மா தமிழ் என்பதால், தமிழக அரசியலுக்கு வேடனை கொண்டு வர முயற்சிப்பதாக சொல்கிறார்கள்.. அப்படி முயற்சித்தால் அது சரிவராது.. கேரளாவுக்குதான் வேடன் சரியாகும்.. மொழிவாரியாக தமிழ்நாட்டில் ஒரு வேடன் உருவாக வேண்டும். தாய்மொழியில்தான் உணர்ச்சியை கொட்டமுடியும்.. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம், மொழியின் அடிவேரில் ஆசிட்டை ஊற்றி அழித்துவிட்டது.

ஆனால், சமூகத்தில் மனிதனாகவே மதிக்காதபோது, தன்னுடைய நெஞ்சில் "அ" என்ற எழுத்தை பச்சை குத்தியிருக்கிறார் வேடன்.. மொழிப்பற்று தானாகவே இருக்கிறது.. தன்னுடைய வலியை, உழைப்பின் வியர்வையை பாடலில் சொல்லி வருகிறான் வேடன்..

வடஅமெரிக்காவில் கரும்பு தோட்டத்துல 20 மணி நேர வேலையை எதிர்த்து கேட்பதற்காக ஒரு கரும்பு ஆலை கண்காணிப்பாளராக வேலை செய்யும், பண்ணை அடிமையின் மகன்தான் பிடல் காஸ்ட்ரோ.. அவருடன் அர்ஜென்டினாவிலிருந்து வந்து சேர்ந்த மருத்துவர்தான் சேகுவேரா.. இவர்கள் 2 பேரும் சேர்ந்து அமெரிக்கா கண்டத்துக்கே ஒரு பெரிய புரட்சியை நடத்தினார்கள்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+