உஷாவை தவிர தொட்டு பேசியதில்லை.. டி. ராஜேந்தரை சினிமாவை விட்டே விரட்ட துடித்த டாப் ஹீரோ.. பிரபலம் நச்
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "டி.ராஜேந்தர் எந்த பாடலாக இருந்தாலும், முதலில் மனசுக்குள்ளேயே கம்போஸ் செய்து கொள்வார்.. நோட்ஸ் எல்லாம் கிடையாது.. அதை அப்படியே பாடி காட்டுவார்..

சாக்கடை தியேட்டர்
ஏழ்மையான சூழ்லில் பிறந்த டி.ராஜேந்தர்.. மாயவரத்தில் தியேட்டரில் படம் பார்க்க காசு இல்லாததால், தியேட்டருக்கு வெளியே சாக்கடை ஓடும் இடத்தில் உட்கார்ந்து கொள்வாராம்.. தியேட்டரில் இருந்து வரும் சத்தத்தை வைத்துதான், சினிமா பாடல்களை கேட்டுள்ளார்.. அந்த அளவுக்கு சினிமா மோகம் அவருக்கு இருந்துள்ளது..
கமல்ஹாசன், அரவிந்த்சாமி போல தனக்கு கணவன்கள் கிடைக்க மாட்டார்களா? என்று பல பெண்கள் ஆசைப்படுவார்கள்.. ஆனால், டி.ராஜேந்தர் படங்கள் வந்தபிறகுதான், ஏழ்மையான சூழ்லில் பிறந்த டி.ராஜேந்தர் போல ஒரு அண்ணன் தனக்கு கிடைக்க மாட்டாரா? என்று பல தங்கைமார்கள் ஏங்கினார்கள்..
ரஜினி, கமல் இருவருக்குமே போட்டியாக இருந்தார்.. ரஜினி மட்டுமே 1 கோடி சம்பளம் வாங்கியபோது, டி.ராஜேந்தரும் அதே நேரத்தில் 1 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார்.. அந்த காலத்திலேயே பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான செட் போடுவார்.. அந்த செட்டுக்காகவே கூட்டம் தியேட்டர்களுக்கு வந்தது..
டிரெண்டிங் டி.ராஜேந்தர்
ரஜினியும், கமலும் கமர்ஷியலில் சக்சஸ் செய்து கொண்டிருந்தபோது, சென்ட்டிமென்ட்டில் டிரெண்டானவர் டி.ராஜேந்தர்.. பேச ஆரம்பித்தால், டி.ராஜேந்தரை போல அவரை மாதிரி பேச ஆள் கிடையாது.. விழா ஒன்றில், அசுர புலி, அசரா புலி, பாயும் புலி என்று சொல்லும்போது, டி.ராஜேந்தரை பார்த்து விஜய்யே கையெடுத்து கும்பிட்டார்..
மற்றொரு விழாவில், தன்னுடைய பெயரை நடிகை தன்ஷிகா சொல்ல மறந்ததால், மேடையிலேயே வெளுத்து வாங்கிவிட்டார்.. சாரி சார் என்று தன்ஷிகா சொன்னபோது, "நீ கட்டிட்டு வரல சாரி, என்கிட்ட கேட்கிறியா ஸாரி" என்று விளாசி தள்ளிவிட்டார்.. இப்படி கோபமாக இருந்தாலும்சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும்சரி அடுக்குமொழிதான் அவருக்கு எல்லாமே..
நிஜத்திலும் ஆண்மகன்
படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும்கூட மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணை தொடாத ஒரு ஆண்மகன் டி.ராஜேந்தர்.. தன்னுடைய கோபத்தைகூட மறைத்து வைக்க தெரியாதவர்.. உடனுக்குடன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்திவிடுவார்.. எந்த இடத்திலுமே செயற்கைத்தனம் இல்லாதவர் டி.ராஜேந்தர்.. அவரிடம் துளியும் செயற்கைத்தனம் இல்லை.. தன்னுடைய வாழ்வியலையே படமாக எடுத்தவர்.. டி.ராஜேந்தரை எப்படியாவது சினிமாவிலிருந்து ஒழிக்கட்டவும் முயற்சி ஒருமுறை நடந்தது..
ஒரு முக்கியமான சினிமா நடிகர், டி.ராஜேந்தரின் வளர்ச்சியை விரும்பவில்லை.. இத்தனைக்கும் அவரது நடிப்புக்கும், டி.ராஜேந்தர் நடிப்புக்கும் சம்பந்தமில்லை.. அந்த நடிகர் என்றில்லை, யாருடைய நடிப்பையும் டி.ராஜேந்தர் நடிப்புடன் ஒப்பிட முடியாது..
டி.ராஜேந்தர் தனி ரகம்.. தன்னிடம் உள்ள திறமையை காட்டி நடித்தவர்.. ஆனால், இவர் மீது அந்த பெரிய காழ்ப்புணர்ச்சி வந்தது.. ஆரம்பத்திலேயே இவரை தடுத்துவிட வேண்டும், முன்னுக்கு வரக்கூடாது என்று தடுத்தார்.. இதற்காக சில முயற்சிகளையும் அப்போது முன்னெடுத்திருந்தார்.. அந்த நடிகரின் பெயரை இப்போது சொல்வது சரியாக இருக்காது..
வீராச்சாமி புகழ்
வீராச்சாமி படம் வந்தபோது, 2K கிட்ஸ்களுக்கு அவரை யாரென்று தெரியவில்லை.. அவரது நடிப்பு, பாட்டுகளை பார்த்துவிட்டு, டி.ராஜேந்தர் யார் என்று கூகுளில் தேட ஆரம்பிச்சிட்டாங்க.. சிம்புவின் அப்பா என்று தெரியும், ஆனால், டி.ராஜேந்தர் யார் என்று 2k கிட்ஸ்களுக்கு தெரியாது.. வீராச்சாமி தான் இதற்கு அடையாளம் காட்டியது.. இப்போது 2K கிட்ஸ்கள்தான் டி.ராஜேந்தரை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications