Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷான்னா உயிரு டி. ராஜேந்தருக்கு.. தாடி எடுக்க சலூன் போனாராம்.. அப்பறம்? கண்ணியமான நபர் T.R: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜா எப்படி 16 வயதினிலே என்ற படத்தில் வேற ஒரு புதுசினிமாவை காண்பித்தாரோ, டிராமா டைப் படஙகளை எப்படி பாலச்சந்தர் தந்தாரோ, சோஷியல் டைப் படங்களை எப்படி ஸ்ரீதர் தந்தாரோ அதுபோல, ரயிலில் கல்லூரி மாணவர்கள் பயணிப்பதை வைத்து படம் எடுப்பதை பார்த்ததுமே மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்படித்தான் டி.ராஜேந்தரின் ஒருதலைராகம் வெற்றி பெற்றது என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.

Media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நடிக்க வரணும்னு எண்ணம் இல்லாமல் டைரக்ட் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர் டி.ராஜேந்தர்.. அப்போதுதான், ஒரு தலை ராகம் படத்தின் அவருக்கு கிடைக்கிறது.. இதற்காக சென்னைக்கு கிளம்ப முடிவு செய்தார்.. அதற்கு முன்பு முகத்துக்கு ஷேவ் செய்து கொள்ளலாம் என்று சலூனுக்கு போக நினைக்கிறார் டி.ராஜேந்தர்.

Television T Rajendar Usha

அப்போது அவரது வீட்டிலுள்ளவர்களே "உனக்கு தாடியெல்லாம் ஒரு கேடா?" என்று கேட்டுள்ளார்கள்.. இப்படி கேட்டது சுருக்னு மனதை குத்துபோலவே டி.ராஜேந்தருக்கு இருந்ததாம்.. அதனால், இந்த தாடியுடனேயே சினிமாவில் ஜெயித்து காட்டுகிறேன், அதற்கு பிறகுதான் தாடி எடுப்பேன் என்று வைராக்கியத்துடன் என்று முடிவெடுத்துள்ளார்.

அதற்கு பிறகு சென்னைக்கு வந்து, தயாரிப்பாளர்களுக்காக எங்கெங்கோ முயற்சிக்கிறார்.. இப்ராஹிம் என்ற தயாரிப்பாளர் கிடைக்கிறார். கிராமத்துக்காரரான இப்ராஹிமுடனேயே கிராமத்தில் தங்கி, கதை சொன்னார்.. அவர் வயல்வெளிக்கு சென்றால், அவருடனேயே சென்று, ஒரு தலைராகம் படத்தின் கதையை சொல்லி , பாடல்களை பாடிக்காட்டியிருக்கிறார் டி.ராஜேந்தர்.

கல்லூரி மாணவர்களின் கதை

இப்ராஹிம் என்பவர் சினிமாவை சார்ந்தவர் கிடையாது,.. அவருக்கு படம் எடுக்க வேண்டிய எண்ணமும் இல்லை. ஆனால், டி.ராஜேந்தர் கதை சொன்ன விதமும், பாட்டு பாடி காட்டிய விதத்தையும் பார்த்துவிட்டு, "உனக்காக படம் எடுக்கிறேன்" என ஒப்புக் கொள்கிறார்.

ஒருவழியாக தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார். இதற்குபிறகு படப்பிடிப்பு துவங்குகிறது. ஆனால், அப்போதிருந்த ஒன்றிரண்டு நடிகர்களை தவிர, நிறைய புதுமுகங்களைதான் நடிக்க வைத்திருந்தார். கல்லூரி மாணவர்கள் ரயிலில் செல்வதை வைத்தே அந்த படத்தை எடுத்திருந்தார். இவரும் அதில் நடித்திருந்தார். ஆனால், இந்த ஒரு தலைராகம் படத்துக்கு வியாபாரமே ஆகவில்லை.. சேது படத்துக்கு வந்த நிலைமைதான் இதற்கும் அப்போது ஏற்பட்டது.

பாரதிராஜா, பாலச்சந்தர், ஸ்ரீதர்

இப்ராஹிம் பெரிய போராட்டத்துக்கு பிறகு, தியேட்டருக்கு கொண்டு வந்தார்.. ஆனால் தியேட்டரில் கூட்டமே வரவில்லை. இதனால் இப்ராஹிம் மனவேதனைக்குள்ளானார்.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில், அந்த படம் பயங்கரமாக பிக்கப் ஆகிவிட்டது.

இதற்கு காரணம், பாரதிராஜா எப்படி 16 வயதினிலே என்ற படத்தில் வேற ஒரு புதுசினிமாவை காண்பித்தாரோ, டிராமா டைப் படங்களை எப்படி பாலச்சந்தர் தந்தாரோ, சோஷியல் டைப் படங்களை எப்படி ஸ்ரீதர் தந்தாரோ அதுபோல, ரயிலில் கல்லூரி மாணவர்கள் பயணிப்பதை வைத்து படம் எடுப்பதை பார்த்ததுமே மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

உயிருள்ளவரை உஷா

அந்த ஒரே படத்தில் பெரிய ஸ்டாராக மாறிவிட்டார் டி.ராஜேந்தர்.. அந்த படத்தில் பூ விக்கிற கேரக்டரில் நடித்திருப்பார் உஷா.. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இன்றுவரை மனைவி உஷா, இலக்கியா, சிலம்பரசன், குறளரசன் என்று குடும்பத்துடன் பிரியமாக வாழ்ந்து வருகிறார் படம் டி.ராஜேந்தர். அதற்கு பிறகு மனைவிக்காகவே உயிருள்ளவரை உஷா என்ற படம் எடுத்தார்.. இன்றுவரை மனைவியுடன் உயிருடன்தான், பாசமுடன்தான் இருக்கிறார் .

கண்ணியம், மரியாதைக்குரியவர் டி.ராஜேந்தர்

எத்தனையோ நடிகர்கள், சினிமாவில் வளர ஆரம்பித்ததுமே பெண்களின் மோகம் அதிகரித்துவிடும். பல விஷயங்கள் சினிமாவில் நடக்கிறது. அதெல்லாம் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், இதுவரை டி.ராஜேந்தர் பற்றி எந்த கிசுகிசுவும் வாழ்க்கையில் வந்ததில்லை.. எந்த பெண்ணுடனும், அவரை இணைத்து பேசப்பட்டதில்லை. டி.ராஜேந்தர் என்றாலே திரைப்பட பெண்களுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. சினிமாவில் மட்டுமல்ல, சமுதாயத்தில் உள்ள பல பெண்களும், டி.ராஜேந்தரை கண்ணியத்துக்குரிய வகையில்தான் பார்க்கிறார்கள்.

ஒழுக்கத்தை கடைப்பிடிக்கக்கூடிய மனிதராக பார்க்கிறார்கள். ஒருசிலருக்கு மட்டும்தான் இப்படி சினிமாவில் பெயர் உண்டு.. சிவக்குமார், மம்முட்டியை அப்படி சொல்லலாம்.. அந்த வரிசையில் டி.ராஜேந்தரும் உள்ளார். உஷா என்ற பத்திரிகையையும் டி.ராஜேந்தர் நடத்தினார்.. ஆனால், இப்போது அந்த பத்திரிகை வருவதில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+