உயில் போலி ஆவணங்கள்..பிரிக்கப்பட்ட சிவாஜி கணேசன் சொத்துக்கள்..மனஉளைச்சலில் ராம்குமார்? பிரபலம் பளிச்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, ஏற்கனவே அவரது மூத்த மகன் ராம்குமாரால்தான் மன உளைச்சல் ஏற்பட்டது.. அதேபோல, சிவாஜி மரணத்துக்கு பிறகும், ராம்குமாரால்தான், அவமானமும், இழப்பும் ஏற்பட்டுள்ளது" என மூத்த பத்திரிகையாளரும், பிரபல நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். அத்துடன் சிவாஜி குடும்ப விவகாரம் குறித்தும் விரிவாக சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
Paper weight யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "சிவாஜி கணேசன் போக் ரோடில் "அன்னை இல்லம்" என்ற மாளிகையை அன்று கட்டினார். இந்த வீட்டில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும், சிவாஜி கணேசன் இறக்கும்வரை ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.. இப்போது அந்த வீட்டில் பிரபு, விக்ரம் பிரபு குடும்பத்தினர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

ராம்குமார், அவரது மகன் துஷ்யந்த், துஷ்யந்த் மனைவி இவர்கள் 3 பேரும் ஒரு நிறுவனத்திடம், 30 சதவீத வட்டிக்கு 3 கோடி ரூபாய் கடன் வாங்கி, ஜெகஜால கில்லாடி படம் எடுத்துள்ளனர்.. பல வருடங்களாகவே இந்த கடனை திருப்பி வழங்காததால், வட்டி சேர்த்து 9 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
பல வாய்ப்புகள் தரப்பட்டன
கடன் கொடுத்தவர்கள், ராம்குமார் தரப்பிடம் எவ்வளவோ பணிந்து சென்றிருக்கிறார்கள்.. ஜெகஜால கில்லாடி படத்தை எங்களிடம் தந்துவிடுங்கள், நாங்கள், அதை ரிலீஸ் செய்து,, அதில் வரும் பணத்தை எடுத்து கொண்டு, மீதத்தை உங்களுக்கு தந்துவிடுகிறோம் என்றார்கள். இதற்கு துஷ்யந்த் தரப்பில் ஒத்துழைப்பு தரவில்லை.
அதேபோல நீதிமன்றமும் பல நேரங்களில் வாய்ப்பு தந்தும், ராம்குமாரும், துஷ்யந்த்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. பண்ணையார் மனநிலைமை போல நடந்து கொண்டிருக்கிறார்கள் ராம்குமாரும், துஷ்யந்த்தும்
உயில் போலி - சொத்துக்கள்
ஏற்கனவே தங்களை 2 சகோதரர்களும் ஏமாற்றிவிட்டதாககூறி 2 சகோதரிகளும் கோர்ட்டுக்கு போனார்கள்.. சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் போலியானது, அது கற்பனையானது, திட்டமிட்டு உயில் செய்யப்பட்டுள்ளது என்று வழக்கு தொடர்ந்தார்கள்.. இறுதியில் 2 சகோதரர்களும், தங்களுடைய 2 சகோதரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மனம் ஒற்றுமையுடன அந்த சொத்துக்களை பிரித்து கொண்டுள்ளனர்.
அதன்படி, ராம்குமாருக்கும், துஷ்யந்துக்கும் சிவாஜி புரடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.. போக்ரோடு பங்களா பிரபு பெயருக்கு ரிஜிஸ்திரர் செய்யப்பட்டுள்ளது.. மற்ற சொத்துக்கள் அவரவர் விருப்பப்படி, மன ஒற்றுமையின் அடிப்படையில் பிரித்து கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், இந்த விஷயம் கோர்ட்டுக்கு தெரியாது.
பிரபுவுக்கு சொந்தமான அன்னை இல்லம்
அன்னை இல்லம் மதிப்பு 88 கோடி ரூபாயாகும்.. அதில் 4-ல் ஒரு பங்கு அதாவது 22 கோடி ரூபாய் ராம்குமாருக்கும் சொந்தம் என்பதால்தான், ஜப்தி உத்தரவு வந்ததும் கடன் கொடுத்தவர்கள் அன்னை இல்லம் சென்றுள்ளனர்.
அங்கே போனபிறகுதான், அன்னை இல்லம் பிரபுவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.., இது சட்டரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.. அன்னை இல்லம் பிரபுக்கு சொந்தமானது என்று ராம்குமாரும் தன்னுடைய அப்பீல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது தான் என்பதற்கான தஸ்தாவேஜூகளையும் கோர்ட்டில் பிரபு தாக்கல் செய்துள்ளார். இதன்காரணமாக ஜப்தியிலிருந்து அன்னை இல்லம் தப்பியிருக்கிறது.
ராம்குமார் தரும் மன உளைச்சல்
தற்போது அப்பீலுக்கு சென்றிருப்பதால், எப்படியும் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது. ஆனாலும், துஷ்யந்த்தும், ராம்குமாரும் பலரிடமும் இதுபோல் கடன் வாங்கியிருக்கிறார்கள்.. யாருக்குமே திருப்பி தரவில்லை போலும்..
சிவாஜிக்கு ஏற்கனவே ராம்குமாரால்தான் மன உளைச்சல் வந்தது. அன்று எம்ஜிஆர் ஆட்சியில் இருந்ததால், சிவாஜி வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு சத்தம், எப்ஐஆர்கூட போடாமல் முடித்து வைக்கப்பட்டது. அதேசமயம், அந்த துப்பாக்கி சூட்டில் யாருமே பாதிக்கப்படவில்லை. சிவாஜி மரணத்துக்கு பிறகும், ராம்குமாரால்தான், அவமானமும், இழப்பும் ஏற்பட்டுள்ளது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications