மூன்று எழுத்து நடிகையுடன் வந்த ஒரே கிசுகிசு! எம்ஜிஆர் மாதிரி விளம்பர ஆசையில்லாதவர் கேப்டன்: பிரபலம்
சென்னை: விஜயகாந்த் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அதை வெளியே விளம்பரப்படுத்தி கொள்ளவில்லை என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் புகழ்ந்து கூறியிருக்கிறார். அத்துடன் விஜயகாந்த் குறித்த மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
TN Voice Now என்ற யூடியூப் சேனலுக்கு காந்தராஜ் தந்திருக்கும் பேட்டியில், "விஜயகாந்த், ராதிகா விவகாரத்தில் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியவில்லை.. ஆனால், ராதிகாவும், விஜயகாந்தும் கல்யாணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் வந்தன. பிறகு இருவரும் திருமணமே செய்து கொண்டதாகவும் பத்திரிகைகளில் தகவல்களும் அடிபட்டன. ஆனாலும் அதை பற்றி அவரும் பேசவில்லை, இவங்களும் பேசவில்லை.

விஜயகாந்த்துடன் நடிக்க பல நடிகைகள் அன்றைய தினம் விரும்பவில்லை.. விஜயகாந்த் கூட மட்டும் என்னை ஜோடியாக போட்டுடாதீங்க என்று ஒரு நடிகை என் காதுபடவே சொன்னார். ஆனால், விஜயகாந்த் பிரபலமானதுமே, அந்த நடிகை இவருடன் சேர்ந்து பல படங்கள் நடித்தார். ஒருகட்டத்தில் இந்த நடிகை, விஜயகாந்திடமே சென்று நடிக்க சான்ஸ் கேட்டாங்க.
சிறிய மீசை: இதற்கு காரணம் விஜயகாந்த்திடம் கவர்ச்சிகரமான தோற்றம் அன்று இல்லை.. முரட்டு தோற்றம் கொண்டவர் விஜயகாந்த்.. அந்த காலத்தில், சிகப்பாகவும், சிறிய மீசையுடனும், சுருட்டை முடியுடனும், லேசான பெண்மைத்தன்மை இருந்தால்தான் சினிமாவில் புகழ்பெற முடியும். இல்லேன்னா கோடம்பாக்கம் பக்கமே வரமுடியாது என்பார்கள்.
இந்தி நடிகர் திலீப்குமாரை இங்கே யாரும் ஏற்கமாட்டார்கள். ஆனால் தேவ் ஆனந்த் என்றால் ஏற்றுக் கொள்வார்கள். இப்படியொரு ஃபார்முலாவை அன்று முதன்முதலில் உடைத்தது ரஜினிகாந்த்தான். கோடம்பாக்கம் இலக்கணத்தையே உடைச்சிட்டு வந்தவர் ரஜினிதான்.. பரட்டை தலை, கருப்பு உருவம் என எந்த சினிமா இலக்கணத்துக்கும் ரஜினி பொருந்தி வரவில்லை.
உச்ச நடிகர்: ஆனாலும் உச்சத்துக்கு வளர்ந்தார். இதனால், ரஜினி கேட்கும் பணத்தை பல தயாரிப்பாளர்களால் தர முடியவில்லை. ரஜினி இல்லாத குறையை தங்கள் படங்களில் ஈடுகட்டவே, விஜயகாந்த்தை கொண்டுவந்தார்கள். சின்ன சின்ன படங்களில் நடித்து உச்சத்துக்கு வந்தார் விஜயகாந்த்.. அரசியலிலும் உயர்ந்தார்.. அவரைபற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வந்ததில்லை.. ஒரே ஒரு கிசுகிசு மட்டுமே வந்தது. அது ராதிகாவோடுதான்.
மற்றபடி எம்ஜிஆர் டெக்னிக்கைதான் விஜயகாந்த்தும் கையிலெடுத்தார்.. தானம் தர்மங்கள் செய்வது, பள்ளிக்கூடம் கட்டித்தருவது, சாப்பாடு, படிப்பு என பல உதவிகளை செய்தார். ஆனால், எம்ஜிஆர் அளவுக்கு விஜயகாந்த் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவில்லை. எம்ஜிஆர் காரில் சென்று கொண்டிருந்தால், ரோட்டில் யாராவது கிழவி வடை சுட்டுட்டு இருந்தால், உடனே வண்டியை விட்டு கீழே இறங்கிடுவார்.
எம்ஜிஆர் பணம்: அந்த கிழவியிடம் வடை வாங்கி சாப்பிட்டுவிட்டு 100 ரூபாய் தருவார்.. மறுநாளே பேப்பரில், "ஏழை தாய்க்கு எம்ஜிஆரின் பரிவு" என்ற தலைப்பில் செய்தி வரும். அதனால்தான் யார் பணம் கொடுத்தாலும், அது எம்ஜிஆர் தந்த பணம் என்று சொல்லுமளவுக்கு நிலைமை அன்று போய்விட்டது. ஆனால், இப்படியெல்லாம் விஜயகாந்த் இல்லை..!!












Click it and Unblock the Notifications