"பிரபல” நடிகைக்கு கிடைத்த வேதனை.. ஒரே நேரத்தில் காதலி, மனைவி, தங்கை, அம்மாவா..?இவங்க அவங்களா?
சென்னை: பொதுவாக யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்றும் அது எப்போது சரிந்து போகும் என்று சொல்ல முடியாது. அது சினிமா வாழ்க்கைக்கு பெரிய எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
ஆரம்பத்தில் பலர் கடை நிலையில் இருந்தாலும் கூட அவர்களுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் திடீரென்று உச்சத்துக்கு வந்து விடுவார்கள்.
இந்த மாதிரி தான் நடிகை செம்மீன் ஷீலாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. நடிகர் எம் ஜி ஆர் காலத்தில் கதாநாயகியாக இருந்தாலும் இப்போதும் பல முக்கியமான கேரக்டரில் நடித்து பிரபலமாக தான் இருந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிய அளவில் ஹிட் அடித்த சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் நாசருக்கு அக்காவாக நடித்த நடிகை தான் செம்மீன் ஷீலா. இவர் அந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் பெரிய அளவில் டெரர் பீஸ் ஆக காட்டப்பட்டாலும் கடைசி நேரத்தில் இவருக்குள் எப்படி ஒரு இளகிய மனமா? என்று ரசிகர்களே வியந்து பார்க்கும் வகையில் இவர் தன்னுடைய நடிப்பை காட்டி இருப்பார்.
இவர் முதல் முதலாக திரை துறையில் அறிமுகமானது நடிகர் எம்ஜிஆர்க்கு ஜோடியாக பாசம் என்ற திரைப்படத்தில் தானாம்.
இவர் கேரளாவில் இருந்து சினிமாவில் எப்படியாவது நடித்து நமக்கும் தனக்கென்று ஒரு பெயரை வாங்கிவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் தான் வந்திருக்கிறார். நடித்த முதல் படமே பெரிய அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்து இருக்கிறது.
அதனால் அதை அடுத்தும் எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதோடு அந்த நேரத்தில் பல நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது கேரளாவில் இருந்து தமிழில் ஒரு நடிகை இவ்வளவு வரவேற்பு பெறுகிறாரா? என்று இவருக்கு ராமண்ணா மலையாளத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இவருடைய திறமை பாராட்டப்பட்டு இருக்கிறது.. பிறகு இவர் அவருடைய சொந்த மண்ணான மலையாளத்திலே ஒரு நடிகையாகவே மாறிவிட்டார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். மற்றபடி மலையாளத்தில் முழு நேரம் நடிகையாக இருந்திருக்கிறார். அப்போது தான் இவருக்கு செம்மீன் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானதால் இவர் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். அந்த படத்திற்காக ஷீலாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இவருக்கு ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் வீட்டில் உள்ளவங்க எல்லாரும் அந்த பக்கமெல்லாம் போக வேண்டாம்னு சொல்லிட்டதால இவர் அந்த வாய்ப்பை விட்டு விட்டாராம். பிறகு அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல நடிகர் பிரேம் நசீருடன் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் செம்மீன் ஷீலா நடித்துக் கொண்டிருந்தாராம். அதுவும் ஒரு படத்தில் காதலியாகவும், இன்னொரு படத்தில் மனைவியாகவும், அதுபோல இன்னொரு படத்தில் தங்கையாகவும், இன்னொரு படத்தில் அம்மா என நான்கு கேரக்டரில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
அதுமட்டுமில்லாமல் இந்த நாலு படத்திற்கான சூட்டிங் கூட சென்னையில் தான் நடந்திருக்கு. அதனால ஒவ்வொரு படத்திற்கும் இரண்டு மணி நேர இடைவெளியில் தான் அந்தந்த படங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். இது உலக அளவில் இல்லாத சாதனையாக கூறப்பட்டிருக்கிறது. அதுபோல பிரேம் நசீருடன் அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்ததால் இவர் உடைய பெயர் கின்னசில் இடம் பெற்று இருக்கிறதாம்.
இத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறாராம். அவருக்கு சினிமாவில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தற்போது சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். அது போல செம்மின் ஷீலா இப்போதும் தேர்ந்தெடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில சீரியல்களில் நடித்துக் கொண்டும் சில ரியாலிட்டி ஷோக்களின் நடுவராகவும் இருந்து வருகிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications