பிரபல நடிகையின் உடம்பெல்லாம் தங்க நகைகள்.. ஆடிப்போன பெங்களூர் ஆபீசர்ஸ்.. ட்விஸ்ட்டு அங்கே தான்
பெங்களூர்: உடம்பெல்லாம் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வந்த பிரபல நடிகையை பார்த்ததுமே, அதிகாரிகள் அதிர்ந்துபோய்விட்டார்கள்.. இதுகுறித்து விசாரிக்க போனபோதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து போலீசார் சொல்வதென்ன? "டிஜிபி" அப்பா சொல்வதென்ன?
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ்.. இவருக்கு 32 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு, நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில், ஹீரோயினாக அறிமுகமானார்..

முதல் படத்திலேயே கன்னட ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த ரன்யா ராவ், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான "வாகா" என்ற படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார்.
உடம்பெல்லாம் தங்க நகைகள்
இந்நிலையில் இவர் நேற்றைய தினம் துபாய் சென்றுவிட்டு, பெங்களூருக்கு விமானத்தில் வந்துள்ளார்.. அப்போது, நடிகை ரன்யா ராவ், தன்னுடைய உடலில் ஏகப்பட்ட நகையை அணிந்து கொண்டு வந்தாராம். இதைப்பார்த்ததுமே அதிர்ந்து போன அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். பிறகு, அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.. அப்போதுதான், ஏராளமான தங்ககட்டிகள் இருப்பது தெரியவந்தது.
அளவுக்கு அதிகமான தங்க நகை
அதுமட்டுமல்ல, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டையும் நடிகை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்த மொத்த நகை, தங்ககட்டி மதிப்பு, கிட்டத்தட்ட 14.80 கிலோ என்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், 14.80 கிலோ தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்திருப்பதும் உறுதியானது.
நடிகை மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட காரணம், கடந்த 15 நாளில் மட்டும், 4 முறை துபாய்க்கு சென்று வந்திருக்கிறார் நடிகை.. இதை அறிந்த அதிகாரிகள், இந்த முறையும் துபாயிலிருந்து நடிகை வந்ததால், அவரிடம் விசாரிக்க முடிவு செய்திருந்தனர்.. ஆனால், உடம்பெல்லாம் நகையுடன் வரவும், இந்த விசாரணை துரிதமாக அவரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்படியொரு ட்விஸ்ட்
எனினும் நடிகை ரன்யா ராவ் மட்டுமே இந்த கடத்தலில் ஈடுபட வாய்ப்பில்லை என்றும், இதன் பின்னணியில் நிறைய நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் நடிகை கொண்டுவரப்பட்டுள்ளார்.
இதில் ட்விஸ்ட் என்னவென்றால், நடிகை ரன்யா ராவின் அப்பா, ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார்.. கர்நாடகாவில் ஏடிஜிபி-யாகவும் பணியாற்றி வருகிறாராம்..!!
துணிகளுக்குள்ளும் தங்கம்
கோடிக்கணக்கான நகைகளை நடிகை அணிந்தும், துணிகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்தும் கடத்தி வந்துள்ளார். இவர் சோதனைகளில் இருந்து தப்பிக்க சில அதிகாரிகள் மூலம் முயற்சி செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்தபோது, தன்னை கர்நாடகா டிஜிபியின் மகள் என்று கூறி, போலீஸாரை காவலுக்கு வரும்படியும் சொல்லி உள்ளார். அதனால்தான், இந்தக் கடத்தலில் இவருக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்கும் என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
ஆனால், டிஜிபி அப்பா இதுகுறித்து சொல்லும்போது, ""ரான்யா ராவின் திருமணத்திற்கு பின்பு அவருக்கும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் கணவர் என்ன செய்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. இப்போது ரான்யா குறித்து கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது. அவர் தவறு செய்திருப்பது உறுதியானால் சட்டம் தன் கடமையை செய்யும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications