அந்தப்புரம் அம்பலம்.. நடிகை ராதாவின் 2 "ரோல்மாடல்" ஹீரோயின் இவர்கள்தான்: பிரபலம் பளிச்
சென்னை: கேரளா மாநிலத்திலேயே மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பமாக அம்பிகா, ராதா குடும்பங்கள் விளங்கி கொண்டிருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.. அத்துடன், நடிகை ராதாவின் தொழில் வளர்ச்சி, சுபாவம் குறித்து பேட்டி ஒன்றில் விரிவாகவே கூறியிருக்கிறார்.
Benindcinema என்ற யூடியூப் சேனலுக்கு, சமீபத்தில் பேட்டி தந்திருந்த பாண்டியன் கூறும்போது, "திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள கல்லாறு என்பதுதான் ராதாவின் சொந்த கிராமம். மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சி பேச்சாளராக இருந்தார் அம்பிகா, ராதாவின் அம்மா சரசம்மா.

பாரதிராஜா வைத்த பிஆர்ஓ
உதய சந்திரிகா என்பது ராதாவின் நிஜப்பெயர். பாரதிராஜாதான் இந்த பெயரை மாற்றி வைத்தார். பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த சித்ரா லட்சுமணன்தான், ராதாவுக்கு கடைசிவரை மேனேஜர், பிஆர்ஓ. உள்ளிட்டவை எல்லாம்.. தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே ராதா இருக்க வேண்டும், வெளியேறிவிட வேண்டாம் என்பதற்காக, தன்னுடைய உதவியாளரை அனுப்பி, கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாரதிராஜா.
அலைகள் ஓய்வதில்லை படம் வெற்றி பெற்றதுமே, நிறைய வாய்ப்புகள் வந்தன ராதாவுக்கு.,. 10 வருஷத்தில் 100 படங்களை நடித்து முடித்துவிட்டார் ராதா. தத்ரூபமான நடிப்பு, இயற்கையான முக அமைப்பு இதுதான் ராதாவை முன்னணியில் வைத்திருந்த 10 வருடம் ரகசியம்... சரசம்மாவின் ரகசியம் என்னவென்றால், ஹிட்டு பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களை எப்போதுமே நெருக்கமாக வைத்திருந்தார்.
2 ரோல் மாடல் நடிகைகள்
அரசியலில் ஜெயலலிதாவும், சினிமாவில் ஸ்ரீபிரியாவும்தான் ராதாவுக்கு ரோல் மாடல்கள் என்று அடிக்கடி சொல்வாராம் ராதா.. அதேபோல, அக்கா அம்பிகா இல்லாவிட்டால், ராதா இந்த உயரத்தை தொட்டிருக்க முடியாது.. அவர் தனக்கு இன்னொரு அம்மா என்று பலமுறை நன்றியுடன் சொல்லி உள்ளார்.. காரணம், சினிமாவின் நுணுக்கங்களை ராதாவுக்கு கற்றுத்தந்தவர் அம்பிகாதான். அந்தவகையில், ராதாவின் வளர்ச்சிக்கு பின்னால் அம்பிகாவின் ஆலோசனைகள்தான் முக்கிய காரணங்களாக அமைந்தன.
அதேபோல சில கிசுகிசுக்களும் அந்த காலத்தில் வலம் வந்தன.. குறிப்பாக, கார்த்திக்குடன் காதல் ஏற்பட்டு, ஓடிப்போக போவதாகவும, உடனே ராதாவின் அம்மா, உன்னுடைய உயரம் தெரியாமல் இப்படி செய்கிறாய்? என்று சொல்லி அட்வைஸ் தந்ததாகவும் சொல்வார்கள். பிறகு, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காதல் என்றார்கள்.. ஆனால், தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை பாலைய்யாவுக்கும், சிரஞ்சிவிக்கும் ராதாவுக்காகவே சண்டை வரும்.. ஏனென்றால் ராதா நடித்தாலே அந்த படம் ஹிட்டாயிடும்.
5 ஸ்டார் ஓட்டல்கள்
1991-ல் ராஜசேகர் என்ற நாயரை திருமணம் செய்தார் ராதா.. பிறகு மிகப்பெரிய தொழிலதிபராக மாறிவிட்டார்.. 5 ஸ்டார் ஓட்டல்கள் மட்டுமே 5 வைத்திருக்கிறார் ராதா.. அதில், 'உதய் சமுத்திரா' என்ற 5 நட்சத்திர ஓட்டல், UD Shoot என்ற ஏர்போர்ட் பக்கத்திலேயே நட்சத்திர ஓட்டல் உள்ளது. மோடி, ராகுல் என தேசிய தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இங்குதான் தங்குவார்கள்.
இப்படி தியேட்டர்கள், ஓட்டல்கள், சினிமா, திருமண மண்டபம், பள்ளிகள், சென்னையில் ஏஆர்எஸ் ஸ்டுடியோ, அதுபோலவே கேரளாவிலும் ஏஆர்எஸ் ஸ்டுடியோ என பல்லாயிரக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார். பாரதிராஜாவின் சினிமா கேரியர், பெற்ற பிள்ளை மனோஜிடம் கூட போய் சேரவில்லை.. ஆனால், இன்று ராதா பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரி" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications