பிரபல நடிகை சென்னை திருமங்கலம் லாட்ஜில் செய்த காரியம்! இப்ப கைதாகி அசிங்கப்பட்டு.. பாவம் அந்த சிறுமி
சென்னை: சினிமாவில் நடிக்க வைப்பதாக, 14 வயது சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர் பிரபல கேரள நடிகை மினு முனீர்.. இந்த சம்பவம் நடந்து 10 வருடமாகிவிட்டது.. சம்பந்தப்பட்ட பெண், நடிகையின் உறவுக்கார பெண்ணும்கூட.. ஆனால், நடிகை செய்த காரியம் அம்பலப்பட்டு, இன்று கைதாகி ஜெயிலில் உள்ளார்.. இவரிடம் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. பிரபல நடிகை கைதாகி உள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியை சேர்ந்தவர் மினு முனீர் என்ற மினு குரியன்... இவருக்கு தற்போது 52 வயதாகிறது.. கடந்த 2008ல் கேரள சீரியலில் அறிமுகமானவர்..

சீரியல்களில் கிடைத்த புகழை கொண்டு, சினிமாவிலும் என்ட்ரி தந்தார்.. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு அதாவது 10 வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய உறவினர் மகளான 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக நடிகை முனீர் சொல்லி உள்ளார்.. இவரது ஆசைவார்த்தையை நம்பிய அந்த சிறுமியும், சினிமாவில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.. பிறகு அந்த சிறுமியை கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த நடிகை முனீர், லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்துள்ளார்.
பாலியல் சீண்டல்கள்
அப்போது அந்த சிறுமியிடம் 4 பேர் பாலியல் சீண்டலில் தவறாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமி, அங்கிருந்து தப்பித்து கேரளாவுக்கு சென்றுவிட்டார்...
இதற்கு பிறகுதான் கேரளா அரசு சார்பில், ஹேமா கமிட்டி ஏற்படுத்துப்பட்டு, திரைப்படத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விசாரணையை கையில் எடுத்தது..
இந்த கமிட்டி அமைத்தபிறகு, ஏராளமான நடிகைகள் உள்ளிட்ட சினிமாவில் பணிபுரியும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து புகார்களை தர ஆரம்பித்தனர்.. அந்தவகையில், அன்று பாதிக்கப்பட்ட சிறுமியும் கடந்த வருடம் கேரளா போலீசில் புகார் ஒன்றை தந்திருந்தார். தற்போது 24 வயதான அந்த பெண்ணின் புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..
ரயிலில் வந்த நடிகை
எனினும், சிறுமி அன்று பாதிக்கப்பட்ட இடம், சென்னை திருமங்கலம் என்பதால் இந்த வழக்கை கேரள போலீசார் திருமங்கலம் போலீசாருக்கு பரிந்துரை செய்து மாற்றினர்.
இதையடுத்து திருமங்கலம் மகளிர் போலீசார் இதுகுறித்த விசாரணையை நடத்தியதுடன், கடந்த மார்ச் மாதம் நடிகை முனீர் மீது போக்சோ வழக்கையும் பதிவு செய்தனர்.. தற்போது, திருமங்கலம் போலீசார், நேரடியாக கேரளாவுக்கே சென்று நடிகை முனீரை அதிரடியாக கைது செய்துள்ளனர்..
4 பேர் யார்
பிறகு அவரை ரயில் மூலம் நேற்று சென்னை திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. 10 வருடம் முன்பு சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் தொடர்பாக நடிகையிடம் விசாரணையையும் துவங்கியிருக்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, திருமங்கலம் லாட்ஜில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 4 பேர் யார் என்ற லிஸ்ட்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.. எனவே அந்த 4 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் திருமங்கலம் போலீசார் இறங்கி உள்ளனர்.
கட்டிப்பிடித்த 2 பேர்
சினிமா ஆசை காட்டி சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்ததுமே, 5 பேரிடம் சிறுமியை அறிமுகம் செய்து வைத்தாராம் நடிகை முனீர்.. அப்போது அங்கிருந்த 4 பேரில் 2 பேர், சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது. இதற்கு பிறகுதான் சிறுமி அங்கிருந்து தப்பி கேரளாவுக்கு சென்றுள்ளார்..
ஆனால், அப்போது முதல் இதை பற்றி யாரிடமும் பயந்து சிறுமி சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.. தற்போது 24 வயதாகும் அப்பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. தன்னுடைய கணவர், மற்றும் குடும்பத்தினரின் அனுமதியை பெற்று, கடந்த வருடம் நடிகை முனீர் மீது புகாரை தந்தார்..
அதற்கு பிறகுதான் தற்போது கைதாகி உள்ளார் நடிகை.. நேற்றும், இன்று 2வது நாளாகவும் நடிகையிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விவரங்களை நடிகையிடம் பெற்று வருகின்றனர் போலீசார்.
இந்த நடிகை யார் தெரியுமா?
கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, கேரள திரையுலகையே அதிர வைத்துவிட்டது. அதன் பிறகு பல நடிகைகள் பாலியல் புகார்களை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது முன்வைத்தனர். நடிகர் முகேஷ், மணியன்பிள்ள ராஜூ , இடவேல பாபு, ஜெயசூர்யா என 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மினு முனீர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications