Coolie: கூலி படம் பார்க்க போனேன்! பக்கத்துல சிவாஜி ஆவி இருந்துச்சு! ரஜினி ரசிகர் வெறித்தனம்
சென்னை: கூலி திரைப்படத்தை சிவாஜி கணேசனே ஆவியாக வந்து பார்த்தார் என ரசிகர் ஒருவர் கூறியது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் கூறிய விமர்சனம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளே வந்து படம் பார்க்க ஆவியா உக்காந்துனு இருந்தாரு. நான் ஒரு ஷோ பார்த்துட்டு போறேன்ப்பான்னு! சிவாஜியே கால்ல விழுந்துட்டாருங்க.

பனை மரத்துல நுங்கு, தலைவனை எதிர்த்தால் சங்கு, அவர்கிட்ட கேக்காத பங்கு, இதெல்லாம் சமூகவலைதளங்களில் பரப்புவாங்க ஐடி விங்! இடியும் மின்னலும் தலைவன் பேரை கேட்டவுடன்தான் ஊருக்குள் வரும் போகும். ஆக்ஷனில் நெருப்பு பறக்கும்.
ப்ரூஸ்லி
ப்ரூஸ்லி வந்து காலில் விழுறாருனு சொல்லிட்டேனே. அந்தளவுக்கு ஆக்ஷன் இருக்கு. இது கோயில் கும்பாபிஷேகம், படமில்லை. முதல் பாதியும் இரண்டாவது பாதியும் சரி தலைவர் மிரட்டிட்டாரு! ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மெசேஜ் சொல்றாரு! அந்த மெசேஜ் போற ரீசன் வந்து உடம்பெல்லாம் புல்லரிக்குது!
2 ரூபாய் பீடி பிடித்து
இப்பவும் 2 ரூபாய் பீடியை பிடித்து ஒன்றரை கோடி அடிச்சிட்டாரு! தலைவர் perform
ஆயிரம் கோடி ரூபாய் வசூல் confirm
ரைமிங்காக சொன்ன ரசிகர்
இனி தீபாவளி இல்லை, பாபாவளி, பிள்ளையார் சதுர்த்தி இல்லை, ரஜினி சதுர்த்தி என ரசிகர் ஒருவர் ஆஹோ ஓஹோ என பாராட்டிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

171 ஆவது படம்
இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் காலை வெளியாகியுள்ளது. இது ரஜினியின் 171 ஆவது படமாகும். ஜெயிலர் படத்தில் கூட மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகம் உள்ளிட்டோருடன் ரஜினி நடித்திருந்தார்.
கூலி படத்திலும் இப்படித்தான்
அது போல் கூலி படத்திலும் பல்வேறு ஸ்டார்களுடன் அவர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. முதல் பாதி ஸ்லோவாக செல்வதால் சுமாராக இருப்பதாகவும் பிற்பாதி விறுவிறுப்பாகவும் செல்வதாக சொல்லப்படுகிறது.
கதை என்ன
சென்னையில் மேன்சன் நடத்தி வருகிறார் தேவா (ரஜினி). இவரது நண்பர் சத்யராஜ் இறந்ததாக தகவல் வருகிறது. அவரது மகள் ப்ரீத்தி (ஸ்ருதி) மற்றும் அவரது சகோதரிகளை பார்க்க ஹைதராபாத் செல்கிறார் தேவா. அங்கு சென்ற போதுதான் நண்பர் சத்யராஜை யாரோ கொலை செய்துள்ளார்கள் என தெரியவருகிறது. அவரை கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார் தேவா.
கூலி விமர்சனம் (Coolie Review)
இறுதியில் சத்யராஜை யார் கொலை செய்தார்கள். எதற்கா கொலை செய்தார்கள், அவர்களை ரஜினி பழிவாங்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ரஜினி ஆக்ஷனில் மாஸ் கிளப்பியிருக்கிறார். சவுபினின் நடிப்பு பெரிய பலமாக இருக்கிறது. சத்யராஜ் தனது நடிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் கொல்லு சபா மாறன், காளி வெங்கட், சார்லி, ரெபா மோனிகா, மோனிஷா பிளஸ்ஸி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications